பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாக்க ஆசிரியரின் குறிப்பு பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்' என்று கூறியுள்ள பாரதியின் கனவு நாடு விடுதலே பெற்ற பிறகு விரைவாக நனவாகி வருகின்றது. மொழிபெயர்ப்பு' என்பது ஒரு கலை; இலக்கியப் படைப்புக்களில் மொழிபெயர்ப்பு லும் ஒரு வகை. கல்லூரிகளில் தமிழ் பாடமொழியாகச் செயற்படும் தொடக்க நிலையில் இம் மொழிபெயர்ப்பு நூல்கள்தாம் பெருந் துணைபுரியவேண்டும். மொழிபெயர்ப்பினைத் தொல்காப்பியர் அதர்ப்பட யாத்தல்' என்று குறிப்பிடுவர். மொழிபெயர்ப்பு நூலைப் படிப்போருக்கு இது ஒரு மொழிபெயர்ப்பு என்று தோன்ருவண்ணம் முதல்நூல் போலவே சரளமான தீந்தமிழ் நடையில் மொழிபெயர்ப்பு அமைதல் வேண்டும். நூல் துவலும் கருத்துக் களே யான் அறிந்தவளுதலால் இந்தக் குறிக்கோளை மனத்திற்கொண்டு அதனை ஓரளவு நிறை வேற்ற முயன்றுள்ளேன். அதில் சிறிதாவது வெற்றிபெற்றேணு என்பதை இந்த நூலைப் படிப்போர்தாம் முடிவுகட்டவேண்டும். மேட்ைடுப் புதிய துறைக் கருத்துக்கள் தமிழ் மொழியினை அடைவதற்கு மொழி பெயர்ப்பு சேது ஒரு வழியாகும். தமிழ் மொழியின் ஆக்கத்தை விரும்புவோர் இதுவே வழி' என்று நினைத்தல் தவறு. தமிழர்கள் அத் துறைக் கலைகளே முறையாகப் பயின்று அத் துறை களில் முதல் நூல்கள் (Original works) அமைத்தலைக் குறிக்கோளாகக் கொள்ள ல் வேண்டும். "இந்த மொழிபெயர்ப்பு சேது அமைத்தலில் சிறியேனின் தொண்டு இராம்ன் அமைத்த சேதுவில் ஒரு சிறு அணில் மேற்கொண்ட தொண்டினைப் போன்றது. தமிழ் மொழியாக்கத் தில் தூய்மையான ஆர்வமே முக்கியமாகும். கூட்டங்களில் பாமர மக்களிடையே வெற்று வேட்டுக்கள் எழுப்புவதைவிட அறிஞர்கள் அமைதியாக உருப்படியான பணியில் இறங்குவது இன்று மிகவும் வேண்டப்படுவதொன்று, துறையறிவு சிறிதுமின்றி தமிழ்ப்புலமை யொன்றையே துணையாகக்கொண்டு மொழிபெயர்ப்புத் துறையில் இறங்குவது விரும்பத் தக்க தனறு. இந்த நூலே எழுதி வெளியிடுவதற்கு இசைவு தந்த திருவேங்கடவன் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவினருக்கு (Syndicate) - சிறப்பாக அதனைத் திறம்படக் கண்காணித்து வரும் அதன் துண்ைவேந்தர் டாக்டர் W. C. வாமனராவ் அவர்கட்கு - என் உளங்கனிந்த நன்றி என்றும் உரியது. - இந் நூலை எழுதுங்கால் என்னுளே தோன்ருத் துணையாக நின்று எனக்கு உடல் நலத்தையும் மன வளத்தையும் அருளி வரும் எல்லாம்வல்ல இறைவனின் பெருங் கருணைத் திறத்தை எண்ணி அவன் அடிகளைப் போற்றுகின்றேன். !ருப்பதி Y - * - f ந. சுப்பு ரெட்டியார்