பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யிலும், செயல்களைத் தேர்ந்தெடுப்பதிலும், மதிப் பீடு (Evaluation) செய்யும் முறையிலும், வகுப் பறையில் மேற்கொள்ளப்பெறும் ஒவ்வொரு செயலிலும் வழிகாட்டியாக அமையும். இங்குத் தான் அறிவியல் ஆசிரியர்கள் அனைவரும் நினைவிற் கொள்ளவேண்டிய குறிப்பு ஒன்று உள்ளது ; அறிவியல் பயிற்றலால் நிறைவேற்ற எண்ணுபவற்றை முதலில் தீர்மானம் செய்து கொள்க; அவற்றை மனத்திற் கொள்க; சரியான பாதையில் செல்லுகின்றீர்களா என்ப தைச் சரிபார்த்துக்கொண்டே இருந்திடுக; உங்கள் குறிக்கோளை எந்த அளவு அணுகி வருகின்றீர்கள் என்பதைக் காண மதிப்பீடு செய்துகொண்டே இருந்திடுக. இவற்றுக்கு மேலாக, இந்த நோக்கங்கள் யாவும் இயன்ற வரையில் சிறுவர்களுடையனவாக இருக்கட்டும்; இந்த நோக்கங்கள் நிறைவேறுவதற்கு மாணு க் கர்கள் இத்திட்டங்களில் துணைபுரியட்டும். தொடக்க அறிவியலும் இயற்கைப் பாடமும் : முதல்நிலைப் பள்ளியில் அறிவியல் பாடத் திட்டத்தை தொடக்க அறிவியல்' என்று வழங்கு வதா அல்லது இயற்கைப்பாடம்' என்று பெய ரிடுவதா என்பது நீண்டகாலமாகவே வாதத் திற்கிடமாக (controversy) இருந்துவந்தது; இன்றும் இருந்து வருகின்றது. சில பள்ளிகள் இயற்கைப்பாடத் திட்டங்களைக் கொண்டுள் ளன ; அத்திட்டங்கள் மிகச் சிறந்தனவாகவும் உள்ளன. அவர்கள் அறிவியலை மிக விரிந்த பொருளில் பயிற்றி வருகின்றனர் ; தம்முடைய பாடத்திட்டங்களே அவர்கள் இயற்கைப் பாடம்' எனத் தொடர்ந்து வழங்கி வந்தபோதிலும், தம்முடைய உள்ளத்தில் மிகவும் நவீன குறிக் கோள்களைக் கொண்டுள்ளனர். வேறு சில பள்ளிகளில் அப்பாடத் திட்டங்கள் தொடக்க அறிவியல்’ என வழங்கப்.ெ ப று கி ன் ற ன : ஆனல், அது செயற்படுவதற்குக் காரணமாக வுள்ள தத்துவம் பழமைப் பட் ட த க ேவ உள்ளது; அது தொடக்கத்திலிருந்த மிகக் குறுகிய இயற்கைப்பாட நோக்கத்தையே கொண்டுள்ளது. இதிலிருந்து அதன் உள்ளு றையைப் (content) போலவும் நிகழ்ச்சி நிரலில் நடைமுறையில் மேற்கொள்ளப் பெறும் முறை யைப்போலவும் பெயர் அவ்வளவு முக்கியம் அன்று என்பது பெறப்படுகின்றது. இயற்கைப் பாடம் என்ற கருத்திலிருந்து எடுத்த அறிவியல் பாடத் திட்டங்களும் நாம் அண்மைக் காலங் களில் அறிந்துகொண்டவற்றுள் மிக நல்லன. A. பொது அறிவியல் வற்றைக்கொண்டு அவற்றின்மீது அமைத்த வையும் இன்று மிகவும் பயனுடையனவாக உள்ளன. இரண்டிற்கும் இடையேயுள்ள வேற் றுமைகள் பெயரில் இல்லாததால், தொடக்க அறிவியல் பாடத்திட்டங்கள் இயற்கைப் பாடத் திட்டங்களைவிட விரித்த நோக்கத்துடன் இருக்கக் கூடியனவாகவும் கிட்டத்தட்ட அதிக மாகவே நவீன தேவைகட்குப் பொருத்த மானவையாகவும் உள்ளன. இக்குறிப்பிற்கு விளக்கம் : இயற்கைப் பாடம்’ என்ற கருத்து ஒரு பாறை அல்லது மரம் போன்ற ஒரு பொருளைப்பற்றிய பாடத்தை வலியுறுத்துகின்றதேயன்றி, பாறை உண்டாதல் அல்லது காட்டுத்துறை (forestry) போன்ற விரிவான பிரச்சினையைக் கூறுவதாக இல்லை. அது பாறைகளையும் மரங்களையும் இனங்காண் பதை வலியுறுத்துவதாக உள்ளதேயன்றி அதனை ஒரு முடிவிற்கு வழியாகக் கொள்வ தில்லை. அது சிருர்களின் வாழ்வில் உண்மை யாகத் தொடர்புள்ள பிரச்சினைகளைப்பற்றிய பாடமாகவோ அல்லது அறிவியல் துறை முழுவதும்பற்றிய பாடமாகவோ இருப்பதற் கில்லை; ஆனல் அது தாவரங்களையும் பிராணி களையும்பற்றிய பாடமாகவே இருக்கும் நிலையில் உள்ளது. சிறுவர்களுடன் பழகி நாம் கொள்ளும் அனுபவம் அவர்கள் தம் சூழ் நிலையிலுள்ள எல்லாக் கூறுகளிலும் அக்கறையுள்ளவர்களாக உள்ளனர் என்பதைக் காட்டுகின்றது. இயற் கைப் பாடம்பற்றிய இந்தச் சுருக்கவுரையி னின்றும் தொடக்கத்திலுள்ள இயற்கைப் பாடம் என்ற கருத்தின் இடத்தை நவீன சிறுவர்களின் தேவைகளுக்குப் பொருத்தமான ஒரு திட்டம் பெற்றுள்ளது என்பது தெரிகின்றது. இன்று சிறுவர்களும் சிறுமியரும் வாழும் உலகம் அண்மைக் காலத்தில் அதிகமாக மாற்றம் அடைந்துள்ளது; அங்ங்ணமே அவர்களது பாடத் திட்டங்களும் மாற்றம் அடைய வேண்டும். -

எனினும், இயற்கைப் பாடக் கருத்திலிருந்து நம்மைச் சுற்றிலுமுள்ள வாழ்க்கையைப்பற்றிப் படிப்பதோ கேட்பதோ இன்றி அதனை உற்று நோக்கி நேரடியான அனுபவத்தைப் பெறுவதன் முக்கியத்துவத்தை உண்மையாகவே உணர் கின்ருேம். தாவரங்களின் வகைகளையும் பிராணி களின் வகைகளையும், பிராணிகள் வாழும் இடங் களையும், உயிர்வாழ் பிராணிகளிடையேயுள்ள இடைத் தொடர்பு முறைகளைக் காட்டும் இடங்

5