பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C. காந்தத் தன்மையும் மின்ளுற்றலும் 17. எங்ஙனம் எளிய தொலைபேசியின் அனுப் பும் கருவியினை இயற்றுவது? : ஒரு கத்தியின் கூரிய முனையினைக்கொண்டு ஒரு சுருட்டுப் பெட்டியின் உச்சிப் பக்கத்தின் மேற்பரப்பின்மீது 4 செ.மீ. இடைவெளி விட்டு இரண்டு இணையான பள்ளங்களை வெட்டுக. ஒவ்வொரு பள்ளத்திலும் ஒரு சவரவாள் அலகின் பின்புறத்தை வைத்து அமுக்கிவிடுக. இதனுல் சவரவாள் அலகுகள் இரண்டும் அசையாமல் அமைதல் வேண்டும். அவை அசையாது அமையாவிடில் அவற்றைச் சூடான முத்திரை அரக்கினக்கொண்டு பொருத்துக. (அலகினைச் சூடாக்கி அதனை அரக்கின்மீது தேய்த்திடுக; அது சூடாக இருக்கும்பொழுதே தயாரிக்கப்பெற்றுள்ள பள்ளத்தில் அதனை வைத்து அழுத்துக.) இணைப்பதற்காக அலகு களில் கம்பிகளே வைத்து முறுக்கி விடுக. இப் பொழுது ஒரு சிறிய பென்சிலே அதன் இரு முனைகளையும் கூராகச் சீவி அதனைச் சவாவாள் அலகுகளின் கூரிய முனைகளின் குறுக்கே வைத்திடுக. பென்சிலின் பின்புறம்வரையில் நன்ருகப் போதுமான அளவு கூராக்கப்பெற் றுள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்க: அஃதாவது, இதல்ை பென்சிலின் ஆணி (Carbon)-கட்டைப் பகுதி அன்று-அலகு களைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இப்பொழுது உங்கள் தொலைபேசிஆயத்தமாகி விட்டது. ஏதாவது ஒரு வசதியான இடத்திலிருந்து ஒரு தொலைபேசியின் ஏற்கும் கருவியினைப் பெறுக. தொலைபேசிக் கம்பெனியில் யாராவது ஒருவர் உங்கட்கு அறிமுகம் ஆகியிருப்பின் அவர் மூலம் தள்ளுபடி செய்யப்பெற்ற கருவியொன் றினைப் பெறலாம். விளக்கப் படத்தில் காட் டப்பெற்றுள்ளவாறு அக் கருவியை உலர்ந்த மின் கலங்களுடன் தொடர் அடுக்கு இணைப்பு முறையில் இணைத்திடுக. இணைப்புக்களைச் சோதிப்பதற்கு ஏற்குங் கருவியைக் காதில் வைத்துக்கொண்டு பென் சிலை உயர்த்தியும், தாழ்த்தியும், அதனை அசைத் தும் அதன் நிலையை மாற்றுக. வானெலியில் கேட்கப்பெறும் நிலையமைதி சார்ந்த ஒலியினப் போன்ற ஓர் ஒலியினை நீங்கள் கேட்பீர்கள். உங்கள் தொலைபேசியை குரலுக்கேற்பப் பொருத்தம் செய்வதற்குப் பெட்டியின்மீது ஒரு கடிகாரத்தை அமைத்திடுக; நீங்கள் ஏற் குங் கருவிமூலம் கேட்டுக்கொண்டே யிருக்கும் பொழுது நீங்கள் கடிகாரத்தின் டிக், டிக்' ஒலியை சாதாரணமாகக் கேட்பதை விட உறைப்பாக இரண்டு அல்லது மூன்று தடவை கள் கேட்கும்வரை கோல் அல்லது பென்சிலின் நிலையைச் சரிப்படுத்துக. ஒரு கூருயர்வான நிலே தட்டுப்பட்டதும், கடிகாரத்தை அகற்றி விட்டு பெட்டியினுள் நேராகத் தெளிவாகப் பேசுக. ஏற்கும் கருவியைக் காதில் வைத்துக் கொண்டுள்ள உங்கள் நண்பர் நீங்கள் சொல்லு வதைக் கேட்க வேண்டும். நீங்கள் ஒரு நீண்ட வழியைப் பெற்றிராவிடில் அவர் தமது மற்ருெரு காதை முடிக்கொள்ளத்தான் வேண்டும். கார்பன் கோல் அல்லது கூராக்கப்ளட்டி வென்சில் சவர வாள் இப்பொழுது நீங்கள் ஒரு சுருட்டுப் பெட் டியைக்கொண்டு உங்கள் குரலேத் திருப்பித் தர வும் அதனை ஒரு கம்பியின்மூலம் அனுப்பவும் செய்யவல்ல ஒரு மந்திரத்தையொத்த செயலே நிறைவேற்றி விட்டீர்கள். அஃது எங்ங்ணம் செயற்படுகின்றது என்பதைப் படத்தின்மூலம் விளக்க முயலுக. குரலின் காற்றலைகள் பெட்டி அதிர்வடையச் செய்கின்றன என்பதை நீங்கள் அனுபவத்தால் அறிகின்றீர்கள். நீங்கள் சில ஒலிகளை எழுப்புங்கால் உங்கள் விரல் களைப் பெட்டியின் மீது வைத்து அதிர்வுகளை உணர்க. பெட்டியின் இந்த அதிர்வு அடைதல் தான் பென்சிலேக் கடகடவென்று ஒலிக்கச் செய்கின்றது; அல்லது அதைப்போலவே 250