பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எளிதில் பிருண்டப் பெறக்கூடிய சீமைச் சுண்ணும்புக்கல்லின் (Taic) உறுதித் தன்மை 1 ஆகும். இத் தன்மைக்கு எதிர் எல்லேக் கோடியின் தன்மைக்கு அறிகுறியாக இருப்பது வயிரமாகும்; இதுகாறும் அறி யப்பெற்றுள்ள வற்றில் மிகக் கடினமான இப் பொருளின் உறுதித் தன்மை 10 ஆகும். விரல் நகத்தின் உறுதித் தன்மை கிட்டத்தட்ட 2த் யும், கத்தி வாளின் உறுதித் தன்மை கிட்டத் தட்ட 5க்யும் ஆகும். ஒரு மாதிரிப் பொருளின் உறுதித் தன்மை அடியிற் காணப்பெறும் தரப் படுத்திய கணிப் பொருள் வரிசையிலுள்ளவற் றுடன் ஒப்பீடு செய்யப்பெற்று அறுதியிடப் பெறுகின்றது. உறுதித் தன்மையைச் சோதிப் பதில் மிக்க கவனம் வேண்டும். ஒரு கணிப் பொருள் மற்ருென்றைக் கீறில்ை, அக் கீற்று துடைக்கப்பெற முடியாது. அது துடைக்கப் பெறக் கூடியதாக இருப்பின், அது மெல்லிய கணிப் பொருளின் பொடி வன்மையான கணிப் பொருளின்மீது படிந்துள்ளது என்பதையும், எந்த விதமான கீற்றும் உண்டாகவில்லை என் பதையும் காட்டுகின்றது. தால் சீமைச் சுண்ணும்புக் கல் ஜிப்சம் (சுண்ணும்பு சல்ஃபேட்) கால் சைட் ஃப்ளோரைட் . அபே டைட் - ஆர்த்தோ கிளேஸ் ஃபெல்ஸ்பார் ulą së G6b (Quartz) Gl_rGusiv (Topaze) 65(I5,íñ,3éé5 si) (Corundum) 10. வயிரம் 9 6. அடர்த்தி எண் என்பது ஒரு கன சென்டி மீட்டர் அளவுள்ள (அல்லது வேறு பரிமாண அளவு) ஒரு பொருளுக்கும் ஒரு கன சென்டி மீட்டர் நீருக்கும் உள்ள எடை விகிதத்தைக் குறிக்கின்றது. ஒரு கன சென்டி மீட்டர் அளவு ஸ்ஃபேலரைட் (துத்தநாகக் கனிமம்) 1 கன சென்டி மீட்டர் நீரைப்போல் 4 மடங்கு எடை இருப்பின், ஸ்ஃபேலரைட்டின் அடர்த்தி எண் 4 ஆகும். பெரும்பான்மையான கணிப் பொருள் களின் அடர்த்தி எண் 2க்கும் 4க்கும் இடைப் பட்டதாக உள்ளது. திரவ நிலையிலுள்ள பெட் ரோலியம் நீரில் மிதப்பதால் அது 1ஐவிடக் குறைந்த அடர்த்தி எண் எனக் கொண்டுள் சேர்க்கை பாறைகளும் தாதுப் பொருள்களுக் ளது. தூய்மையான தங்கத்தின் அடர்த்தி எண் 19. . - 7. அமிலத்தில் நுரைத்தெழல் சில கணிப் பொருள்களின் ஒரு பண்பாக அமைந்துள்ளது. ஒரு சுண்ணும்புக் கல், சலவைக் கல் அல்லது கால்சைட்டின் மீது ஒரு துளி ஹைட்ரோ குளோரிக் அமிலம் விடப்பெற்ருல் வாயுக் குமிழிகள் வெளிப்பட்டுக்கொண்டு ஒரு வேதியி யல் எதிர்வினை விளையும். இதுதான் நுரைத் தெழல் (Efervescence) என்பது. இந்தப் பண் பினைக் கொண்டதாக அறியப்பெற்றுள்ள சில கணிப் பொருள்கட்டு இது ஒரு சோதனையாகப் பயன்படுத்தப் பெறுதல் கூடும். - 8. கணிப் பொருள்களின் படிக அமைப்பு பெரிய அளவில் வேறுபடுகின்றது. நான்கு படிக அமைப்புக்கள் மட்டிலுமே ஈண்டுக் கூறப் பொறும்; கவிஞ, ஹேலேட்டு (சோற்றுப்பு) இவற்ருல் குறிக்கப்பெறும் கன சதுரப்படிகம்; படிகக் கல்லால் குறிக்கப்பெறும் அறு கோணப் படிகம்; பைரைட், வைரம் இவற்ருல் குறிக்கப் பெறும் எண் முகப்படிகம் ; க்ால்சைட்டால் குறிக்கப்பெறும் சாய் சதுர முகப் படிகம். பாறை வகைகள் : . சில பாறைகள் கிட்டத்தட்ட முழுவதும் ஒரே கணிப் பொருளால் சேர்ந்து அமைந்தனவாக இருப்பினும் பாறை என்பது இரண்டு அல்லது இரண்டற்கு மேற்பட்ட கணிப் பொருளின் சேர்க்கை என்றே வரையறுக்கப்பெறுகின்றது. கருங்கல் முக்கியமாக படிகக்கல், ஃபெல்ஸ்பார், அப்பிரகம் என்ற மூன்று கணிப் பொருள் களால் சேர்ந்தமைந்தது. ஆனல், மணற் கல்லும் குவார்ட்சைட்டுக் கல்லும் (இlatzite) பெரும்பாலும் படிகக் கல்லாலானவை; சுண் ணும்புக் கல்லும் சலவைக் கல்லும் பெரும் பாலும் கால்சைட் சேர்ந்தமைந்தவை. கணிப் பொருள்கள் யாவும் திட்டமான வேதியியல் வீதத்தையுடையவை என்பதும், ஆளுல் பாறைகள் அத்தகைய விதத்துடன் அமையவில்லை என்பதும் நினைவிலிருத்துதல் மிகவும் முக்கியமாகும். திப்பாறைகள் படிவுப் பாறைகள் அல்லது மாற்றுருவப் பாறைகள் என்று இனப் படுத் தப்பெற்றுள்ளன. s...., 331