பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B. aaớa sa டிக் குழலைக்கொண்ட ஓர் ஒரு துளை இரப்பர் அடைப்பானைப் பொருத்துக. குமிழினுள் அடைப்பான் காற்றுப் புகா நிலையில் பொருந்தி யிருத்தல் வேண்டும் இணைப்பில் ஒரு மெழுகு வத்தியினின்றும் சிறிது மெழுகினச் சொட்ட விட்டு அடைப்பான நன்கு அடைத்துவிட லாம். விளக்கப் படத்தில் காட்டப்பெற்றுள்ள வாறு மரத்தினின்றும் ஒரு தாங்கியை உங்கள் வெப்பமானிக்கு அமைத்திடுக. குழலுக்குப் பின்புறத்தில் ஒரு துண்டுக் காகிதத்தை ஓர் அளவு கோலாக ஒட்டுக. குழலின் கீழ் முனையை மையினுல் நிறமூட்டப்பெற்ற நீருள்ள ஒரு சிறு புட்டியில் வைத்திடுக. வெப்பமானியி லுள்ள சிறிதளவு காற்றினை வெளியேற்று வதற்கு அதனே இலேசாகச் சூடாக்குக. குமிழ், அறையின் வெப்பநிலைக்குக் குளிரும்பொழுது நிறமூட்டப்பெற்ற நீர் கிட்டத்தட்டக் குழலின் பாதியளவு உயரம்வரை ஏறுவதற்குப் போது மான காற்றினை வெளியேற்றுக. உங்கள் அளவுகோலின அமைத்திடுவதற்கு வெப்பமானி ஓர் அறையில் பல மணி நேரம் அப்படியே நிற்கட்டும். குமிழின் அருகில் மற் ருெரு வெப்பமாணியை வைத்துக்கொள்க. நீர் மட்டத்தில் தாளின்மீது ஒரு கோட்டினை வரைக; இந்த இடத்தில் வெப்பமானியின் அள விளக் குறித்திடுக. அடுத்து, உங்கள் வெப்ப மானியை ஒரு வெது வெதுப்பான இடத்திற் குக் கொண்டு சென்று அங்கு ஒரு மணி ந்ேதும் அப்படியே இருக்கும்படி செய்க; குமிழின் அரு கில் மற்ருெரு வெப்பமானியும் முன்னிருந்த படியே இருக்கட்டும். நீர் மட்டத்தையும் வெப்ப நிலையையும் குறித்துக்கொள்க. மீண் டும் அதனை ஒரு குளிர்ந்த இடத்திற்குக் கொண்டு சென்று மீண்டும் நீர் மட்டத்தையும் வெப்ப நிலையையும் குறித்துக்கொள்க. இந்தக் குறிகளுக்கு இடையேயுள்ள இடத்தைச் சமப் பிரிவுகளாகப் பிரித்து அவற்றிற்கு இசைந்த வெப்ப நிலைகளைக் குறித்திடுக. 3. வெப்பமானி எங்ங்ணம் செயற்படுகின்றது? : தீய்ந்துபோன மின் விளக்குக் குமிழினின் றும் செய்யப்பெற்ற ஒரு குடுவையை மையில்ை நிறமூட்டப்பெற்ற நீரினல் நிரப்புக. 30 செ.மீ. நீளமுள்ள ஒரு கண்ணுடிக் குழலேத் தாங் கிக்கொண்டுள்ள ஓர் ஒரு-துளையுள்ள அடைப் பானைக் குழலில் 5 அல்லது 6 செ. மீ. அளவு நீர் ஏறும்வரையில், குடுவையுள் செருகுக. குடுவையை ஒரு முக்காலியின்மீது ஒரு சாராய அடுப்பின்மேல் இருக்குமாறு வைத்திடுக; அத னைக் சூடாக்கும்பொழுது நீர் மட்டத்தினை உற்றுநோக்குக. கண்ணுடியைவிட நீர் மிக அதிகமாக விரிவடைந்து குழலில் ஏறுகின்றது. குழலே மிகவும் கூர்ந்து நோக்கும் ஒரு சிலர் சூடாக்குதல் தொடங்கப்பெறும் அந்தக் கணத் தில் முதலில் நீர் மட்டம் கீழிறங்குவதையும் அதன் பிறகு ஏறத் தொடங்குவதையும் கவ னித்திடலாம். கண்ணுடிக் குமிழினுள்ளிருக்கும் நீர் கண்ணுடியின் வெப்பநிலையை அடை வதற்கு முன்னர் கண்ணுடிக் குழல் விரிவடை 'யத் தொடங்குவதே இதற்குக் காரணமாகும். 4. ஸ்பிரிட் வெப்பமானியை இயற்றுதல் : வெப்ப நிலை மாற்றங்களை மட்டிலும் சரியாக உணர்த்துவதற்குப் போதுமான ஓர் எளிய ஸ்பிரிட் வெப்பமானியை (Spirit thermometer) இயற்றுவதற்கு 20-30 செ. மீ. நீளமும் கிட்டத் தட்ட 5 மி.மீ.வெளிக் குறுக்கு விட்டமும், கிட்டத் தட்ட 1 மி. மீ. துளையும் உள்ள ஒரு கண்ணுடிக் குழலைப் பயன்படுத்துக. கிட்டத்தட்ட 1.5 செ. மீ. வெளிக் குறுக்கு விட்டத்தைக்கொண்ட ஒரு குமிழ் முதலில் குமிழின் ஒரு முனையில் ஊதப்பெறுகின்றது; ஓர் இரப்பர்க் குழலின் வழியாகவும் ஒரு புனலின் வழியாகவும் நிறமூட் 192