பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு - C பாறைகளும் தாதுப் பொருள்களும் ஒரு கணிப் பொருள் (Mineral) என்பது இயற்கையில் கிடைக்கும் ஒரு கரிம மில்லாப் பொருளாகும்; அது கிட்டத்தட்ட மாருத வேதியல் சேர்க்கை வீதத்தையும் (Composition) ஏறக்குறைய திட்டமான பெளதிகச் சிறப்பியல்புகளையும் பெற்றுள்ளது. ஒரு கனிமம் (Ore) என்பது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உலோகங்களைக் கொண் டுள்ள, சுரங்க வேலையை இலாபகரமாக்கக் கூடிய, ஒரு பாறை அல்லது கணிப் பொரு ளாகும். கனிமங்களில் உலோகத்தின் அளவு பேரளவில் மாறுபடுகின்றது. சில இரும்பு, காரியக் கனிமங்கள் 50லிருந்து 75 சதவீதம் வரையில் உலோகத்தைக் கொண்டுள்ளன. ஆயினும், ஒரு டன் பாறைக்கு ஓர் அவுன்சு வீதம் தங்கம் கிடைக்கக்கூடிய பாறையும் நல்ல தங்கக் கனிமமாகக் கருதப்பெறுகின்றது. உலோகங்கள் இயற்கையில் அப்படியே கிடைப் பது மிகவும் அருமை. பல விலையுயர்ந்த கனிமங் கள் ஆக்ஸைடுகளாகவும், சல்ஃபைடுகளா கவும், கார்பனேட்டுகளாகவும் கிடைக்கின்றன. கணிப்பொருள்களை அடையாளங் காணல் : ஒரு சில பண்புகள் அல்லது சிறப்பியல்பு களைக் கொண்டு ஒரு கணிப் பொருள் அடையா ளங் காணப்பெறலாம். சில கணிப் பொருள்கள் எளிதாக அடையாளங் காணப்பெறுகின் றன; மற்றவற்றிற்கு கவனமான சோதனையும் பெரும்பாலும் வேதியியல் பகுப்பும் தேவைப்படு கின்றன. கணிப் பொருள்களின் பண்புகள் பின் வருமாறு: பெட்ரோலியமும் முதலில் கரிமப் பொருளாக இருந்தவற்றிடமிருந்து வருவிக்கப்பெறுகின்றன; ஆளுல், காலப் போக்கில் மிக அதிகமான மாற்றமடைந்து விட்டமையால், இன்று அவை தாதுப் பொருள் உலகத்தைச் சார்ந்தவையாகக் கருதப்பெறுகின்றன. அவை எப்பொழுதும் தாது எரிபொருள்' என்றே வழங்கப்பெறு கின்றன. - ... -- 1. சில கணிப் பொருள்களின் நிறம் மிகத் தெளிவாக உள்ளது. எடுத்துக்காட்டாக, அஸ்-ரைட்டு ஆழ்ந்த நீல நிறத்தைப் பெற் றுள்ளது. எனினும், படிகக்கல் (Quartz) போன்ற வேறு சில கணிப் பொருள்கள் பல நிறங்களில் தோன்றுகின்றன. 2. ஒரு கணிப் பொருளின் கிற்று என்பது அது வழுவழுப்பாகச் செய்யப் பெருத பீங்கா னின்மீது தோன்றும் ஒர் அடையாளத்தின் நிறமாகும். எடுத்துக்காட்டுகள், பென்சில் கரி கறுப்பாகவும், ஹெமடைட் செவ்விய கபில நிறமாகவும், மாலச் சைட்டு இளம் பச்சையாக வும் இருக்கும். 3. சில கனிப் பொருள்கள் உடையும் பொழுது மழமழப்பான மட்டதள மேற்பரப் புக்கள் உண்டாக்கப்பெறுகின்றன. இது பிளவு என வழங்கப்பெறும். எடுத்துக்காட்டாக, கலின (Galena) மூன்று மட்டதளங்களாகப் பிளவுறுகின்றன. இந்தத் தளங்கள் ஒன்றற் கொன்று செங்கோணங்களிலுள்ளன; ஆகவே ஒரு கலினத் துண்டு பல கன சதுரங்களாக உடைக்கப்பெறலாம். 3 4. ஒரு கணிப் பொருளின் பளபளப்பு என்பது அதன் மேற்பரப்பின் ஒளித் திருப்பப் பண்பு களின் தனித்தன்மை பாதிக்கப்பெறுவதற் கேற்பக் காணப்பெறும் அதன் தோற்றம் ஆகும். பல கனிமங்கள் உலோகம் போன்ற பளபளப்பினைப் பெற்றுள்ளன. வயிரம் சுடர் விடும் பளபளப்பைப் பெற்றுள்ளது; அது 'வயிர ஒளி' (Adamantine) என்றே வழங்கப் பெறுகின்றது. கல்நாரின் முக்கிய மூலப் பொருளாகிய கிரிசோடைல் பட்டு போன்ற பளபளப்பினைப் பெற்றுள்ளது; க லி ன் (Kaolin) என்ற ஒரு வகைக் கெட்டிக் களிமண் ஒரு மங்கலான பளபளப்பினைக் கொண் டுள்ளது. r 5. கணிப் பொருள்களின் உறுதித் தன்மை 1 லிருந்து 10 வரையிலுமுள்ளது. விரல் நகத் to 3 {}