பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A. அொது அறிவியல் களையும், உயிர்வாழ் பிராணிகட்கும் அவற்றின் சூழ்நிலகட்கும் உள்ள உறவு முறைகளையும், இந்தப் பிராணிகளின் சூழ்நிலைக் கேற்ப அனு சரித்துக் கொள்ளும் முறைகளையும் சுட்டிக் காட்டும் ஓர் இயற்கைப் பயணம் (nature trail) பயன்படவல்ல பயிலும் திட்டமாகும். ஆகவே ஒர் இயற்கைப் பயணம், அஃது இயற்கைப்பாடம் என்ற கருத்தில் தன்னுடைய பிறப்பிடத்தைக் கொண்டிருந்தபோதிலும், தக்க முறையில் பயன்படுத்தப் பெறின் அது மிகவும் நவீனமாக வுள்ள அறிவியல் பாடத்திட்டத்தைக் காட்டிலும் அதிகமாகத் துணைபுரிய இடம் உள்ளது. ஒரு காட்டின் அருகிலும் பூங்காவின் அருகிலும் அல்லது நாட்டுப் புறத்திலும் உள்ள பள்ளிகள் இத்தகைய இயற்கைப் பயணத்தை அமைத்துக் கொண்டால், அல்லது வேறு திட்டமிட்ட முறை யில் இந்த மூலத்தைப் பயன்படுத்தினுல் அவை நற்பேறுடையனவாகக் கருதலாம். நவீன தொடக்க அறிவியல் பாடத்திட்டத்தில் uria eispusišao sagib (camp experience) நேரடியாகத் தகவல் பெற்றுப் புரிந்துகொள்ளக் கூடிய மற்ருெரு மூலமாகச் சேர்த்துக்கொள்ள லாம். பாடித் தங்கல் அமைக்கும் அனுபவம், அங்குத் தூங்கும் இடங்களை அமைத்தல், தூய் மையான பருகும் நீர் கொணர்தல், உணவுப் பொருள் கொணர்ந்து உணவு சமைத்தல், இவைபோன்ற இன்னும் பல இன்றியமையாத செயல்கள் யாவும் அறிவியல் நிறைந்த செயல் களாகவே உள்ளன. மேலும், எவ்வளவு அறிவியல், எந்த வகை அறிவியல் கற்றுக்கொள் ளப்பெறுகின்றது என்பது அத்திட்டத்திற்குப் பொறுப்பாகவுள்ளவரின் ேந க் க த் ைத ப் பொறுத்தது. நம்முடைய நோக்கம் மாளுக்கர்களின் தேவை களுடன் பொருந்துகின்றதா என்பதை உறுதி செய்வதில் இப்பகுதியின் தொடக்கத்தில் ஆராய்ந்த நோக்கங்களை வைத்து அளந்து கொள்ளலாம். மொத்தத் தொடக்க அறிவியல் பாடத் திட்ட நோக்கங்களுடன் சேர்ந்து இவை யும் வழிகாட்டியாக நின்று துணைபுரிகின்றன. செம்பாதி நேரத்தை வாதுமைவகைக் கொட் டைகளை (Walnuts) மெல்லிய தகரத் தகட்டால் மூடி அவற்றை கிறிஸ்துமஸ் மரத்தில் தொங்க விடுவதிலும், இலைகளைக் காகிதத்தில் வைத்துப் பதப்படுத்துவதிலும், ராபின் குருவிப் படத்தை வண்ணந் தீட்டுவதிலும், அல்லது காகிதப் பனிப் படலங்களே வெட்டுவதிலும் கழித்துவிட்டு நாம் நவீன அறிவியல் திட்டத்தை மேற் கொண்டிருப்பதாகக் கருதுவது தவறு. இத் தகைய செயல்களால் மிகத் தொடக்கநிலை அறிவியல் பாடத்திட்ட நோக்கங்களையும் அடை யச் செய்தல் இயலாது. அறிவியலும் முதல்நிலைப் பள்ளிப் பாட நிகழ்ச்சி நிரலும் ஒரு தொடக்க அறிவியல்பாடத் திட்டம் முதல்நிலைப் பள்ளியின் பொதுப் பாடத் திட்டத் துடன் உறவு கொள்ளாமல் தனிமையாக நிலை பெறுமாறு அமையப்பெறின் அது பயனற்ற தாகப் போவது உறுதி. முதல்நிலைப் பள்ளி யின் பொது நோக்கங்களை நிறைவேற்றுவதில் துணைபுரியும் அடிப்படையில்தான் ஒர் அறிவியல் பாடத் திட்டம் தனிப்பாடமாக இருக்கும் உரிம்ை வழக்காடப் பெறுகின்றது (challenged). முதல்நிலைப் பள்ளியின் பொது நோக்கங்கள் பலவாருகக் கூறப்பெறுகின்றன. அவற்றுள் மிக முக்கியமானது நல்ல குடிமக்களாக ஆவதற்கு இன்றியமையாதனவாகவுள்ள குறிக் கோள்கள், புரிந்து கொள்ளும் திறன், வேறு திறன்கள் ஆகியவற்றை அடைவதில் சிறுவர் கட்குத் துணைபுரிவதாகும். இது தகவல் அடை வதற்கு அடிப்படைச் சாதனங்களாகவுள்ள படித்தல், எழுதுதல், எண்கணிதம் ஆகிய வற்றைத் தருவதாகும். இவற்றுடன், சமூக

நடவடிக்கைகள் பிரச்சினைகள் இவற்றை அடை யாளங் காண்பதிலும் புரிந்து கொள்வதிலும் கருத்தேற்றங்களைத் தருதல், அக் கருத்தேற்றங் களை நிறைவேற்றுதல் இவற்றில் பங்கு கொள் வதிலும், தனிப்பட்டோருக்கும் குழுவினருக்கும் தேவைக்கேற்ற கூருணர்ச்சியை வளர்த்துக் கொள்வதிலும் அவர்கட்கு வாய்ப்புத் தருவது மாகும். தொடக்கநிலைப் பள்ளிச் சிறுவர்ளிடம் கூட்டுறவு, தலைவர்களைத் தேர்ந்தெடுத்தல், குழுவாக நின்று திட்டமிடுதல் போன்ற பல மானிட உறவுகளைப் புரிந்து கொள்வதிலும் அவற்றில் பயிற்சி பெறுவதிலும், உடல் உள நலத்திற்குத் துணைபுரியக் கூடிய நிலைமைகளை உண்டாக்குவதிலும் அவர்களிடம் இந்தப் பண்புக் கூறுகள் (traits) வளர்வதற்கேற்ற தகவலையும் திறன்களையும் தருவதிலும் அவர் கட்குத் துணையாக இருத்தல் வேண்டும். ஓய்வு நேரத்திற்கான நற்பயன் விளைவிக்கும் கவர்ச்சி களை வளர்ப்பதில் பள்ளி அவர்கட்குத் துணை புரிதல் வேண்டும். இவைதாம் ஒரு நல்ல முதல் நிலைப் பள்ளிப் பாடத் திட்டத்தின் பொது நோக்

6