பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A. பொது அறிவியல் பாதுகாப்பு விதிகளில் சில. எவ்வளவுக் கெவ் வளவு இளமையிலேயே இத்தகைய சிந்தனையில் உறவு கொள்ளுகின்ருேமோ அவ்வளவுக் கவ்வளவு நன்மையும் உண்டு. மேலும், நாம் சிறுவர் சிறுமியரின் கவர்ச்சிகளை விரிந்த நோக்குடையனவாக ஆக்க விரும்பு கின்ருேம். அவர்கள் தம்மைச் சுற்றியுள்ள பல பொருள்களைப்பற்றியும் இயல்பாகவே அறி வார்வமுடையவர்களாகவே காணப்பெறுகின் றனர்; ஆனால் அவர்களுக்கு உலகின் செம்பாதிப் பொருள்களைப்பற்றி ஒன்றுமே தெரிவதில்லை; ஆகவே அப்பாதிப் பொருள்களைப்பற்றி அவர் கள் அறிவார்வமாக இருத்தல் இயலாது, ஆரும் படிவத்தில் விண்மீன்களைப்பற்றிய ஒரு பாடம் ஒரு புதிய துறையில் கவர்ச்சியை எழுப்பக்கூடிய தாக இருக்கலாம். அஃது ஒரு சிலரிடம் நீடித்து நிற்கக்கூடிய கவர்ச்சியாகவும் மாறலாம். தாவரங்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதைப் பற்றிய ஒரு பாடம் தாவரப் பண்ணையில் ஓர் அக்கறையை எழுப்பலாம்; இ ல் லை .ே ய ல் அந்த அக்கறை அழுந்தியே கிடந்துவிடும். சிருர்களின் கவர்ச்சிகள் பிராணிகள், தாவரங்கள் இவற்றின் வாழ்க்கையைப்பற்றி அமையும் என்று ஒரு காலத்தில் கருதி வந்தது போலன்றி, சூழ்நிலையின் எல்லாக் கூறுகளி லுமே அவர்களின் கவர்ச்சிகள் செல்லும் என்று குழந்தைகளின் கவர்ச்சிகள்பற்றிய ஆராய்ச்சி கள் காட்டுகின்றன. எனினும், சில மாளுக்கர் கள் ஏறத் தாழக் குறுகிய கவர்ச்சிகளையுடையவர் களாகக் காணப்பெறுகின்றனர் ; வேறு கவர்ச்சி களைக் காணுவதில் இவர்கட்குத் துணை தேவைப் படுகின்றது. ஒரு சிறுவனின் பள்ளியனுபவத் தின் தொடக்கத்திலேயே வாளுள் முழுவதும் நீடிக்கக் கூடிய கவர்ச்சிகள் தோன்றுகின்றன ; பல அறிவியலறிஞர்கள் தாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்திலேயே தமது அறிவியல் கவர்ச்சிகள் தோன்றியனவாகக் கூறுகின்றனர். முதல்நிலைப் பள்ளியில் நன்முறையில் அறிவியல் பயிற்றலை மேற்கொண்டு இத்தகைய நல் விளைவு களே அதிகமாகப் பெறலாம். இன்னும், நாம் நம் மாணுக்கர்கள் தம்மைச் சுற்றியுள்ள பொருள்களை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் விரும்புகின்ருேம். இளஞ்சிறர்கள் எங்ங்னம் பொருள்களைப் புரிந்து கொள்ளத் தொடங்குகின்றனர்? இயற்கை அழகு க ளே ப் பற்றிய சிறு பகட்டுரைகளால் (sermons) அதிகப் பயனென்றும் விளையப்

போவது இல்லை. அழகுடைய வணணுத்திப் பூச்சிகள், தேனிக்கள், மலர்கள் இவற்றைப் பற்றிய தெளிவற்ற பேசசு அதிகமாகத் துணை செய்யாது. சிறர்கள் பொருள்களைப் புரிந்து கொள்வதில் துணைபுரியும் வழிகளைக் கற்கும் நாம் அவர்கட்குத் தம்மைச் சுற்றியுள்ள உல கினைப் பார்க்கவும், கூர்ந்து நோக்கவும், கருத் துடன் தேர்ந்தாராயவும், அங்கு என்ன வியப் பூட்டும் கூறுகள் உள்ளன என்பதைக் கண்டறி யவும் கற்பிக்க முயல வேண்டும். மனிதனலும் திரும்பச் செய்ய முடியாத உற்பத்திச் செயல் ஒன்று சாதாரண இலையொன்றில் நடைபெற்று வருகின்றது. இச்செயலில் பயன்படும் தொழில் மூலப் பொருள்கள் (raw materials) நீரும் கரிய மிலவாயுவும் என்றும், இலையிலுள்ள பச்சை நிறப் பொருள் இச்செயலுக்கு மிகவும் இன்றி யமையாதது என்றும், கதிரவன் ஒளியின்றி இது நிகழ முடியாது என்றும் அவன் அறிந்து கொண் டுள்ளான். இவ்வாறு நிகழும் செயலில் அவன் இறுதி மூலக்கூறு (molecule) வரையிலும் பகுத்தாராயக் கூடும் ஆளுல் அவளுல் அச் செயலைத் திரும்பச் செய்ய முடியாது; அவளுல் அச் செயலை முற்றிலும் புரிந்து கொள்ளவும் இயலாது. மேலும், இச்செயலின்றி வாழ்க்கை யும் நிலை பெற்றிருத்தல் முடியாது. ஒரு சிறுவன் இந்த உண்மைகளைக் கற்கும்பொழுது, அவற் றின் உட்கருத்தினை அனுபவத்தால் அவன் உணரும்பொழுது, அவனது பாராட்டு மேலும் அதிகரிக்கின்றது; சிறப்பாக அவன் உற்சாகமும் நுண்ணறிவும் பாராட்டுப் பண்பும் உள்ள ஆசிரி யருடன் செயல் புரிந்தால் அ வ னி ட ம் இதனைத் தெளிவாகக் காணலாம்.

ஆகவே, ஈண்டுக் கூறியவை யாவும் அறிவியல் பயிற்றலால் நம் பள்ளியில் பயிலும் மாளுக்கர் கள் அடையும் நன்மைகளுள் சில; அறிவியல் ஆசிரியர்கள் இவைதாம் நோக்கங்கள் என்பதை முற்றிலும் அறிந்தால், இவை யாவும் கைவரக் கூடிய முறையில் அறிவியல் பயிற்றப்பெறல் வேண்டும் என உறுதிகொண்டால் இவற்றை மாளுக்கர்கள் பெறுவர். நடை முறைக்கு வாராமல் ஆசிரியர்க் கையேடுகளில் (Manuals) காணப்பெறும் நோக்கங்களால் சிறுவர்கட்கு யாதொரு துணையும் இராது. ஆனல், ஆசிரியர் மனத்திலும் சிறுவர்களின் உள்ளங்களிலுமுள்ள நோக்கங்கள் அவர்கட்குத் துணைபுரிதல் கூடும். அத்தகைய நோக்கங்கள்தாம் பாடப் பொருளைத் தேர்ந்தெடுப்பதிலும், அதனைப் பயிற்றும் முறை

4