பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்களாகும். இந்நோக்கங்களைக் கருத்திற் கொள்ளாத எந்த அறிவியல் பாடத்திட்டமும் பயனுடையதாக இருத்தல் இயலாது. தொடக்க அறிவியல் பயிற்றலின் நோக்கங் கள் முதல்நிலைப் பள்ளியின் நோக்கத்தைப் பற்றிய இந்த விரிந்த பொதுமையான கருத்துக் களுக்கிணையச் சரிப்படுத்தப் பெறுதல் வேண்டும். நாம் அறிவியலைப் பயிற்றும் முறை, சிறுவர் கட்கு மிகவும் பயனளிக்கக்கூடிய செயல்கள், திட்டமிடுதலிலும் அத்திட்டங்களை மதிப்பீடு செய்வதிலும் அவர்கட்கு நாம் துனே செய்யும் முறைகள்-இவை யாவும் இந்த நோக்கங்களுக் கேற்றவாறு உருவாக்கப்பெறுதல் வேண்டும். எடுத்துக்காட்டாக, சிறுவர்கள் சிறந்த குடி மக்களாகத் திகழ்வதற்குத் துணை செய்யும் முறையில் நாம் அறிவியலை எவ்வாறு பயிற்று வது ? ஆசிரியரே பாடப்பொருளைத் தேர்ந் தெடுத்து, அதை ஒழுங்கான முறையில் அமைத்து, அஃது எப்படிக் கற்கப்பெறுதல் வேண்டும் என்பதைத் தீர்மானித்து, வேறு வகைத் தீர்மானங்களையும் அவரே செய்து கற்பிக்கத் தொடங்கில்ை ஒழுங்குபடுத்துதல், திட்டமிடுதல், குழுவாக நின்று செயற்படுதல் போன்ற திறன்கள் அவர்களிடம் எங்ங்ணம் வளர வாய்ப்புக்கள் உண்டாகும்? திட்டமிடும் வல்லமையுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவது ஒரு குடிமகனின் இயற்பண்புகளில் ஒன்று என்பதை நாம் ஒப்புக்கொண்டால், நாம் சிறு வர்கள் திட்டமிடுவதற்கும், இணைந்து பணி யாற்றுவதற்கும் ஏராளமாக வாய்ப்புக்கள் தர வேண்டும். ஆசிரியராக இருந்து தலைமையைப் பற்றி (leadership) பயிற்சியளிப்பதற்கும் சாய்வு மேசையின்பின் இருந்து கொண்டு கட்டளையிடு வதற்கும் இடையே ஒரு தெளிவான வேற்றுமை உள்ளது. ஓர் ஆசிரியர் தலைவராக இருந்து கொண்டு கவர்ச்சிகளைத் தோற்றுவிப்பதற்கு முதற்படிகளைத் தந்து, இயலக்கூடிய வினை முறையின் வழிகளைத் திறந்து ஒரு துணையாள ராக இருக்கலாம். அவருடைய பட்டறிவு காரணமாக அவர் வழிகாட்டலில் சிறிது பயிற்சி யளிப்பதில் வல்லவராக உள்ளார் ; ஆணுல் தக்க 8. அறிவியல் ஆசிரியர் சமயததில் அமைதியாக இருக்க அறிந்து கொண்ட ஆசிரியருக்குப் புகழ் உண்டாகுக ! ஏனைய பள்ளிச் செயல்களிலுள்ளதுபோலவே அறிவியலிலும் அவ்வாறு - அமைதியாக - இருப்பதன் மூலம் பொறுப்புள்ள குடி மக்களாக இருக்கக் கற்றுக் கொள்ளுகின்றனர் சிறுவர்கள். இந்த உள்ளார்ந்த இயல்பினை (potentiality) வளர்ப்பதற்காகவே பாடப்பொருளின் பெரும் பகுதி உளதாகின்றது. ஆகவே, அறிவியல் கற்பித்தலில் சிறுவர்கள் சேர்ந்து திட்டமிடுவ தற்கும், முடிவுகள் செய்வதற்கும், தவறுகள் செய்வதற்கும், அவற்றைத் திருத்திக் கொள்வது எப்படி என்பதைக் காண்பதற்கும், தம்முடைய வெற்றியை உணர்ந்து கொள்வதற்கும், புதிய வினை முறைகளை அமைப்பதற்கும், விளைவுகளே மதிப்பீடு செய்வதற்கும் நாம் அவர்கட்கு வாய்ப்புக்களைத் தருவோமாக. சிறுவர்கள் விடுக்கும் வினுக்கட்கெல்லாம் விடைகளைத் தருதல் கூடாது ; விடைகளைப் படிக்குமாறு பணித்தலும் ஆகாது. அறிவியலில் தகவலை எவ்வாறு அடைவது? சோதனை செய்வ தால், உற்று நோக்குவதால், தெரிந்தவர்களே நாடி வினவுவதால், படிப்பதால், ஃபிலிம் காட்சி களைக் காண்பதால், இவைபோன்ற வேறுமுறை களால். மேலும், சிறுவர்கள் இவ்வழிகளைப் பயன்படுத்துவது எப்பொழுது, அவற்றின் விளைவுகளை நம்புவது எப்பொழுது என்பதை எங்ங்ணம் கற்றுக் கொள்ளுகின்றனர்? முடிவு செய்தலில் பெறும் பயிற்சி மூலமும், அதன் பிறகு தாம் நோக்கமாகக் கொண்ட திட்டங்களைத் தேர்ந்து அறிவதன் மூலமும்,தம்முடைய முயற்சி களின் பயன் விளைவினை மதிப்பீடு செய்வதன் மூலமும் அவர்கள் கற்றுக்கொள்ளுகின்றனர். தொடர்ந்து செய்யும் பழக்கத்தினுல் அறிவினை அடைவதற்கான சாதனங்களைப் பயன்படுத்தும் திறனில் மாளுக்கர்கள் வளர்ச்சி யடைகின் றனர்; நாம் துணை புரிந்தால் மட்டிலுமே இஃது உண்மையாகும். நாம் தக்கவாறு வாய்ப் பினை நல்குவோமாயின் ஒவ்வொரு பாடமும் இதில் ஒரு திட்டமான பங்கினைப் பெறுவதற்கு வழி ஏற்படும். B. அறிவியல் ஆசிரியர் எல்லாத் தொடக்கநிலை ஆசிரியர்களும் தாம் அறிவியலைக் கற்பிப்பதற்கேற்ற தளவாடம் தம்மிடம் இருக்கின்றதாகச் கருதும்வரை நாம்

காத்திருந்தால், நாம் கற்பித்தலை ஒருபொழுதும் தொடங்கவே முடியாது. முதல்நிலைப் பள்ளியில் மிகவும் வெற்றியுடன் பணியாற்றும் அறிவியல்

7