பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்வடையத் தூண்டுகின்றது. இது திரும்ப வும் நிலையான மின்ளுேட்டத்தைத் தடைசெய்து அது ஏற்குங் கருவியின் மின் காந்தத்தின் வழி யாகச் செல்லுங்கால் அதனே ஒழுங்காக விரிந்து சுருங்கச் செய்கின்றது. இஃது ஏற்குங் கருவி சவர வாள் சவர வாள் யிலுள்ள இடைத் திரையைக் கடகடவென்று ஆடச் செய்து அல்லது அதிரச் செய்து இந்த வழியின் அடுத்த பக்கத்தில் பெட், யைத் தாக்கின ஒலியலைகளைப்போன்ற ஒலி யலைகளையே விளைவிக்கின்றன. பெட்டியைத் தேய்த்துக் கேட்டிடுக. பெட்டியின்மீது மணல் துணுக்குகளே விழச்செய்து தொலைபேசியின் மூலம் அவை பெட்டியைத் தாக்குவதைக் கேட் டிடுக. மேசையின்மீது கரகரப்பான ஒலியை விளைவித்து அதனைக் கேட்டிடுக. இச்சோதனை கள் மேற்குறிப்பட்ட விளக்கத்தை உறுதி செய் கின்றனவா? 18. காந்தத்தையும் ಹ645 சுருளயும் கொண்டு மின்சாரத்தை உண்டாக்குதல்: நீங்கள் மேலே B-பகுதியில் 4-வது சோதனை யில் செய்த கூருணர்வுள்ள மின்ளுேட்டத்தை a sowt (5th ECŞou?&m (Sensitive current detector) இந்தச் சோதனையில் பயன்படுத்தத் தேவைப்படும். சுமார் 50 சுற்றுக்களுள்ள மணிக் கம்பிச்சுருள் ஒன்றினை மின்ளுேட்டத்தை உணருங் கருவியுடன் இணைத்திடுக; காந்தம் திசை காட்டிக்கு மிக அப்பால் இருப்பதற் கேற்றவாறு போதுமான நீளமுள்ள தொடர்புக் கம்பிகளை (Lead wires) விட்டு விடுக. கம்பிச் சுருளை ஒரு நிலைத்த குதிரை இலாடக் காந்தத் தின் ஒரு துருவத்தின்மீது அசையும்படி செய்க. திசை காட்டியின் குறிமுள்ளே உற்றுநோக்குக. இப்பொழுது துருவத்தினின்றும் கம்பிச் சுருளே அகற்றித் திசைகாட்டியின் குறிமுள்ளே உற்று நோக்குக. காந்தத்தின் மற்ருெரு துருவத் தின்மீது கம்பிச் சுருளே அசையுமாறு செய்க; பின்னர் நீக்குக. அடுத்து, கம்பிச் சுருளைப் பிடித்துக்கொண்டு அதனுள் காந்தத்தைத் C. காந்தத் தன்மையும் மின்ற்ைறலும் திடீரென வேகமாக நுழைத்திடுக. காந்த விசைக் கோடுகள் ஒரு கம்பிச் சுருளால் எப் பொழுது துண்டிக்கப்பட்டாலும் கம்பிச் சுருளில் மின்னேட்டம் உண்டாகின்றது. 19. கையால் இயக்கப்பெறும் மின்னுக்கியினின் றும் மின்சாரம்: ஒரு பழங்கால முறைச் சுவர் தொலைபேசியி னின்றும் உங்கட்கு ஒரு காந்தக் கருவி தேவைப் படும். இந்த வகைத் தொலைபேசி இன்னும் சில பகுதிகளில் பயன்படுத்தப்பெறுகின்றது.தொலை பேசிக் கம்பெனியில் பணியாற்றும் நண்பர் ஒரு வர் இருப்பின் அவர்மூலம் யாதொரு விலையில் லாமலேயே ஒரு காந்தகருவியைப் பெறுவது சாத்தியமாகும்; ஏனெனில், அந்த வகைக் காந் தக் கருவிகள் நீக்கப்பெற்று நவீன வகைக் காந்தக் கருவிகள் 'அவையிருந்த இடங்களில் வைக்கப்பெறுகின்றன. பெட்டியினின்றும் அந்தக் காந்தக் கருவியினை அகற்றி அதனை 15:5x30 செ. மீ. அளவுள்ள பலகையின் ஒரு முனையருகில் ஏற்றிப் பொருத் துக. அதன் அடுத்த முனையருகில் ஓர் ஒழுங் கான விளக்குக் கூட்டினைப் (Socket) பொருத் துக. இந்தக் கூட்டினை மின்னக்கியின் மின் கோடிகளுடன் இணைத்திடுக. கூட்டில் ஒரு 10 வாட்-100 வோல்ட்டு மின் குமிழொன்றின வைத்திடுக. இப்பொழுது பொறி பயன்படுத்துவதற்குத் தயாராக உள்ளது.மாற்றச்சினைச்(Crank)சுற்றி விளக்கேற்றுக. அதனை மெதுவாகச் சுழற்றுக; விளக்கு மங்கலாக எரிகின்றது. அதனை வேக 251