பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆளுல், செப்பனிடப்பெற்ற பொருள்கள் சூடான நீரில் வைக்கப்பெறக் கூடியனவாக இருப்பின் முற்றிலும் திருப்திகரமான விளைவு கள் மட்டிலும் அரால்டைட்டு (Araldite) போன்ற எபாக்ஸி பிசின்களினின்றுமே (Epoxy resins) கிடைக்கின்றன. கிட்டத்தட்ட எந்தப் பொருளாலும் காகிதமும் அட்டையும் ஒட்டப்பெறுதல் கூடும். மிகத் தூய்மையாகவும் மிக எளிதாகவும் பயன்படுத்தக் கூடியவை செடி வகையைச் சார்ந்த பசைகளாகும்; அவற்றுள் க்ராய்ட் எண் 22, க்ரிப்ஃபிக்ஸ், ஸ்டெஃபிக்ஸ், க்ளாய் இவை குறிப்பிடத் தக்கவை. துணிகள் தோல், கம்பளம் இவை இரப்பர்ப் பின்னல் தட்டிப் பசைகளால் (Lattice glues) மிக நன்ருக ஒட்டப்பெறுகின்றன; அவற்றில் காப்பி டெக்ஸ், ஃபேப்ரெக்ஸ், ஜிஃபிடெக்ஸ் ஆகியவை யும் அடங்கும். பிளாஸ்டிக்ஸை ஒட்டுவது மிகவும் கடின மானது; அதுவும் பாலித்தீனைப் போன்றதில் இயலவே இயலாது. பிளாஸ்டிக்ஸைப் போன்ற அடிப்படைப் பொருளாலமைந்த சீமைக் காரை யுடன் சாதாரணமாக மிக நல்ல விளைவுகள் கிடைக்கின்றன. எ-டு. பாக் அல்லது பிளாஸ்டிடெக்ஸ் போன்ற PVC தகட்டுடன் ஒரு PVC சீமைக்காரை சேர்ந்தது. தகடு களாக்கப்பெற்ற பிளாஸ்டிக்குகளை வேறு பொருள்களுடன் ஒட்டுவதற்கு இறுக்கிப் பிணைக்கும் ஒட்டுப்பொருள்கள் மிகவும் பொருத்தமானவை. ஈவோ ஸ்டிக், ஃபார்மிகா அட்ஹெசிவ் என் பவை இரப்பர்க் கரைசல்களாகும். கைகளினின் றும் அவை பெட்ரோலேக் கொண்டு அகற்றப் பெறலாம். பெரும்பாலும் வீட்டில் பயன்படும் எல்லா ஒட்டுப்பொருள்களும் சோப்புக்கும் நீருக்கும் நீங்கி விடுகின்றன. - மரத்திற்குப் பொருத்தமான பலவகை ஒட்டுப் பொருள்கள் உள்ளன; அவற்றுள் அடியிற் கண்டவை நல்ல எடுத்துக்காட்டுக்களாகும் : வெப்பமான பிராணிப் பசைகள் : பேர்ள் பசை, க்ராய்டு ஏரோ. கேக். பசை, குளிர்ந்த பிராணி மீன் பசைகள்: க்ராய்டு யூனிவர்சல், ட்யூரோ குளு, செக்கோட்டின், லாபேஜின் ஃபிஷ் குளு. ΧΧΧΙΧ ஆசிரியருக்கான சில பயன்படும் குறிப்புக்கள் கேவலின் குளிர்ந்த நீர்ப் பசைகள்: கேஸ்க்கோ, க்ராய்டு இன்ஸால், நெவர்பார்ட்டு. யூரியா பசைகள் : ஏரோலேட்டு, கேஸ்க்கா மைட்டு. PVA குழம்புகள் : கேஸ்கோ PVA, க்ராய்டு, பாலிஸ்டிக், லாபேஜின் ஷாயர் கிரிப், யூனிபாண்டு. பிராணிப் பசையும் குழம்புகளும் (Emisions) குளிர்ந்த நீரை எதிர்த்து நில்லா; பிசின் பசை கள் வெந்நீரில் சிறிது காலத்திற்குத்தான் பயனளிக்கும். கேஸின் பசைகள் வன்மை குறைந்தவை; வெப்பத்தையும் ஈரத்தையும் சுமாராக எதிர்த்து நிற்கும்; ஆணுல், அவை சில மரங்களைக் கறைப்படுத்தும். பொருள்கள் ஒட்டுவதற்குக் காலம் ஆகின் றது. எவ்வளவுக்கெவ்வளவு பசையைத் தயாரிப்பதற்கும் தடவுவதற்கும் அக்கறை எடுத் துக்கொள்ளப்பெறுகின்றதோ அவ்வளவுக் கவ்வளவு பலன் நன்ருக இருக்கும். 21. நிலைமின்னியல் சோதனைகட்குரிய காப்பிடு பொருள் : ஒரு நீர்த்த தொட்டியால் சூழப்பெற்றுள்ள ஒரு குவளையில் சிறிதளவு பாரஃபின் மெழுகின உருகச் செய்திடுக. கந்தகத் தூளை அதில் சேர்த்து ஒரு பசை போன்ற பொருள் உண் டாகும் வரையிலும் கிளறுக. அதன்பிறகு இப் பொருள் ஒரு குடுவையின் கழுத்திற்குப் .ெ பா ரு ந் து ம | று உருவாக்கப்பெறலாம்; தேவைக் கேற்றவாறு தகடுகளாக வார்ப்பு உருவமாக்கப்பெறலாம். 22. கண்ணருகு வில்லயின் குறுக்குக் கம்பிகன் ஈடு செய்தல் : - இழுக்கப்பெற்ற கண்ணுடிக் குழல், ஒரே இழையுள்ள நைலான் (ஒரு நைலான் பொருளைச் சிக்கறுத்ததால் பெற்றது), அல்லது சிலந்தி வலை இவை யாவும் இச் செயலுக்குப் பயன்படுத்தப்பெறுதல் கூடும். கருவியினின் றும் தாங்கும் வளையத்தை அகற்றுக. நூல் இழையைப் பிடித்துக் கொள்ள ஒரு சட்டம் இயற்றுவதற்கு ஒரு U-வடிவத்தில் தாமிரக் கம்பியை வளைத்திடுக; இங்ங்ணம் வளைத்திடுங் கால் அதன் புயங்கள் வளையத்தின் குறுக்கு 305