பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியருக்கான சில பயன்படும் குறிப்புக்கள் விட்டத்தைவிட கிட்டத்தட்ட 1 செ.மீ.க்கு அப் பால் அமைந்துள்ளன. புயங்களை நூல் இழைக் குக் கீழே வைத்து, முனைகளை முறிப்பதற்கு முன்னதாக நூல் இழையைப் புயங்களுடன் ஒரு தீவிரமான ஒட்டுப் பொருளைக்கொண்டு ஒட்டிவிடுக. இப் பொ ழு து சட்டத்தை உயர்த்தித் தாங்கும் வளையத்திற்கு மேல் நூல் இழையைச் சரியான இடத்தில் வைத்திடுக. அதனை ஒட்டுப் பொருளால் பொருத்தி முனை களை ஒழுங்காகக் கத்தரிப்பதற்கு முன்னதாக அதனே உலரவிடுக. - சி ல ந் தி வலை பயன்படுத்தப்பெற்ருல், இழையை வலையினின்றும் எடுப்பதற்கு முன் சட்டத்திலும், அதனைச் சரியான இடத்தில் வைப்பதற்கு முன் தாங்கும் வளையத்திலும் ஒட்டுப்பொருளை வைத்தல் மிகவும் மேலானது. ட்யூரோஃபிக்ஸ், சென்டோஃபிக்ஸ், செக் கோட்டின் இவற்றினின்றும் திருப்திகரமான நூல் போன்ற இழை செய்யப்பெறுதல் கூடும்; இவற்றுள் ஒன்றன் ஒரு சிறிய உருண்டையான பொருள் ஒரு தாளின்மீது வைக்கப்பெற்று, அறைகுறையாக உலரவிடப்பெற்று இஃது இயற்றப்பெறுகின்றது. இந்தச் சிறிய உருண் டைப் பொருளை ஒரு குண்டுசியால் அல்லது குழலின் கூர்நுனியால் தொட்டு அதனின்று மிக மெல்லிய பசையிழைகள் இழுக்கப்பெறுதல் கூடும். பொருத்தப்பெறும் செயல் தாங்கும் வளையத்தில் மேற் கொள் ளு வ தற்கு ம், குறுக்குக் கம்பிகள் நேராக இணைக்கப்பெறு வதற்கும் சிறிதளவு பயிற்சி தேவைப்படினும் இக் கம்பிகள் அதன் பிறகு முன்போலவே பொருத்தப்பெறுதல் கூடும். 23. பற்ருக வைத்து இணைத்தல்: பற்ருசு (Solder) என்பது 66 சதவிகிதம் வெள்ளியமும் 34 சதவிகிதம் காரீயமும் சேர்ந்த ஓர் உலோகக் கலவை (Alloy) ஆகும், அஃது இரண்டு உலோகங்களுக்கிடையே பொறி நுட்ப இணைப்புக்களையும் மின்சார இணைப்புக்களையும் செய்வதற்குப்பயன்படுத்தப்பெறுகின்றது. அது பொதுவாக கோல்கள் அல்லது குச்சிகள் வடி வில் பெறப்படுகின்றது. அது 'பிட்' (Bit) என வழங்கப்பெறும் ஒரு கூரான தாமிரக் கட்டை யின் நுனியினின்றும் உருகிய நிலையில் பயன் படுத்தப்பெறுகின்றது. அது மின்சா , முறை யில் சூடாக்கப்பெறுகின்றது. இதற்குப் பொது வாக 75 வாட் அடுப்பு போதுமானது; அல்லது அது ஒரு புன்சென் சுவாலையில் சூடாக்கப் பெறலாம். †: சூடாக்கப்பெறுவதற்கு எந்த முறை மேற் கொள்ளப்பெறினும், சுரண்டியோ அல்லது ஒரு திரவ இளக்கியில் (Flux)தோய்த்தோ பிட்'டின் மேற்பரப்பு தூய்மையாக்கப்பெறுதல் வேண் டும்; இல்லாவிடில் பற்ருசு அதில் ஒட்டாது. சரியான வெப்பநிலை எய்தப்பெற்றதும், குச்சி யினின்றும் வைக்கப்பெறும் ஒரு சிறிது அளவு பற்ரூசு பிட் முழுவதும் பாய்ந்து செல்லுகின் றது. உண்மையான இணைப்பினை ஏற்படுத்து வதற்கு முதல் நிலையாகவுள்ள இச் செய்முறை (Process) “Fuitò geir56ö” (Tinning) sr.sirp வழங்கப்பெறுகின்றது. இணைக்கப்பெறவேண்டிய மேற்பரப்புக்களும் தூய்மையாக்கப்பெற்று ஈயம் பூசப்பெறுதல் வேண்டும். இதில் பொருளின்மீது சூடான தாமிர, பிட்"டைப் பிடித்துக்கொள்வதால் வெப்பம் தரப்பெறுகின்றது. பற்ருசு பாயத் தொடங்கியதும் பிட்'டின் நுனியால் இலே சாகத் தேய்த்து அதனைத் தேவையான பரப்பு முழுவதிலும் பரவச்செய்யலாம். இரண்டு மேற்பரப்புக்களும் ஈயம் பூசப் பெற்றதும் அவை இரண்டும் அருகில் கொண்டு வரப்பெறுதல் வேண்டும்; அவை தேவையான நிலையில் பிடித்துக் கொண்டிருக்கப்பெறுங்கால் பிட்'டினல் மீண்டும் வெப்பம் தரப்பெறு கின்றது. இரண்டு மேற்பரப்புக்களினின்றும் பற்ருசு சேர்ந்தாற்போல் ஓடுகின்றது ; அது குளிர்வடைந்து உறுதியான இணைப்பாகின்றது. இயல்பாக பெரிய பரப்புக்களுக்கு அதிக வெப்பம் தேவைப்படுகின்றது; பொருளைத் தேவையான வெப்பநிலைக்குக் கொணர்வதற்கு ஒரு சுவாலை யைப் பயன்படுத்தவேண்டிய இன்றியமை யாமையும் ஏற்படலாம். -. வெற்றிகரமான பற்ருசு இணை ப் பி ற்கு தூய்மை, இளக்கி, வெப்பம் ஆகிய மூன்றும் மிகவும் முக்கியமானவைகளாகும். @sit&&ssir (Fluxes): குங்குவியம் (Rosin) சிறப்பாகத் தாமிரம், பித்தளை, தகரத் தகடு ஆகியவற்றிற்கு மிக 306