பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டப்பெற்ற வணிகச் சாராயம், வெப்பமானி முற் றிலும் காற்றுக் குமிழிகளின்றும் நிரம்பும்வரை දෑ யிலும், அநுமதிக்கப்பெறுகின்றது. நுழைய அதன் பிறகு வெப்பமானி 60°C. உள்ள நீரில் வைக்கப்பெறுகின்றது; இந்த வெப்ப நிலை சாராயத்தின் கொதி நிலையைவிடச் சற்றுத் தாழ்ந்ததாகவுள்ளது. இதல்ை அதிகப்படி யாகவுள்ள சாராயம் கசிந்தொழுகுகின்றது. அதன் பிறகு திறந்த முனை உருகச்செய்து மூடப் பெறுகின்றது. வெவ்வேறு வெப்ப நிலைகளில் நீரில் வெப்பமானி வைக்கப்பெற்றுச் சோதிக் கப்பெற்று அளவு கோடுகள் குறிக்கப்பெறு கின்றன. - 5. வெப்பமானியைச் சோதித்தல் : வெப்பமானியின் அளவுகள் நீராவியின் வெப்பநிலை, உருகும் பனிக்கட்டியின் வெப்ப நிலை என்ற இரண்டு நிலையான புள்ளிகளில் குறிக்கப்பெறுகின்றன. ஒரு வெப்பமானி யைக் கைவசப்படுத்தி ஒரு குடுவையில் கொதித்துக்கொண்டிருக்கும் நீரின் மேற்பரப் புக்குமேல் வைத்திடுக. அங்குப் பல நிமிட நேரம் இருக்குமாறு விட்டு வைத்து எவ் வளவு அருகில் 100°C. அல்லது 212°F. வெப்ப நிலைகளை அது காட்டுகின்றது என்பதைக் கவ னித்திடுக. குறிப்பு : நீங்கள் மிக உயரமான பகுதியில் வசித்தால், குறைந்த அமுக்கத்தின் காரண மாக நீராவியின் வெப்பநிலை 1000. அல்லது 212°F க்குக் கீழேயே இருக்கும். கடல் மட்டத் தில் அல்லது காற்று அழுத்தமானியின் பாத ரசத்தின் அளவு 760 மி. மீ. காட்டப்பெறும் பொழுது மட்டிலுந்தான் வெப்பமானி சரியான அளவினைக் காட்டும். நீராவியினின்றும் வெப்பமாணியை அகற்றி, சில விடிைகள் அதனைக் குளிரவிட்டு அதன் பிறகு உருகிய நிலையில் பனிக்கட்டியைக் ΧΧV B. வெப்க கிலே கொண்ட ஒரு சாடியில் அதனை வைத்திடுக. எவ்வளவு அருகில் 0° C. அல்லது 32° F. வெப்ப நிலைகளே அது காட்டுகின்றது என்பதை உற்று நோக்குக. 6. வெப்பமும் வெப்பநிலையும்-ஒரு கலோரி என்பதன் கருத்து : - 50 க. செ. மீ. நீரையும் ஒரு வெப்பமானியை யும் கொண்ட ஒரு தகரக் குவளையை ஒரு சிறிய புன்சென் சுவாலேயின்மீது அல்லது மெழுகு வத்திச் சுவாலேயின்மீது தொங்கவிடுக. விடா மல் கிளறிக்கொண்டே அதனை 2 நிமிடங்கள் சூடாக்குக; இறுதி வெப்ப நிலையைக் குறித்துக் கொள்க. குவளையிலுள்ள நீரைக் கொட்டி விட்டு 100, 150, 200 க. செ. மீ. அளவுகளுள்ள நீரைக்கொண்டு அதே சுவாலையைப் பயன் படுத்தி இச்சோதனையைத் திரும்பத் திரும்பச் செய்திடுக. 1 க. செ. மீ. அளவுள்ள நீரை 1 கிராம் என்று கொள்வது போதுமான அளவு சரியாக இருக்கும். ஒவ்வொரு சோதனையிலும் நீரின் பொருண்மையையும் (Mass), வெப்ப j5ථීක්‍ෂා ஏற்றத்தையும் பெருக்கி, பெருக்கற்பலனக் காண்க. ஒவ்வொரு நீரின் பொருண்மைக்கும் சுவாலையிகுல் ஒரே வெப்பம் தரப்பெறுவதால் இந்த முடிவு 1 கிராம் நீர் 1°C. உயருவதற்கு எடுத்துக்கொள்ளும் வெப்ப அளவே வசதியான வெப்பமூல அளவு (அலகு - unit) என்ற கருத்தேற்றத்தைத் தருகின்றது. இந்த மூல 193