பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகற்றுவதல்ை தொடர்புள்ள இடம் அமைக் கப்பெறுங்கால், அதிர்வு அடையும் உறுப்பு சற்று உறுதியான அமுக்கத்துடன் அதனை அழுத்திக்கொண்டிருக்கும். കൂട്ടു சேண்டையை (Gong) அமைப்பதற்கு முன்னர் அடியிற்கண்டவாறு கம்பிகள் இணைக் கப்பெறுதல் வேண்டும் ; தொடர்பிடங்கள் சரிப்படுத்தப்பெறுதல் வேண்டும் ; கம்பிகளை இணைப்பதற்குரிய திட்டம் தெளிவாகக் காட் டப்பெற்றுள்ளது. இப்பொழுது இ ந் த அமைப்பினை இரண்டு உலர்ந்த மின்கலங்களு டன் இணைத்து தொடர்புள்ள இடத்தை உட் புறமோ வெளிப்புறமோ அமைத்து அதில் சரி யான பொருத்தத்தைச் செய்திடுக. கடிகார வில் வலுவாக அதிர்வடைதல் வேண்டும். எல்லா இணைப்புக்களும் சரியாக உள்ளனவா என்பதையும், கடிகார வில் உப்புத் தாளைக் கொண்டு தேய்க்கப்பெற்ருே, வேறு முறையில் சுரண்டப்பெற்ருே அது தொடும் இடத்தை அமுக்கும் இடம் தூய்மையான உலோகமாக உள்ளதா என்பதையும் உறுதி செய்துகொள்க. தொடும் போல்ட்டு ஆணியின் முனே கூட உப்புத் தாளால் தேய்க்கப்பெறுதல் வேண்டும். சுத்தி அதிர்வடைந்து கொண்டிருக்கும் பொழுது சேண்டைக்குச் சிறந்த இடத்தைக் கண்டறிந்து அந்த இடத்தில் அடித்தளத் துடன் அதனைப் பிணைத்திடுக. ஒரு சிறிது வில்லை வளைத்தல், அல்லது தொடர்புள்ள இடத்திலுள்ள அமுக்கத்தை மாற்றுதல், அல்லது அதிர்வு அடையும் உறுப்பிற்கும் காந்தத்திற்கும் இடையிலுள்ள இடை வெளியை மாற்றியமைத்தல், அல்லது தொடர் புள்ள இடங்களைத் திரும்பவும் உப்புத் தாளால் தேய்த்தல் : இவை மணி செயற்படுவதை மேம்பாடடையச் செய்யும். XXXIII C. காந்தத் தன்மையும் மின்குற் றலும் 16. எளிய தொலைபேசி வழியை எங்கனம் அமைப்பது?: சுமார் 10 செ.மீ. சதுரமுள்ள இரண்டு தாமிரத் தகடுகளைக் கைவசப்படுத்துக. ஒவ் வொன்றிலும் ஒரு துளையிட்டு சுமார் ஒரு மீட் டர் நீளமுள்ள மணிக் கம்பியுடன் இணைத் திடுக ; கம்பியின் இரு முனைகளிலுமுள்ள காப்பிடு பொருளை அகற்றிய பிறகு இங்ங்னம் இனத்திடுதல் வேண்டும். தாமிர்த் தகடு களுடன் கம்பியைப் பற்ருசு வைத்துப் பிணைத் திடுதல் மிகமிக நன்று. ஒரு பழைய உலர்ந்த மின் கலத்தினின்றும் கார்பன்-கோலினே அகற்று க. அதனைச் சுமார் 5 மி. மீ. குறுக்கள வுள்ள சிறு சிறு துண்டுகளாக உடைத்திடுக. கிட்டத்தட்ட ஒரே அளவுள்ள கார்பன் துண்டு களைத் தேர்ந்தெடுத்திடுக. உங்கட்கு ஒரு சிறு கை அளவே தேவையாக இருக்கும். அடுத்து ஒரு சுருட்டுப் பெட்டியினையும் ஓர் எச்சரிக்கை மணியொலி தரும் கடிகாரத்தையும் (Alarm clock) கைவசப்படுத்துக. சுருட்டுப் பெட்டி யின் மீது முகம் மேலிருக்குமாறு கடிகாரத்தை வைத்திடுக. ஒரு தாமிரத் தகட்டினை கடிகாரத் \ த). ஒலி ஏற்குங் கருவி பாட்டி ரி தாமிரத் தகடுகளுக் கிடையே கார்சன் துண்டுகள் தின் மீது வைத்திடுக. இத்தட்டினின்றும் கம்பியை தொடர் அடுக்கு இணைப்பு முறையில் இணைக்கப்பெற்றுள்ள இரண்டு உலர்ந்த மின் கலங்களுடன் இணைத்திடுக. தொலைபேசியின் ஏற்கும் கருவியினைப் பாட்டரியின் அடுத்த பக்கத்துடனும் மற்ருெரு தாமிரத் தகட்டின் கம்பியுடனும் இனத்திடுக. அடுத்து, கார்பன் துண்டுகளைத் தாமிரத் தகட்டின்மீது வைத்து அவற்றை அடுத்த தாமிரத் தகட்டினல் மூடுக. இப்பொழுது ஏற்கும் கருவியில் காதினை வைத்துக் கேட்டிடுக; நீங்கள் கடிகாரத்தின் டிக், டிக் ஒலியினைக் கேட்பீர்கள். மேலேயுள்ள தாமிரத் தகட்டினை ஒரு சிறிது இப்புறமும் அப்புறமுமாக நகர்த்தி அதனை ஒழுங்குபடுத்த வேண்டியிருக்கும். 249