பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியருக்கான சில பயன்புடும் குறிப்புக்கள் 18. வெப்பக் கூருணர்வுடைய தாள் : நீரில் கரைந்த கோபால்ட்டு குளோரைடு கரைசல் நீரில் கரைந்த அம்மோனிய குளோ ரைடு கரைசலுடன் சேர்க்கப்பெறுகின்றது. (விகிதங்களைப்பற்றி அக்கறை இல்லை.) கரைசல் இளஞ் சிவப்பாகும்வரையிலும் நீர் சேர்க்கப்பெறுகின்றது. இந்தக் கரைசலில் நனைக்கப்பெற்று உலர வைக்கப்பெற்ற வடி தாள் கிட்டத்தட்ட நிறமற்றதாகக் காணப் பெறுகின்றது; ஆளுல் வெப்பமாக்கப்பெறுங் கால் அது தெளிவான பச்சை நிறமாக மாறும். 19. பொதுத் தேவைகட்குரிய சீமைக் காரைகள்: இப்பொழுது பல பிரத்தியேகமான சீமைக் காரைகள் (Cements) சந்தையில் கிடைக்கின் றன. அவை கிடைக்காதபொழுது ஆய்வகத்தில் அடியிற்கண்டவைகள் எளிதில் தயாரித்துக் கொள்ளப்பெறுதல் கூடும் : அமிலம் அரிக்கா சீமைக் காரை 1 பகுதி இரப்பர்க் கரைசல் 2 பகுதிகள் ஆளிவிதை எண்ணெய் 3 பகுதிகள் பொடியாக்கப்பெற்ற களிமண் (Pipeclay). - நீர்ப் பொருட்காட்சிசாலைக்குரிய சீமைக்காரை (அ) பொடியாக்கப்பெற்ற கந்தகம், அம் மோனியம் குளோரைடு, இரும்புத் தூள் இவை சம அளவு க ல க் க ப் .ெ ப று கி ன் ற ன. அதன்பிறகு கொதித்த ஆளிவிதை எண் ணெயை அவற்றுடன் சேர்த்து அவை யாவும் நன்ருகக் கலக்கப்பெறுகின்றன. அக்கலவை யுடன் ஈய வெள்ளையைச் (White lead) சேர்த்து ஒரு தடித்த பசையாக்கப்பெறுகின்றது. இந்தக் காரை பாய்ம நிலையில் (Fluid state) இருக் கும்பொழுது பயன்படுத்தப்பெறுதல்வேண்டும். (ஆ) ஈயச் செந் தூரத்தை (Red lead) போது மான அளவு கஞ்சியுடன் (Gold size) கலந்து ஒரு மென்மையான பசையாகச் செய்து உடனே அதனைப் பயன்படுத்துக. அது நன்கு படியும் பொருட்டு சில நாட்கள் அப்படியே விட்டு விடுக; இதனைப் பயன்படுத்துவதற்கு முன்னர் நீர்ப் பொருட்காட்சிச் சாலையைக் கழுவுக. செல்லுலாய்டு சிமைக்காரை செல்லுலாய்டு துணுக்குகள் அசிட்டோன் (Acetone) அல்லது அமில் அசிட்டேட்டில் கரைக்கப்பெறுதல் கூடும். சிறிய மின் சேமக் கலன்களைச் செய்யும்பொழுது இந்தச் சீமைக் காரை பயன்படுகின்றது. இரும்புக்கான சிமைக்காரை - 90 பகுதிகள் நுண்ணிய இரும்புத் தூள் 1 Lóš 3,5553 grair (Flowers of sulphur) 1 பகுதி அம்மோனியம் குளோரைடு பயன்படுத்துவதற்கு முன்பு இவற்றை நீருடன் கலந்து ஒரு பசை போலாக்குக. மெழுகுகள் சேட்டர்ட்டன் கூட்டுப்பொருள்கள் 1 பகுதி ஆர்ச்சேஞ்சல் தார்வண்டல் (Pitch) 1. பகுதி பிசின் இவற்றை ஒன்றுசேர்த்து உருகச் செய்து மூன்று பகுதிகள் சிறு துண்டுகளாகவுள்ள கிரெப் இரப்பரைச் (Crepe rubber) சேர்த்திடுக. ஃபாரடே இமைக்காரை 5 பகுதிகள் பிசின் 1 பகுதி தேன் மெழுகு 1 பகுதி மஞ்சள் களிமண் (Ochre) பிசினையும் மெழுகினையும் ஒரு தகரக் கலத்தில் ஒன்ருகச் சேர்த்து உருகச் செய்து மஞ்சள் களிமண்ணுல் நன்ருகக் கிளறிவிடுக. வுட் உலோகக் கலவை (உருகு நிலை 70° C) 2 பகுதிகள் காரீயம் 4 பகுதிகள் வெள்ளியம் 8 பகுதிகள் பிஸ்மத் 2 பகுதிகள் காட்மியம் டார்செட் உலோகக் கலவை (உருகு நிலை 70°C) 5 பகுதிகள் காரீயம் 3 பகுதிகள் வெள்ளியம் 8 பகுதிகள் பிஸ்மத் 20. வணிக ஒட்டுப்பொருள்கள் : இன்று பிரத்தியேகமான பயன்களுக்கென்று பல்வேறுவித பசைகள் கிடைக்கின்றன. அவற்றைக் கவனமாகத் தேர்ந்தெடுத்தல் பயனுடையதாகும். பீங்கான், கண்ணுடி, உலோகக் குவளை இவை யாவும் பீங்கான் சீமைக்காரையால் ஒட்டப்பெறுதல் கூடும். 304