பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B. அறிவியல் ஆசிரியர் ஆசிரியர்கள் தமக்குத்தாமே இவ்வாறு சொல் லிக்கொள்ளுகின்றனர்: "என்னுடைய வேலையில் சிறிதளவு அறிவியலைச் சேர்ப்பதன் முக்கியத் துவத்தில் நம்பிக்கை கொள்ளுகின்றேன். அஃது இல்லாமல் என்னுடைய பாடத்திட்டம் முழுமை எய்தும் என்று நான் நம்பவில்லை. எனக்கு அதிகமாக அறிவியல் தெரியாது ; ஆனல் சிறுவர்கள் எவ்வாறு கற்கின்றனர் என்பதை அறிவேன். என்னல் விடையறுக்க முடியாத வினுக்கள் விடுக்கப்பெறுவதைப்பற்றி யான் கவலைப்படுவதில்லை; காரணம், விடைகளைக் காண்பதற்கு சிறுவர்கட்கு எங்ங்னம் துணை புரிவது என்பதை யான் அறிவேன்.” இந்த ஆசிரியர்கள் பல பிரச்சினைகளையுடைய வர்கள். அறிவியலில் நிலைக்களம் அமைத்தல், அதனை எங்ஙனம் கற்பிப்பது என்பதை அறிதல், தேவையான துணைக்கருவிகளையும் பிற பொருள்களையும் காணல் ஆகியவை அவர் கட்குத் தேவைப்படுகின்றன. ஆனால், அவர் களிடம் இரண்டு இன்றியமையாத சாதனங்கள் உள்ளன : அறிவியலைக் கல்வித் திட்டத்தில் சேர்ப்பதன் அவசியத்தை அவர்கள் உணர் கின்றனர்; சிறுவர்கள் எங்ஙனம் கற்கின்றனர் என்பதையும் அவர்கள் அறிகின்றனர். அடியிற் காணப்பெறும் கருத்தேற்றங்கள் அத்தகைய ஆசிரியர்களால் பயனுள்ளவை களாகக் கருதப்பெறுகின்றன : 1. செவ்வாய்க்கோளைச் சார்ந்த மனிதளுெரு வனின் முதற் காட்சிக்காக ஒதுக்கி வைக்க வேண்டிய மதிப்பச்சம் போலன்றி, அறிவியல் பயிற்றலை நம்பிக்கையுடன் அணுகுங்கள். நீங்கள் நினைப்பதுபோல் அது வழக்கத்திற்கு மாருன தன்று. பெரும்பான்மையான ஆசிரியர்கள் எளிமையாகக் கருதும் சமூகப்பாடம், மொழிப் பாடம், கலைப் பாடங்கள், எண்கணிதம் போன்ற வற்றைக் கற்பித்தலினின்றும் இஃது அதிகம் வேறுபட்டதன்று. அதனைக் கற்பித்தலும் கடின மன்று; அது காட்சிப் பொருள்களைப்பற்றிய தாதலாலும், பெரும்பான்மையான சிறுவர் களின் உண்மைக் கவர்ச்சிகளைத் தழுவியிருப்ப தாலும், உண்மையில் சில கூறுகளில் அதனைக் கற்பித்தல் எளிது என்றும் கூறலாம். 2. சிறுவர்கள் உங்களை வினவும் விளுக்களுக் கெல்லாம் விடைகளை அறிய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் அவற்றை அறியும்வரை காத்திருந்தால், நீங்கள் அறி வியல் பயிற்றலை எப்பொழுதுமே தொடங்க முடியாது. ஆசிரியர்கள் சிறுவர்கட்கு அதிக மாகவே சொல்லிப் புகட்டுகின்றனர். நீங்கள் சிறுவர்களை நன்கு அறிந்துகொண்டால், அவர் களின் கற்றலில் எங்ங்னம் துணைபுரிவது என் பதையும் அறிந்தால், கற்பிக்கும் போரில் செம்பாதி வெற்றிகண்ட மாதிரிதான். சிறுவர் களுடன் கற்றுக்கொள்வது பற்றி அச்சம் கொள் ளாதீர்கள். அவர்களுடைய புதிர்கட்கு விடை காணும் திட்டங்களை அவர்களே அமைக்கட்டும்; அதன்பிறகு நீங்கள் ஒரு வழிகாட்டிபோல் நின்று அவர்களுடன் கற்றுக் கொள்ளுங்கள். ஆயினும், நீங்கள் பாடப்பொருளை ஒரளவு அறிந்திருத்தல் அவசியமே ; ஆளுல் நீங்கள் அறிவியல்துறை வல்லுநராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அடுத்துவரும் ஒரு சில ei fejsor Essriảissir (items of advice) prsiraj அறிவியல் நிலைக்களத்தை அமைப்பதற்கு உங்கட்குத் துணை செய்யும். 8. ஓர் அலகு அல்லது அறிவியல் பாடத்தின் ஒரு பகுதி உறுதியானவுடன், நீங்கள் பயிற்று விக்கும் மாணுக்கர்கள் கற்கும் நிலைக்கேற்ற சில அடிப்படையான பாடப்புத்தகங்களைப் படியுங்கள். அதன்பிறகு சில நல்ல பொது அறிவியல் அல்லது உயிரியல் பாடப்புத்தகங்களை (உயர் நிலப் பள்ளிகளில் பயன்படுத்தப்பெறுபவை போன்றவை) எடுத்துப் படியுங்கள். இங்கு நீங் கள் இளஞ்சிருர்கட்கு அறிவியல் பயிற்று வதற்கு இன்றியமையாததாகவுள்ள அறிவியல் பாடப்பொருளின் நிலைக்களத்தினைக் காணலாம். 4. இந்தப் பொருளினிடம் நல்லுறவு அமை யும்பொருட்டு இப்புத்தகங்களில் கருத்தேற்ற மாகத் தரப்பெற்றுள்ள சில சோதனைகளைச் செய்து பாருங்கள். நீங்கள் மிகச் சிக்கலானவை என்று கருதுவதில் பாதியளவுகூட இவை சிக்க லானவை அன்று.

5. அப் புத்தகங்களில், மேற்கொள்ள வேண் டியவை என்ற தலைப்பில் தரப்பெற்றுள்ள சிறு தொலைப் பயணங்கள், உற்று நோக்கல்கள் சோதனைகள், திரட்டுதல்கள்-போன்றவற்றுள் சிலவற்றையாவது நிறைவேற்றுங்கள். கண் ணுல் காண்பது நம்பிக்கையையும் உறவினையும் உண்டாக்கும் ; நகர நீர் வடிகட்டும் அமைப்பினை நீங்களே கண்டு அதன் வியப்புடைமையில் ஈடு

8