பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியருக்கான சில பயன்படும் குறிப்புக்கள் ஒரு வரைகோலைப் பயன்படுத்தி வைரம் அல்லது கண்ணுடி வெட்டும் கருவியை உறுதி யாகப் பிடித்துக்கொண்டு தேவையான கோட் டின்மீது ஒரு கீறலை இடுக. கண்ணுடித் தகட் டினைத் தலைகீழாகத் திருப்பி வைத்துக்கொண்டு வெட்டும் கருவியின் மரப் பிடியால் கீறல் கோட் டின் நெடுக இலேசாகத் தட்டுக. இது கோட் டின் நெடுகப் பிளவினை விளைவிக்காவிடில், மீண்டும் தகட்டினத் திருப்பிக்கொண்டு கீற லின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு கையில்ை இறுகப் பற்றிக்கொண்டு இக் கோட்டினைக் கீலாக (Hinge) வைத்துத் துணிவாக அதனை வளைத்திடுக. (ஆ) கண்ணுடிக் குழல் : ஒரு கண்ணுடிக் கத்தியால் குழல் மிக நன்ருக வெட்டப்பெறு கின்றது; இப்பொழுது நிரந்தரமாக நீடித்து நிற்கக்கூடிய கத்திகள் கிடைக்கின்றன. ஓர் அரம் அடிக்கடி பயன்படுத்தப்பெற்றபோதிலும் அது கண்ணுடியில் ஒரு பிளவிற்குப் பதிலாக ஒரு வளைவான பள்ளத்தினைச் செய்கின்றது. தேவையான இடத்தில் ஒரு கீறலைச் செய் திடுக; பெருவிரலுக்கும் சுட்டு விரலுக்கும் இடை யில் வெட்டுவாயின் ஒவ்வொரு புறத்தையும் பிடித்துக்கொண்டு சிறிதளவு குழல் மேல் நோக்கியிருக்குமாறு வளை த் துக் கொண்டு குழலேத் தனியாக இழுத்திடுக. ஒரு மிகச் சிறிய துண்டினை வெட்டுவதற்கு, அதனை ஒரு கையில் பிடித்துக்கொண்டு ஒரு வாயுக் குழலின் திருகு பிடிபோன்ற ஓர் உறுதியான சுழலச்சின்மீது அக்கீறல் இருக்குமாறு வைத்திடுக. ஏதாவது ஒரு கெட்டியான பொருளைக்கொண்டு சிறிய முனையை வேகமாகத் தட்டுக. - அகலமான குழல் ஒழுங்காக வெட்டப்பெறு வதற்கு அதனைச் சுற்றிலும் முற்றிலும் கீறலிடப்பெறுதல் வேண்டும். உருகிய நிலையி லுள்ள ஒரு கண்ணுடிக் கோல் கீறலின் ஒரு பகுதியின்மீது கவனமாக வைக்கப்பெற்ருல் பரிதியைச் சுற்றி ஒவ்வொரு திசையிலும் ஒரு வெடிப்பினை விளைவிக்கும். இரண்டு வெடிப்புக் களும் சரியாக இணையாவிடில், இரண்டு பகுதி களையும் தனியாகப் பிரிப்பதற்கு வெடிப்பு ஏற் படாத பகுதியைக் கீலாக வைத்துக்கொண்டு அக்குழல் வளைக்கப்பெறுதல் வேண்டும். (இ) ஒரு புட்டியின் அடிப்பகுதியை வெட்டுதல்: தேவையான மட்டத்தில் புட்டியைச் சுற்றிலும் ஒரு கீறலைச் செய்திடுக. இந்தக் கீறலின் இரு புறத்திலும் நனைந்த மையொற்றுத் தாள் துண்டுகளைப் மடித்துப் போர்த்துக. ஒரு நேர்த்தியான வாயுச் சுவாலையை கீறலின்மீது படுமாறு புட்டியைச் சுழற்றுக: இந்த இடத்தில் கண்ணுடி வெடிக்கத் தொடங்குகின்றது. வாயுச் சுவாலே கிடைக்காவிடில் வேருெரு வழியில் இந்த வெடிப்பினை இயற்றுதல் கூடும். புட்டி உலர்ந்த நிலையிலுள்ளதா, அது நன்ருக மூடப்பெற்றுள்ளதா என்று கவனித்திடுக. அதன் பிறகு அதனைச் சுற்றிலும் கிடைமட்ட மாக மிக நன்கு உறிஞ்சக் கூடிய நூலினைக் கட்டுக; இயன்றவரை முடிச்சினை தட்டையாக வைத்துக் கொள்க; நீட்டிக் கொண்டுள்ள முனைகளைக் கத்தரித்துவிடுக. புட்டியைச் சுற்றி லும் நூல் ஒரே உயரத்தில் இருக்குமாறு அதனை மட்டப்படுத்துக. புட்டியை பக்கவாட்டாகப் பிடித்துக்கொண்டு, கண்ணிற்கு மருந்திடும் குழலினுல் நூல் முழுவதும் மண்ணெண் ணெயில்ை நனையும்படி செய்திடுக. கண்ணுடி யின்மீது எண்ணெய் பரவாதவாறு கவனித் திடுக; அப்படி ஏதாயினும் பரவிஞல் அதனை வடித்தாள் அல்லது துணியைக்கொண்டு துடைத்துவிடுக. புட்டியைப் பக்கவாட்டி லிருக்குமாறும் அஃது இடைவெளியிட்ட இரண்டு மரக்கட்டைகளின்மீது தாங்கப்பெற் றிருக்குமாறும் பிடித்துக்கொண்டு நூலில் தீ வைத்திடுக; எல்லா நூலும் ஒரே மாதிரியாக எரியும்படி புட்டியை இரண்டு கைகளாலும் அதன் அச்சில் சுழற்றுக. நூல் நன்கு எரிந்து போகும்வரையிலும் புட்டியை மேசையின்மீது நிறுத்துக; அந்த நிலையில் புட்டி தானுகவே எரிந்த கோட்டில் இரண்டாகப் பிளந்து கொள்ளலாம். திச் சுவாலை அணைந்ததும் இது நிகழாவிடில், புட்டியை அதன் மேற்புறம் தலை கீழாக இருக்குமாறு செங்குத்தான நிலையில் மெதுவாகக் குளிர்ந்த நீரில் கீழிறக்குக. அது மிகச் சரியாகச் செங்குந்தான நிலையில்தான் வைத்துக்கொள்ளப்பெறுதல் வேண்டும்; அது நூலின் கோட்டிற்கு அப்பால் அமிழ்த்தப்பெறு தல் கூடாது. - ஓர் அரத்தினைக் கொண்டிோ, அல்லது கார் போாண்டம் தூளின் பசை தடவப்பெற்றுள்ள 308