பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D. சAத்துவம்பற்றிய சோதனைகள் குழலின் உச்சியிலிருந்து தக்கை வரையில் 1 மீட்டர் தூரம் இருக்குமாறு கயிற்றினை இழுத் திடுக. கண்ணுடிக் குழலை இறுகப் பற்றிக் கொண்டு உங்களுடைய தலைக்குமேல் ஒரு சிறிய வட்டத்தில் சுழலுமாறு ஊசலாட்டுக; இதல்ை இரப்பர் அடைப்பான் ஒரு கிடைமட்ட வட்டத்தில் இயங்குகின்றது; இரும்பு வளையங் களின்மேலுள்ள கவர்ச்சி ஆற்றலின் விசை, அடைப்பான் ஒரு கிடைமட்ட வட்டத்தில் இயங்கிக்கொண்டிருப்பதற்குத் தேவையான கிடை மட்ட விசையினை அளிக்கின்றது. இயக் கம் ஒழுங்காக இருக்கின்றதா என்பதைச் சரி பார்க்கவும், பல்வேறுபட்ட எண்ணிக்கையுள்ள வளையங்கள் தூக்கியினின்றும் தொங்கவிடப் பெறும்பொழுது 1 மீட்டர் ஆழமுள்ள பாதை யில் உடல் இயங்குமாறு வைப்பதற்குத் தேவை யான சுற்றின் அதிர்வு-எண்ணேப் பதிவு செய் வதற்கும் ஒரு சிறிய முதலைக் கவ்வியைப் (Alligator clip) Lusitu(533,15. F என்ற அதிர்வு-எண்ணே மாருத நிலையில் வைத்துக்கொண்டு, F = m 4 f R என்ற உறவுகூட சோதிக்கப்பெறுதல் கூடும். இஃது ஓரளவு சிறிது அதிகமான சங்கடத்தைத் தரு கின்றது; ஆனல், ஒரு பொருத்தமான எளிய ஊசலி இரண்டு சோதனைகளிலும் குறிப்பாகத் துணை செய்கின்றது. D. சடத்துவம்பற்றிய சோதனைகள் 1. ஒரு புட்டியும் கோலியும் : ஓர் அகன்ற வாயுள்ள ஒரு புட்டியினுள் சிறி தளவு மணலைப் போடுக. சுமார் 5 செ. மீ. சதுரமுள்ள ஓர் அட்டைத் துண்டினைப் புட்டி யின் வாயின்மீது வைத்திடுக. கோலியை அட்டையின்மீது அமைத்து, அதன் பிறகு அட்டையின் விளிம்பினைத் தட்டுக. இச் சோதனை வெற்றியடைவதற்குச் சிறிதளவு ப யி ற் சி தேவைப்படலாம் ; அப்பொழுது அட்டை இயக்க நிலையில் அமைக்கப்பெற்றுப் பறந்து செல்லும்; ஆளுல் கோலியின் சடத் துவம் அதனைப் புட்டியினுள் விழும்படிச் செய் கின்றது. 2. சடத்துவத்தின் துணையால் ஆணியைச் செலுத் தல் : ஒரு மேசையின் விளிம்பின்மீது ஒரு மெல் லிய பலகையை நீட்டி, யாரையாவது ஒரு வரை மேசையின்மீது நிற்கச்செய்து பலகை யைத் தாங்குமாறு அமைக்க. மேசையில்ை தாங்கப்பெருத பலகையினுள் அதன் ஓரத்தரு கில் ஒர் ஆணியை அறைய முயலுக. அடுத்து, யாரையாவது ஒருவரைப் பலகையின் அடியில் ஒரு சுத்தி அல்லது கல்லைப் பிடித்துக் கொள்ளச் செய்க. எடையின் சடத்துவத்தின் காரணமாக இப்பொழுது ஆணியை அறைவது எளிதாக உள்ளது என்பதை உற்றுநோக்குக. 3. சடத்துவத்திளுல் ஒர் ஆப்பிள் இரு பகுதிகளாக வெட்டுக! ஒரு செதுக்கும் கத்தி போன்ற ஒரு நீண்ட கூரிய கத்தியைக் கைவசப்படுத்துக. கத்தி யினுல் ஆப்பிளின் இரு பகுதிகளையும் கத்தி யோடு சேர்த்து எடுக்கும்படி அதனுள் வெட் டுக. கத்தியின் நுனிப்பகுதி அதன்மீது தட்டு வதற்குப் போதுமான நீளம் உள்ளதா என் பதை உறுதி செய்துகொள்க. இப்பொழுது ஒரு கையில் ஆப்பிள் பழத்தையும் கத்தியையும் உறுதியாகப் பிடித்துக்கொண்டு ஒரு குச்சியால் கத்தியின் நுனியை வேகமாகத் தாக்குக. ஆப்பிள் பழத்தின் சடத்துவத்தின் காரண மாகக் கத்தி பழத்தினுடே இயங்கிச் செல்லும். 4. ஒரு கைக்குட்டையையும் கு வ ள ைய யு ம் கொண்டு சடத்துவம் : பழத்தை மழமழப்பான ஒரு மேசையின்மீது ஒரு கைக் குட்டையை விரித்திடுக. கைக்குட்டையின் ஒரு மூலையருகில் நீரால் நிரம்பியுள்ள ஒரு குவளையை (Tumbler) வைத்திடுக. கைக்குட் டையின் எதிர் முனையை உயர்த்தி அதனைச் சுண்டி இழுக்க. இப்பொழுது குவளை அப் படியே நிற்கும்; நீர் சிதருது. - 5. புத்தகக் குவியலில் சடத்துவம்: ஒரு புத்தகக் குவியலை அமைத்திடுக. குவிய லின் அடிமட்டத்திலுள்ள ஒரு புத்தகத்தை 168