பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை உலகம் முழுவதிலுமுள்ள பள்ளிகளின் கல்வித் திட்டத்தில் அறிவியல் பாடம் தனித் தன்மை வாய்ந்தது. அப்பாடத்தைத் திறமையாகப் பயிற்றுவதற்கெனத் தேவைப்படும் பல்வேறு வகைப் பொருள்களும் சோதனைகளுமே இத் தனித் தன்மைக்குக் காரணமாகும். பென்சில், தாள், கரும்பலகை, பாடப் புத்தகங்கள் இவ்ை போன்ற சில துணைக் கருவிகள் ஆகிய சாதாரண கைக் கருவிகள் கிடைப்பின், பெரும்பாலான ஏனைய பாடங்களைக் கற்றுக் கொள்ள லாம். அறிவியலைப் பயிற்றுவதற்கு இவையும் இன்றியமையாதவையே ஆளுல் இவை மட்டிலுமே கைக் கருவிகளாக அமையின், அறிவியல் எழுச்சியற்ற, கவர்ச்சிகரமில்லாப் பாடமா கின்றது. அறிவியலைப் பயன்பெறக் கற்றுக்கொள்ள வேண்டுமாயின் அது நேரடியாக அநுபவ மாக வேண்டும். அது கற்கப்பெறவேண்டுமேயன்றி, அறிந்து கொள்ளப்பெறுவதன்று. அறிவியல் ஒவ்வொரு சிறுவன், சிறுமியின் வாழ்வுடன் தெருங்கிப் பிணேந்திருப்பதால், பாடப் புத்தகங்கள்ைப் படித்தல் அல்லது சொற்பொழிவுக்ளைக் கேட்டல் என்ற குறுகிய எல்லைக்குள் அதனை உட்படுத்த இயலாது. இவ்வுலகில் எப்பகுதிக்குச் சென்ருலும், அறிவியல் சூழ் நிலையின் நெருங்கிய பழக்கமுள்ள ஒரு பகுதியாகவே இருப்பதைக் காணலாம்; உயிர் வாழ் பொருள்கள், பூமி, வானம், காற்று, நீர், வெப்பம், ஒளி, ஈர்ப்பு ஆற்றல் போன்ற விசைகள் ஆகியவை யாவும் சூழ்நிலையின் பகுதியன்ருே? எனவே, அறிவியல் கற்றலில் ஆசிரியர் நேரடிப் பொருள்களின்றி இருத்தல் கூடாது. உற்று நோக்கல், சோதனை ஆகியவற்றின் அடிப்படையில்தான் திறமான அறிவியல் பயிற்றல் அமையவேண்டும். இ ைவ ய ன் றி வேருென்றும் அமையாது. ஆளுல் சோதனைகள் செய்வதற்கும் நெருங்கிய உற்றுநோக்கல்களை மேற்கொண்டு கற்ப தற்கும் தனிப்பட்ட வாய்ப்புத் திறன்கள் தேவைப்படுகின்றன ; உலகின் பல பகுதிகளிலும், சிறப்பாகத் தொடக்கப் பள்ளி நிலையிலும் உயர்நிலைப் புள்ளியின் முதல் நிலையிலும் இவை இல்லாத குறையாகவே உள்ளது. இதன் காரணமாக இப்பகுதிகளில் அறிவியல் பயிற்றலில் ஒரு கடுமையான தடை ஏற்பட்டுள்ளது. ஆய்வகமுறைப் பயிற்றலைத் தொடக்க நிலையில் மேற்கொள்ளினும் அதற்கு வணிகமுறை உற்பத்தியாளர்களால் ஆயத்தம் செய்யப்பெற்ற விரிவான தளவாடம் தேவை என்று பெரும்பான்மையோர் நம்புகின்றனர்; இது தவறு. பெரும் பாலான தொடக்கப்பள்ளி நிலை, உயர்நிலைப் பள்ளியின் முதல் நிலைகளில் பயிற்றலுக்கு அத் தகைய சோதனைப் பொருள்கள் தவிர்க்கவேண்டிய அளவுக்கு விலையேறிய நிலையில் உள்ளன; உலகின் பல பகுதிகளில் உள்ளூர் உற்பத்தி இல்லாமையால் அவை கிடைக்கக் கூடியன வாகவும் இல்லை; விலையதிகமாக இருப்பதால் வெளிநாடுகளினின்றும் இறக்குமதி செய்வதற்கு இயலக்கூடியதாகவும் இல்லை. இரண்டாம் உலகப் பெரும் போரின் இறுதியில் பல்வேறு நாடுகளில் பல பள்ளிகள் அழிக்கப்பெற்றுவிட்டன. இப்பள்ளிகள் உயிர்பெறத் தொடங்கியதும் அறிவியல் தளவாடத் தேவை அதிகம்ாக ஏற்பட்டது; ஏனெனில், இந்நாடுகள் உற்றுநோக்கல், சோதனை இவற்றின் அடிப்படையில் அறிவியல் பயிற்றலை மேற்கொள்ளுவதை மரபாகவே கொண்டிருந்தன. இத்தேவையை நிறைவேற்றுவதற்காக ஐக்கிய நாட்டுக் கல்வி-அறிவியல்-பண்பாட்டுக் கழகம் (யுனெஸ்கோ) அழிபட்ட நாடுகளின் அறிவியல் ஆசிரியர்க்கான குறிப்புக்கள்' என்ற தலைப்பில் ஒரு சிறிய நூலொன்று வெளியிடுவதற்குக் காரணமாக இருந்தது. இந்நூலின் ஆசிரியர் ஜே. பி. ஸ்டீஃபென்ஸன் என்பார் (இவர் இலண்டன் மாநகர்ப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர்; ஒன்றுபட்ட அரசின் கீழுள்ள யுனெஸ்கோவுடன் தொடர்புள்ள இராயல் சொஸைட்டி கமிட்டி ஃபார் கோவாப்பரேஷன் என்ற கழகத்தின் உறுப்பினர்). இந்நூல் அழிபட்ட பகுதிகளுக்கு மிகவும் பயன்பட்டதாக இருந்ததுடன், இதற்கு முன்னதாக தளவாடமே இல்லாதிருந்த பகுதி களிலும் தனிச் சிறப்புக்குரிய வெற்றியை அளித்தது. எளிய பொருள்களுக்கொண்டு தள வாடத்தை ஆக்குவதையும் அவற்றைப் பயன்படுத்துவதையும் வற்புறுத்தும் இந்நூல் அந்நாடு களின் மிகப் பெரியத் தேவையை நிறைவுபெறச் செய்துள்ளது; அந்நாடுகளிலுள்ள ஆசிரியர் களும் மிகக் கீழான நிலைகளில் கல்வி அளிப்பதிலும் நேரடியான அறிவியல் சோதன்ைகளின் V