பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தாக ஒன்றுசேர்ப்பதலுைம் அவன் இந்தப் .ெ பா து ைம ப் பாட்டினை அறியமுடிகின்றது. எனவே, தமது அன்ருட வாழ்க்கையில் குறுக் கிடக்கூடிய பல புதிர்களுக்குப் பொருள் கான வில் பயன்படவல்ல பொதுமைப்பாடுகளைக் கற்பித்தல் அறிவியலின் ஒரு நோக்கமாகின்றது. எவ்வளவுக் கெவ்வளவு நாம் சிறுவர் சிறுமியரின் வாழ்வில் வேறுபாடுகளை விளைவிக்கவல்ல புதிர் களே ஆ ர ய் வ தி ல் அணுகிவருகின்ருேமோ அவ்வளவுக்கவ்வளவு அறிவியல் திட்டத்திலும் நெருக்கமாக அணுகுகின்ருேம். நம்முடைய சிறுவர்களும் சிறுமியரும் குழம்பிய சிந்தனையாளர்களாக வளர்வதை நாம் விரும்புவ தில்லை. ஆதி முதலில் அறிவியல் பொதுமைப் பாடுகள் எந்த முறையில் கண்டறியப்பெற்ற னவோ அதே முறையிலேயே அவர்களும் சிந் திக்கும் பயிற்சியை அடைய வேண்டும் என்றே நாம் எதிர்பார்க்கின்ருேம். அறிவியல் முறையில் சரியான விடையை அடைவதே அது என்று நாம் அதனை வழங்கலாம். இந்தக் கருத்தில் மிகப் புதிதாக ஒன்றும் இல்லை. எண்கணிதத்தி லும் (Arithmetic)வேறு பாடங்களிலும் இதனைப் பல்லாண்டுகளாக நாம் மேற்கொண்டுதான் வருகின்ருேம் : பிரச்சினையை வரையறை செய்தல், பல்வேறு கருதுகோள்களை எழுப்புதல் சான்றுகளைத் திரட்டுதல், முடிவுகள் காணல், முடிவுகளைச் சரிபார்த்தல் ஆகியவையே இம் முறையின் படிகளாகும். பிரச்சினை வரும் ஒவ் வொரு சமயத்திலும் மாளுக்கர்களை இந்தப் படி கள் ஒவ்வொன்றிலும் செல்லச் செய்ய வேண்டு மென்பது இதன் பொருளன்று. நடைமுறையில் புதிர்களைத் தீர்க்கும் இந்த அறிவியல் முறையில் இந்த முறையணைந்த படி கள் யாவற்றையும் மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. எடுத்துக்காட்டாக : திசை காட்டியின் முள்ளை வடக்கு - தெற்குத் திசைகளைக் காட்டுமாறு செய்வதெது என்பதைச் சிறுவர்கள் அறிந்துகொள்ள விரும்புகின்றனர் என்று வைத்துக் கொள்வோம். முதலில் நாம் அவர்கள் பிரச்சினையை எந்த முறையில் விளக்க மாகக் கூற வேண்டுமோ அந்த முறையில் கூறு கின்றனரா என்பதை உறுதி செய்து கொள்ள வே ண்டும்; அப்பொழுதுதான் சிறுவர்கள் என்ன அறிய விரும்புகின்றனர் என்பது திட்ட மாகத் தெரியும். அதன்பின்னர்தான் சிறுவர் கள் அந்த ஊசி அவ்வாறு நகர்வதற்குத் தாம் சிந்தித்தவற்றைக் கூறுவர். சில விளக்கங்கள் A. பொது அறிவியல் அறிவுக்குப் பொருந்துவனவாக இருக்கும்; சில அறிவுக்குப் பொருந்தாதனவாகவும் இருக்கும். “யாருடைய கருத்து சரி என்பதை நாம் எங்க னம் காண்பது ? என்று நாம் வினவுவோம். மாளுக்கர்கள் இங்ங்னம் கூறுவர் : எங்கள் அறிவியல் புத்தகங்களைப் படியுங்கள். பெளதிக ஆ சிரியர் திரு. ஜாக்ஸனக் கேளுங்கள்,' சோதனை செய்து பாருங்கள் ' என்றெல்லாம் அவர்களின் கூற்றுக்கள் அமையும். அதன் பின்னர் தம் கருத்தேற்றங்களே நிறைவேற்று கின்றனர் ; விளக்கத்தைக் கண்டறிகின்றனர்; தெரிந்த விதிகளைக் (authority) கொண்டு மிகக் கருத்துடன் சரிபார்க்கின்றனர் ; இதன் பின்னர் புதிர் தீர்த்தலால் பெற்ற அறிவினை அவர்கள் பயன் படுத்தலாம். இஃது எளிதா னதுதான் ; புதிர்களைத் தீர்க்கும் முறைக்கு இஃது ஒரு தொடக்கமே. இதனைத் தக்க முறையில் பயன்படுத்தினுல் நல்ல பலன்களை விளைவிக்கும். அறிவுள்ள வழிகாட்டலை மாணுக் கர்கள் பெற்ருல், இம் முறையில் புதிர்களுக்குத் தீர்வு காணும் திறனில் வேகமாக அடிவைத்துச் செல்ல முடியும். ஒரு சிறுவனின் பள்ளியனு பவத்தில் இம்முறையில் தீர்வுகாணும் தொடர்பு மிகத் தொடக்கத்திலேயே ஏற்படல் இயலாது. மிகத் திருத்தமான முறையில் புதிர்களுக்குத் தீர்வு காண்பதற்கு நீண்ட நாள் அனுபவம் வேண்டும். - சிறுவர்களும் சிறுமியரும் அவர்கள் பயிலும் போதே சில அறிவியல் முறைகளில் சிந்தனை செய்ய வேண்டும் என்று நாம் விரும்பு கின்ருேம். எடுத்துக்காட்டாக: நிகழ்ச்சிகள் உடனே நடைபெறுவதில்லை; இயற்கைக் கார ணங்களால் அவை நிகழ்கின்றன; ஆகவே மூட நம்பிக்கையுடன் இருக்காதீர்கள். பிறருடைய கருத்துரைகளை ஏற்பதற்குத் திறந்த மனத்துடன் இருங்கள். நீங்கள் உறுதி என்று கருதும் வரை யில் உங்கள் முடிவுகளைத் தற்காலிகமானவை யாகவே போற்றுங்கள். சான்றுகளுக்கு நம்பக மான மூலங்களை நோக்கி இருங்கள். நீங்கள் தவறு என்பதாகக் கண்டறிந்தால் உங்கள் மனத்தை மாற்றிக் கொள்ளுவதற்கு விருப்பமாக இருங்கள். திடீரென்று முடிவுகட்கு வந்து விடாதீர்கள். எந்தச் செயலுக்கும் அவாத் தூண்டும் நிலையில் இருங்கள் தெளிவற்ற

விளக்கங்களால் மன நிறைவு பெரு தீர்கள். - இவை கருத்துடன் உய்க்கப்பெறும் அறிவியல் ஆராய்ச்சியால் மாளுக்கர்கள் அடையக்கூடிய

3