பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C. காந்தத் தன்மையும் மின் ஒற்றலும் மாகச் சுழற்றுக; விளக்கு பிரகாசமாக எரிகின் றது. ஏன்? உங்களுடைய கண்களை மூடிக் கொள்க: நீங்கள் சுழற்றும்பொழுது யாராவது ஒருவர்மின்குமிழைக் கழற்றட்டும்;வைக்கட்டும். மாற்றச்சினைச் சுழற்றுவதற்கு நீங்கள் பயன் படுத்தும் முயற்சியின் (Ettort) அதிர்வினைக் கொண்டே எப்பொழுது மின் குமிழ் எரிகின் றது, எப்பொழுது அஃது அணைகின்றது என் பதை நீங்கள் சொல்லக்கூடுமா? விளக்கு எரியுங்கால் சுழற்றுவதற்கு அதிகக் கடினமாக இருப்பதேன் ? 20. ஒரு குண்டுசி-தக்கை மோட்டாரை இயற்று வது எங்ஙனம்? : ஒரு சவரவாள் அலகினைக்கொண்டு ஒரு தக்கையினுள் வெட்டப்பெற்ற பள்ளத்தில் ஒரு மெல்லிய காப்பிடப்பெற்ற கம்பியினைச் சுற்றி இந்த மோட்டாரின் சுழல் சுருள் (Armature) செய்யப்பெறுகின்றது. ஒவ்வொரு முனையிலும் ஒன்ருகச் செலுத்தப் பெற்ற இரண்டு குண்டுசிகள் அச்சாகச் செயற்படுகின்றன. வெறுமையான கம்பியின் முனைகள் வேறு இரண்டு குண்டுசிகளின் மீது சுற்றப்பெற்றுள்ளன; இக் குண்டுசிகள் மின் கோடிகளாகப் பயன்படுகின்றன; இவற் றின்மூலமாக மின்னேட்டம் கம்பிச் சுருளி னுள் நுழைந்து அதனை விட்டு நீங்குகின்றது. மெல்லிய தகரம் அல்லது தாமிரத் தகடுகள் தூரிகைகளாக (Brushes)ப் பயன்படுத்தப்பெறு கின்றன; அவை அடித் தளத்துடன் ஓவியக் குண்டுசிகளால் பிடித்துக்கொள்ளப்பெறுகின் றன. இந்த அமைப்பின்மீது வைக்கப்பெற்றுள்ள ஒரு குதிரை இலாடக் காந்தம் மாதிரி உரு வத்தை முற்றுப்பெறச் செய்கின்றது; இந்த மாதிரி உருவம் ஓர் உலர்ந்த மின் கலத்தால் இயக்கப்பெறுதல் கூடும். தக்கையின்றி ஒரு குண்டுசியை மட்டிலும் பயன்படுத்தி ஒரு சிறிய சுழல் சுருள் இயற்றப் பெறுதல் கூடும். முதலில் கம்பி ஒரு பென்சிலைச் சுற்றிச் சுற்றப்பெற்று, ஒரு நூலினக்கொண்டு ஒரு கொக்கியாகக் கட்டப்பெறுகின்றது. அவற் றின் முனைகளும் நூலினக்கொண்டு ஒரு குண்டு சியின் மீது சுருட்டப்பெற்ற கோந்து தடவிய தாளுடன் பிணைக்கப்பெறுகின்றன; இந்தக் குண்டுசி ஒரு திசைமாற்றியாகத் (Commutator) gi&rls floorpg). 252