பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறுகப்பற்றிக்கொண்டு வேகமாகக் குலுக்குக. உச்சிவரையில் குவியல் முழுவதையும் நிலை குலையாமல் அப்புத்தகத்தை உ ங் க ள | ல் அகற்றக் கூடுமா ? 6. சடத்துவத்தைக்கொண்டு ஒரு கு ச் சி ைய உடைத்திடுக : 18 லிருந்து 20 செ. மீ. நீளமுள்ள ஒரு சிறிய குச்சியைக் கைவசப்படுத்துக. எந்தக் குச்சியும் கிடைக்காவிட்டால் காகிதப் பென்சில் ஒன்று இதற்குப் போதுமானது. ஒரு செய்தித்தாளை மடித்து அதனை ஒரு மேசையின் விளிம்பருகில் வைத்திடுக. மேசையின்மீது செய்தித்தாளுக்கு அடியில் அக்குச்சியை வைத்திடுக; கிட்டத்தட் டக் குச்சியின் பாதி அளவு ஓரத்திற்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கட்டும். வேருெரு குச்சி யினுல் இக்குச்சியை வேகமாகத் தாக்குக. சடத்துவத்துவம் மேசையின்மீதுள்ள குச்சி இரண்டு ப. கு தி க ளா க உடையக் காரண மாகின்றது. 7. மண்வெட்டியைக்கொண்டு சடத்துவம் : ஒரு மண்வெட்டி நிறைய உலர்ந்த மண் ணேத் தோண்டி எடுத்திடுக. அந்த மண்ணை அப்பால் தூக்கி எறிந்திடுக. மண்வெட்டி நிற் கும்பொழுது சடத்துவத்தின் காரணமாக மண் பறந்து செல்வதை உற்றுநோக்குக. 8. ஒரு மிதிவண்டியின்மீது சடத்துவம் : உங்கள் மிதிவண்டியைச் செலுத்தி, பின்னர் விரைவாக வண்டியை நிறுத்தும் சாதனத்தை (Brake) இயக்குக. உங்களுடைய உடல் இயக்க நிலையில் இருக்கும் போக்கையும் கைப்பிடிச் சட்டங்கள் வரை தூக்கியெறியப்பெறுதலையும் நீங்கள் உற்றுநோக்குங்கள். இஃது உங்கள் உடலின் சடத்துவத்தினுல் நேரிடும் விளை வாகும். - - • * . . - XXII D. சடத்துவம்பற்றிய சோதனைகள் 9. ஒரு காரில் சடத்துவம்: நீங்கள் ஒரு காரைக் கடவிச் செல்லும் பொழுது அது திடீரென நிறுத்தப்பெறுங்கால் 8-வது சோதனையிலுள்ள விளைவைப்போன்ற அதே விளைவினையே நீங்கள் உற்றுநோக்குதல் கூடும். நீங்கள் இருப்பிடத்தினின்றும் நழுவி விழாமலிருப்பதற்கு உடலுக்கு வலுவூட்ட வேண்டிய நிலையிலிருப்பீர்கள். உங்கள் உடல் காருடன் இயக்கநிலையிலுள்ளது; கார் நிறுத்தப் பெற்ற பிறகும் அஃது இயக்க நிலையினையே நாடி நிற்கின்றது. நீங்கள் உட்கார்ந்திருக்கும் அமைதி நிலையி யிலுள்ள ஒரு கார் திடீரென்று புறப்படுவதற்கு இயக்கப்பெறும்பொழுது, ச ட த் துவ த் தி ன் காரணமாக நீங்கள் பின்ளுேக்கித் தூக்கியெறி யப்பெறுவதை உற்றுநோக்குக. உங்கள் உடல் அமைதி நிலையிலுள்ளது; கார் புறப்படு வதற்கு இயக்கப்பெறும்பொழுதும் அஃது அமைதி நிலையினையே நாடி நிற்கின்றது. 10. ஒரு கல்லைக்கொண்டு சடத்துவம் : இந்தச் சோதனைக்குக் கிட்டத்தட்ட 1 கிலோ கிராம் எடையுள்ள கல்லொன்று உங்கட்குத் தேவைப்படும். ஒரு பளுவான கயிருென்றினைக் கல்லச் சுற்றிக் கட்டுக. இப்பொழுது கல் வின் எதிர்ப் பக்கங்களில் அரை மீட்டர் நீளங் களுள்ள மெல்லிய கயிற்றினை இணைத்திடுக. கல் தொங்கவிடப்பெறும்பொழுது மெல்லிய கயிறு அக்கல்லைத் தாங்குவதற்குப் போதுமோ போதாதோ என்ற அளவு பலமுடையதாக இருத்தல்வேண்டும். அடுத்து, ஒரு மேசையின் மேற்பரப்புக்குமேல் அக்கல்லைத் தொங்கவிடுக. பாறை மேசையின்மீது தாக்குங்கால் அதன் மேற்புறம் வடுவுருமலிருப்பதற்குக் கல்லின் அடிப்புறத்தில் மேசையின் மீது ஒரு பலகையை வைத்திடுக. கயிற்றின் கீழ்முனையை உறுதி யாகப் பிடித்துக்கொண்டு வேகமாகக் குலுக்குக. இச் சோதனை வெற்றியடைந்தால், கீழுள்ள கயிறு அறுந்து அக்கல்லைத் தொங்கும் நிலையி லேயே விட்டுவிடும். கல்லின் சடத்துவம் இதனை விளைவித்தது. இப்பொழுது எஞ்சி யுள்ள கீழ்க் கயிற்றினைப் பிடித்துக் கொண்டு ஒரே நிலையாக இழுத்திடுக. இப்பொழுது மேலுள்ள கயிறு அறுந்து கல் மேசையின்மீது 169