பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் பயிற்றலில் சில புதிய போக்குகள் பற்றிய விவரங்கள் ஆகியவை அடங்கியிருக்கும். எல்லாப் பகுதிகளிலும் அமைக்கப்பெற்றுள்ள மண்டலப் பயிற்சி ஆய்வு நிலையங்கள்(Regional training institutes) ur Lib Garsi stsor:Esir (Courses), sú flo|sorssit, கருத்தரங்குகள் இவற்றை ஏற்பாடு செய்வதில் மன்றத்தின் வேலையில் துணைசெய்து வருகின்றன. இப்பொழுது, 7 லிருந்து 18 வயது முடிய கல்வி கட்டாயமாக இருந்து வருகின்றது; முதல் எட்டு ஆண்டுகள் எல்லா மாளுக்கர் களும் ஒரே அடிப்படை பாடச் செல்திசையைக் கொண்டுள்ளனர். ப ள் ரி க ளி ல் ஆண், பெண்கள் கலந்து பயில்கின்றனர்; ஒவ்வொன் றிலும் வகுப்புக்களின் எண்ணிக்கை 30 க்கு மேல் போகக்கூடாது; ஆயினும், நடைமுறை யில் அவை 24க்குமேல் போவதில்லை. விருப்புப் படி செல்லும் நிலை (Streaming) இங்கு இல்லை; எல்லா மாளுக்கர்களுமே இந்த அடிப்படைப் பாடச் செல்திசையைப் பயில்கின்றனர். இறுதி மூன்ருண்டுகளில் மாளுக்கர்கள் தத்தம் திறன் கட்குப் பொருந்தக்கூடிய பள்ளி வகையில் சேர் கின்றனர். - உயிரியல்தான் கற்பிக்கப்படவேண்டிய முதல் அறிவியலாக இருந்து வருகின்றது; ஆனல் இறுதி மூன்ருண்டுகளில் அது பெளதிகத்திற்கு வழிவிட்டு விடுகின்றது. இந்நிலையிலுள்ள பாடத் திட்டத்தில் அணுவின் அமைப்பு, உட்கரு ஆற்றல், ஐசோடோப்புகள் (isotopes), ஒளி பெளதிகம் மீஒலி இயல் (Supersonics), ஒளி-மின்சார விளைவு, அரை-கடத்திகள் (Semiconductors), மூவழி இருதிசை மின்னேட்டத் தில் வேலை முதலியவற்றில் உயர்வுறு செயல் அடங்கியுள்ளன. மாளுக்கர்களின் செய்முறை வேலைக்கும், நல்ல செயல் விளக்கச் சோதனை கட்கும் மிக்க அழுத்தம் (Emphasis) தரப்பெறு கின்றது. பெரும்பாலான பள்ளிகள் ஓர் ஆவி லாஸ்கோப்பையும் (Oscilloscope), இருதிசை மின்னேட்டத்தைப் பயிற்றுவதற்குரிய ஆய் கருவிகளையும் பெற்றுள்ளன. மேலே குறிப்பிட் டதைப்போலவே, இந்த ஆய்கருவி மன்றத் திேைலயே அளிக்கப்பெறுகின்றது; ஆகவே அது செயலுக்கு மிகப் பொருத்தமான வகையாக அமைந்து விடுகின்றது. இங்குச் சட்டகமாகக் காட்டப்பெற்ற பாடத் திட்டம் மிகச் சிறு அளவினதே; ஆசிரியர்கள் தம்முடைய கருத்துக்களைப் பின்பற்றுவதற்கும் போதுமான காலம் தரப்பெறுகின்றது. பாடத் திட்டத்தின் உள்நோக்கம், ஆய்கருவியினைப் பற்றிய குறிப்புக்கள், அதன் முன்னேற்பாடு ஆகியவை யாவும் சாதாரணமாக இயற்கைத் திறம் குறைந்த ஆசிரியர்களாலும் எல்லா மாணுக்கர்களுமே போதுமான அளவு கற் பிக்கப்பெறுகின்றனர் என்பதை உறுதிசெய்து கொள்வதற்காகவேயாகும். கடந்த 40 ஆண்டுகளாக அறிவியல் பயிற்றலை நோக்கி எந்த அளவுக்குக் கொள்கை மாருத முயற்சி, மிகப் பெரிய ஆற்றல், வகை துறை வளங்கள் ஆகியவை செலுத்தப்பெற் றுள்ளன என்பதை இந்தச் சுருக்கமான சட் டகம் காட்டுகின்றது. இதன் விளைவு இன்றைய சோவியத் அறிவியலின் ஒப்பற்ற நிலைமையில் தெரியவருகின்றது. மேற்கோள்கள்: Galkin, G. : The training of scientists in the Soviet Union Kondakov, M. I. : Education in the USSR,