பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிகமாகப் பயன்படும் இளக்கி (Flux) ஆகும். ஆனல் அஃது இரும்பு, எஃகு இவற்றிற்குத் திருப்தியளிக்கக் கூடியதன்று. வீரியமற்ற துத்தநாகக் குளோரைடு (Dead Zinc Chloride) 95be95 Qārśious பெற்ற சாராய வகைகள் ( Killed spirits) மிக எளிதாகப் பயன்படும் இளக்கியாகும்; ஆளுல் அஃது அரிக்குந் தன்மை வாய்ந்தது; ஆகவே அதனை மின்சார வேலையில் தவிர்த்தல் மிக நன்று. ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை துத்தநாகத் துண்டுகளின்மீது ஊற்றி எல்லாச் செயலும் அடங்கும்வரையிலும் காத் திருந்து அஃது எளிதாகத் தயாரிக்கப்பெறு கின்றது. அதன் பிறகு அத்திரவம் ஒரு கழுத்த கன்ற கொள்கலத்தினுள் வடிகட்டப்பெறுதல் கூடும். - பிரத்தியேகமான செயல்களுக்கென்று பல வணிக இளக்கிகள் உள்ளன. ஃபிளக்சைட் என்பது எல்லாப் பொதுச் செயல்கட்கும் பயன் படக்கூடிய மிகச்சிறந்த இளக்கியாகும். இன்று, பற்ருசுப் பசை என்ற ஒரு வித இளக்கி எங்கும் கிடைக்கின்றது. பற்ருசும் இளக்கியும் கலந்த சேர்க்கைப் பொருள் ஒரு தூரிகையைக் கொண்டு தடவப்பெறுகின்றது; ஒரு திருப்திகரமான இணைப்பினை உண்டாக்கு வதற்குப் பற்ருசுக் கோலின் (Soldering iron) வெப்பம் மட்டிலுந்தான் தேவை. காரீயத்தைக் காரீயத்துடன் இணைப்பதற் கும் அல்லது பித்தளையைக் காரீயத்துடன் இணைப்பதற்கும் விலங்கின் கொழுப்பு (Tallow) பயன்படுத்தப்பெறுகின்றது; பித்தளை, தாமிரம் தகரத் தகடு, துத்தநாகம் இவற்றின் இணைப்பு கட்கு குங்குலியம் அல்லது கொல்லப்பெற்ற சாராய வகைகள் பயன்படுத்தப்பெறுகின்றன; கொல்லப்பெற்ற சாராய வகைகள் இரும்பு, வெள்ளி இணைப்புகட்குப் பொருத்தமானவை, பற்ருசிளுல் இணைத்த பிறகு இந்தக் கொல்லப் பெற்ற சாராய வகைகள் நீரினலும் குங்குலியம் அ ல் ல து ஃபிளக்சைட் மெத்திலேடட் ஸ்பிரிட்டாலும் கழுவப்பெறுதல் வேண்டும். 24. கரும்பலகைக்குக் கறுப்புப் பூசுதல் : கீழ்க்கண்ட பொருள்களைப் பயன்படுத்தி கரும்பலகை திருப்தியான முறையில் ஒழுங்கு செய்யப்பெறுகின்றது: - ஆசிரியருக்கான சில பயன்படும் குறிப்புக்கள் 100 கிராம் அவல் அரக்கு 1000 மில்லிவிட்டர் சாராயம் 100 கிராம் பொடியாக்கப்பெற்ற நுரைக்கல் 100 கிராம் நசுக்கப்பெற்ற புகைக் கரி அவல் அரக்கு கரைவதற்குச் சிறிது நேரம் ஆவ தால் சாராயமும் அவல் அரக்கும் முதலில் கலக் கப்பெறுதல் வேண்டும். புகைக் கரியுடன் கலப் பதற்கென சாராயத்தின் ஒரு பகுதி தனியாக எடுத்து வைக்கப்பெறுதல் வேண்டும். இந்தக் கலவை பின்னர் மென்துகில் சல்லடையின் வழி யாக வடிகட்டப்பெற்று அவை யாவும் பயன் படுத்தப்பெறுவதற்கு முன்னர் மிக நன்ருகக் குலுக்கப்பெறுதல் வேண்டும். 25. இருண்ட கறுப்பு: இஃது ஒளி ஆய்கருவியின் உட்புறம் வண்ணப் பூச்சு செய்யப் பயன்படுகின்றது; இத ளுல் தேவையில்லாத ஒளித் திருப்பம் அடையும் ஒளிநீங்கப்பெறுகின்றது; கதிர்கள் குறைவாகப் பரவி விரவுமாறு செய்யப்பெறுகின்றன; பிம்பங் கள் தெளிவாகச் செய்யப்பெறுகின்றன. புகைக் கரி கஞ்சியுடன் (Gold size) கலக்கப் பெற்று விடாமல் கிளறிக்கொண்டே கற்பூரத் தைவம் சேர்க்கப்பெறுகின்றது, இந்தக் கலவை ஒரு பூச்சாகப் பயன்படுத்தப்பெறு வதற்கேற்பப் போதுமான அளவு மெல்லிய தாகும் வரையில் கற்பூரத் தைலம் சேர்க்கப் பெறுகின்றது. 26. ஃபுளோரோசின் கரைசல் : (ஒரு நீர்த்த ஃபுளோரோசின் கரைசலின்வழி யாகச் செல்லும் ஒரு கதிரின் சுவடு மிகத் தெளி வாகக் காணப்பெறுவதற்கு இது மிகவும் பயன் படத்தக்கது.) ஒரு கிராம் ஃபுளோரோசினை 100 மில்லிலிட்டர் தொழிற்சாலை ஸ்பிரிட்டில் அல் லது மெத்திலேடட் ஸ்பிரிட்டில் கரைக்கப் பெறுகின்றது. 27. கண்ணுடியை வெட்டுதல்: (அ) கண்ணுடித் தகடு : முதலில் கண்ணுடி யைக் கிடத்துவதற்குரிய ஒர் உறுதியான, தட்டையான மேற்பரப்பினை ஆயத்தப்படுத்துக; கம்பளம் அல்லது கம்பள மெத்தை (Felt) பரப்பப்பெற்ற ஒரு மேசை இதற்குத் திருப்தி கரமானது. 307