பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C. காந்தத் தன்மையும் மின்குற்றலும் குக. அதன் மையத்தில் ஒரு சிறிய துளையிட்டு அதன் வழியாக ஒரு 15.5 செ. மீ. அளவுள்ள ஒரு பெரிய ஆணியைச் (அல்லது முனையைச்) செலுத்துக. 15 செ. மீ. நீளமுள்ள வேறு இரண்டு ஆணிகளின்மீது 100 சுற்றுக்கள் மணிக் கம்பியை ஒழுங்காகச் சுற்றுக; இவை ஒவ்வொன்றிலும் 30 செ. மீ. நீளமுள்ள கம்பி யின் இரண்டு தனி முனைகளை விட்டு விடுக. இந்த இரண்டு பெரிய ஆணிகளையும் 155 செ. மீ. இடைவெளிவிட்டு அடித்தளத்தினுள் செலுத்துக. மையத்திலுள்ள ஆணிக்கு 5 செ.மீ. தொலைவில் மூலை விட்டத்தின்மீது இரண்டு சிறிய ஆணிகளைச் செலுத்துக. ஒவ்வொரு கம்பிச் சுருளின் முனைகளிலும் காப்பிடு பொருளைக் கிழித்தெறிந்து அவற்றை ஆணி களைச் சுற்றிப் பல தடவைகள் முறுக்கி வளைத் திடுக; இதல்ை அவை மைய ஆணியுடன் பற்றிணைப்புடன் அமைந்திருக்கட்டும். இந்த முனைகள் துரிகைகளாகத் துணைபுரியும் புலக் கம்பிச் சுருள்கள் பொருத்தமான திசை யில் சுற்றப்பெற்றுள்ளனவா என்பதில் கவ னம் எடுத்துக் கொள்ள வேண்டும். இங்குள்ள விளக்கப் படம் சுற்றுக்களின் திசையினைக் காட்டும் முழுமையான திட்டமாகும். வேறு எந்த வழியிலும் அது செயற்படாது. கம்பிச் சுருள்களின் மற்ற முனைகள் அடித்தளத்தின் மூலைகளிலுள்ள மரையாணிகளுடன் இணைக்கப் பெறுதல் வேண்டும். - ஒரு மோட்டாரின் நான்கு இன்றியமையாத பகுதிகளில் இரண்டாகிய உங்கள் புலக் காந் தங்களும் தூரிகைகளும் இப்பொழுது நிறை வெய்தியுள்ளன. சுழல் சுருள் கம்பிச் சுருளும் திசை மாற்றியும் இனி அமைக்கப்பெறுதல் வேண்டும். 4 செ. மீ. அளவுள்ள தக்கையின் உச்சியின் வழியாகக் குறுக்கே ஒரு துளையின இட்டு அதன் வழியாக 18 செ. மீ. அளவுள்ள ஒரு பெரிய ஆணியைத் திணித்திடுக. ஒவ் வொரு முனையிலும் கிட்டத்தட்ட 40 சுற்றுக்கள் வரை சுற்றுக ; படத்தில் காட்டப்பெற்றுள்ள வாறு சுற்றுக்களின் திசை அமைந்துள்ளதா என்பதை உறுதி செய்து கொள்க. தனியாக உள்ள முனைகளைச் சுரண்டி எறிக. இப்பொழுது தக்கையின் மையத்தை உட்குழிவான உளியி னைக்கொண்டு ஒழுங்காகத் துளையிடுக; ஒரு பேணுக் கத்தியினைக்கொண்டு துளையை உருண்டையானதாக்கி அதனுள் 10.5 செ. மீ. அல்லது 13 செ. மீ. அளவுள்ள சோதனைக் குழலின் மூடிய முனையைச் செருகுக. இது சுழல் சுருளினை முற்றுப்பெறச் செய்கின்றது. சுழல் சுருள் ஒவ் வொரு முனையிலும் புலக் காந்தம் 40 சுற்றுக்கள் புலக்காந்தம் இப்பொழுது நீங்கள் திசைமாற்றியை அமைக்க ஆயத்தமாக இருக்கின்றீர்கள். சுமார் 4 செ. மீ. நீளமுள்ள செவ்வக வடிவமான இரண்டு தாமிரத் தகட்டுத் துண்டுகளை வெட்டுக; இவை சோதனைக் குழலைச் சுற்றி 6 மி.மீ. இடைவெளியுடன் அமையக்கூடிய அளவு அகலமுள்ளதாக இருத்தல் வேண்டும். இத் தகடுகளைக் குழலுக்குள் பொருந்துவதற்கேற்ப வளைவுடையனவாக்குக. இரண்டு சிறு துளை களையிட்டு அவற்றுள் ஒவ்வொன்றிலும் சுரண் டப்பெற்ற சுழல் சுருள் கம்பியின் தனி முனை களே வைத்து முறுக்கி விடுக. அதன் பிறகு 254