பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏறக்குறைய தேவையான தீவிரத்தைக் கொண்ட கரைசலை அடைவதற்கு நான்கு பவுண்டு (2 கிலோ கிராம்) எரிசோடா (Caus: soda) 1 காலன் (5 லிட்டர்) நீரில் கரைக்கப் பெறுகின்றது. அதன் பிறகு தேவைப்படுங் கால் அதில் நீர் சேர்த்துக் கொள்ள பு பெறுதல் கூடும். 15. துருவத்தைக் காணும் தாள் : ஒரு சில சொட்டுக்கள் ஃபீல்ைஃப்த்தேலின் (Phenolphthalein) Gæ#äs COLBA) Gsrgulli சல்ஃபேட்டுக் கரைசலில் மையொற்றுத் தாள் ஊறவைக்கப்பெறுகின்றது. இத்தாளைப் பயன் படுத்துவதற்குமுன்னர் அதை ஈரமாக்குக; சிறிது தூரத்திற்கப்பாலிருந்து கம்பிகளே அதன் மீது வைத்திடுக. எதிர்த் துருவத்தால் தொடப் பெறும் தாள் செந்நிறத்தை அடைகின்றது. 16. மின்முலாம் பூசும் கரைசல்கள் : (அ) தாமிரம் : கிட்டத்தட்ட 100 கிராம் தாமிர சல்ஃபேட்டுப் படிகங்கள் ஏறக்குறைய 300 மில்லி லிட்டர் நீரில் கரைக்கப்பெறுகின் றன; அதன் பிறகு 6 கிராம் பொட்டாசிய பைசல்ஃபேட்டும், 5 கிராம் பொட்டாசிய சயனைடும் சேர்க்கப்பெறுகின்றன. அந்தக் கரைசல் 450 மில்லி லிட்டராக்கப்பெறுகின் றது. (கரைசல் தயாரிக்கப்பெறுங்கால் அது குளிர்ந்த நிலையில் வைக்கப்பெறுதல் வேண் டும்.) (ஆ) வெள்ளி : கிட்டத்தட்ட 20 கிராம் சோடியம் சயனைடும் (நஞ்சு), 40 கிராம் படிக நிலையிலுள்ள சோடியம் கார்பனேட்டும் ஏறக் குறைய 500 மில்லி லிட்டர் நீரில் கரைக்கப் பெறுகின்றன. சுமார் 20 கிராம் வெள்ளி நைட்ரேட்டு 250 மில்லி லிட்டர் நீரில் தனி யாகக் கரைக்கப்பெறுகின்றது. இரண்டாவது கரைசல் முதலாவதுடன் மெதுவாகச் சேர்க்கப் பெற்று அக்கலவை 1 லிட்டராக்கப்பெறுகின் நிறது. (கரைசல்களின் வழியாகச் செலுத்தப்பெற வேண்டிய மின்ளுேட்டம் உலோகம் படியப்பெற வேண்டிய மின்-வாயின் பரப்பைப் பொறுத்தது. அது 100 (செ.மீ.) க்கு 2 ஆம்பியருக்கு மேல் அதிகமாதல் கூடாது. மின்-வாய் சிறிதாக இருப்பின் அதற்கேற்ப மின்னேட்டத்தின் ஆசிரியருக்கான சில பயன்படும் குறிப்புக்கள் அளவும் விகித முறையில் குறைந்திருக்க வேண்டும். படிந்த உலோகம் மங்கலாகக் காணப்பெறும். அஃது ஒர் எலும்பாலான சிறு துடுப்பு (Spaula) அல்லது வேறு ஏதாவது கெட்டியானதும் மழமழப்பானதுமான உலோக மல்லாத மேற்பரப்பிளுல் தேய்த்து மெருகிடப் பெருதவரை அது பளபளப்பாக ஒளிரும் தோற்றத்தைப் பெறுவதில்லை.) 17. வெள்ளிமுலாம் பூசும் கரைசல் (பிரகாசமாக ஒரு வெள்ளி ஆடியைக் கண்ணுடியின்மீது படியச் செய்வதற்காக): முதலில் 12.5 கிராம் வெள்ளி நைட்ரேட்டு 100 மில்லி லிட்டர் நீரில் கரைக்கப்பெறுகின் றது; 32.5 கிராம் சோடியம் பொட்டாசியம் டார்ட்டரேட்டு தனியாக 100 மில்லி லிட்டர் நீரில் கரைக்கப்பெறுகின்றது. இரண்டு கரை சல்களும் சேர்க்கப்பெற்று, 55°C வெப்பநிலை வரையில் வெதுவெதுப்பாக்கப்பெற்று அதே வெப்ப நிலையில் 5 நிமிடங்கள் வைக்கப்பெறு கின்றது. அதன்பிறகு அந்தக் கலவை குளிர் விக்கப்பெற்று, திரவம் வீழ்படிவினின்றும் (Precipitate) ஊற்றப்பெற்று 200 மில்லி விட்டர் கரைசலாக்கப்பெறுகின்றது. இது A கரைசல், இரண்டாவதாக, 15 கிராம் வெள்ளி நைட் ரேட்டு 12 மில்லி லிட்டர் நீரில் கரைக்கப் பெறுகின்றது. நீர்த்த அம்மோனியம் ஹைட் ராக்ஸைடு கரைசல் அதனுடன் சேர்க்கப்பெறு கின்றது; முதலில் உண்டாகும் வீழ்படிவு கிட்டத்தட்ட முற்றிலும் திரும்பவும் கரையும் வரையிலும் இக் கரைசல் சேர்க்கப்பெறுகின் றது. இந்தத் திரவம் 200 மில்லி லிட்டராக்கப் பெறுகின்றது. இது B கரைசல். அதன் பிறகு A கரைசலும் B கரைசலும் ஒன்ருகக் கலக்கப் பெறுகின்றன. (வெள்ளிமுலாம் பூசப்பெற வேண்டிய மேற்பரப்பு சிறிதளவேனும் கொழுப் பெண்ணெய் இராதவாறு மிகக் கவனமாகத் து.ாய்மையாக்கப்பெற்ற பிறகு மேற்புறம் கீழிருக் குமாறு கரைசலில் திரவத்தின் மேற்பரப்பிற்குச் சற்றுக் கீழாகத் தொங்கவிடப்பெறுதல் வேண் டும். கரைசல் ஒரு தூய்மையான சோதனைக் குழாயினுள், அல்லது குடுவையினுள் வைக்கப் பெறலாம்; பாத்திரத்தின் உட்புறத்தில் ஓர் ஆடி(Mirror) படியும். வெள்ளிமுலாம் படிவதை விரைவாக்குவதற்காகக் கரைசலை இலேசாக வெதுவெதுப்பாக்குக. 303