பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாறைகளும் தாதுப் பொருள்களும் உருகிய பாறை குளிர்ந்து கெட்டியாகும் பொழுது தீப்பாறைகள் உண்டாக்கப்பெறுகின் றன. எடுத்துக்காட்டுக்கள் : 1. கருங்கல் : சிவப்பு அல்லது சாம்பல் நிற முள்ளது; முக்கியமாக படிகக்கல், ஃபெல்ஸ் பார், அபிரகம் இவை சேர்ந்தமைந்தது; வெவ்வேறு கணிப் பொருள்களின் படிகங்கள் புலனுவதாலேயே புள்ளியிட்ட தோற்றத்தைக் கொண்டுள்ளது. 2. எரிமலைப் பாறை (Basait): இருண்ட பச்சை கலந்த கறுப்பு நிறமுடையது; சில சமயம் இதில் காணப்பெறும் சிறிய குறிகள் ஒருகால் நீராவி யால் உண்டாக்கப் பெற்றவையாகும்; சாதா ரணமாகக் காணப்பெறுவது உறைந்த எரி மலைக் குழம்பாகும். - 3. பளிங்குப் பாறை (Obsidian) : எரிமலைக் கண்ணுடி, கறுப்பு, கபில நிறம், பச்சை முதலிய நிறங்களைக் கொண்டது. 4, Blogăsă (Pumice stone): Qaisirsolou? லிருந்து சாம்பல் நிறம் வரை உள்ளது; நுண் துளை நிறைந்தது; நீரில் மிதக்கின்றது. 5. நிலக்கரிக் கல் (Scoria): கறுப்பு, சாம்பல் இருண்ட சிவப்பு நிறமுடையது; நிலக்கரிச் சாம்பலை ஒத்துள்ளது. நீரினல் படியச் செய்யப்பெறும் வண்டலால் படிவுப் பாறைகள் உண்டாக்கப்பெறுகின்றன. எடுத்துக்காட்டுக்கள் : 1. சுண்ணும்புக்கல்: வெண்மையிலிருந்து சாம் பல் நிறம் வரை உள்ளது; பெரும்பாலும் கால் சைட்டு சேர்ந்தமைந்தது; பெரும்பான்மை யாக இது பல கடற் பிராணிகளின் தொல்லு யிர்ப்பதிவுகளைக் (Fossils) கொண்டது; அமிலத் தில் நுரைக்கின்றது; லைமோனைட்டால் (Ironoxide) இது மஞ்சள்-கபில நிறமாக்கப்பெற்றி ருக்கலாம். ? 2. மணற்கல் : கபில நிறம் அல்லது சிவப்பு நிறமுடையது; பெரும்பாலும் படிகக் கல்லாலா னது; மணல் துகள்கள் கண்ணுக்குப் புலன கின்றன, 3. களிமண் பாங்கான பாறை (Shale) : இருண்ட சாம்பல், கறுப்பு, சிவப்பு நிறங்களை யுடையது; சாதாரணமாக இது நடைமுறை 332 யில் மெல்லிய அடுக்குகளாக உடைக்கப்பெறு தல்கூடும்; ஈரமாக இருக்கும்பொழுது களி மண் மணத்தையுடையது; எண்ணெய்க் களி மண் பாங்கான பாறை கறுப்பாக இருக்கும். 4. Lisnælosé Estáðs (Bituminous coal) : கறுப்பு நிறமுடையது; கார்பன், கார்பன் சேர்க் கைப் பொருள்கள் இவை சேர்ந்தமைந்தவை; கெட்டியான களிமண் பாங்கான பாறை போன்ற மாசுக்களைக் கொண்டிருக்கலாம். 5. ssvùųů ursop (Conglomerate) : 2-(55Řr டையான கூழாங்கற்கள் ஒன்ருக இணையப் பெற்றிருக்கும். மாற்றுருவப் பாறைகள் வேறு வகைகளாகும். அவை அமுக்கத்தாலும் வெப்பத்தாலும் மாற் றம் அடைந்தவையாகும். எடுத்துக்காட்டுக் ö岔广 > 1. அடுக்குடைய தீப்பாறை (nேeiss) : பெரும் பாலும் மாற்றுருவமடைந்த ஒரு கருங்கல்லே இது; பெரும்பாலும் படிகக்கல், ஃபெல்ஸ்பார், அப்பிரகம் என்ற கணிப் பொருள்கள் இதில் அடுக்குகளாகத் தோன்றுகின்றன; அப்பிரகம் வெள்ளை வகையாகவோ (Muscovite) அல்லது கறுப்பு வகையாகவோ (Biotite) இருக்கும். 2. சலவைக் கல் : இது மாற்றுருவமடைந்த சுண்ணும்புக் கல்லாகும்; பல நிறங்களைக் கொண்டது; மெருகிடப்பெற்ருல் ஓர் அழகான பாறையாகும்; அமிலத்தில் நுரைத் தெழும். 3. குவார்ட்சைட் : இது மாற்றுருவமடைந்த மணற்கல்லாகும்; மி க வு ம் உறுதியானது; நெருங்கியமைந்தது; சாம்பல் அல்லது சிவப்பு நிறமுடையது; மணல் துகள்கள் உறுதியாகச் சேர்த்து இணைக்கப்பெற்றுள்ளன. 4. கற்பலகை : இது மாற்றுருவமடைந்த களி மண் பாங்கான பாறையாகும்; சாதாரணமாகக் கறுப்பு நிறமுடையது; இது மெல்லிய அடுக்கு களாகப் பிளவுபடுகின்றது; களிமண் பாங்கான பாறையைவிட அதிக கெட்டியானது. & 5. அனல் மலி நிலக்கரி (Anthracite): புகை மலி நிலக்கரியைவிட அதிகக் கெட்டியானது; அதைப்போல் இது தூசு நிறைந்ததன்று; இஃது ஒர் உயர்ந்த எரி பொருளாகும்.