பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E. விதைகள் 1. விதைகளை வளர்ப்பதில் ஒரு பயனுள்ள வழி : ஒரு பழைய இறைச்சி சாடியின் வாயின்மீது ஒரு துண்டுத் துணியைக் கட்டுக. சாடியின் பக்கங்களில் அதிகப்படியான துணியினைத் தொங்கவிட்டு அத்னை ஒரு இன்பழன்றில் (jam) சாடியிலுள்ள 2 செ. மீ. ஆழமுள்ள நீரில் அமுக்குக. சாடியின்மீது வைக்கப்பெற்றுள்ள ஒரு கண்ணுடித் தகடு காற்றின ಈTurs வைத் திருக்கும். .. 2. গুচে கந்தை பொம்மை விதை சோதிக்கும் கருவி : ஒரு சதுர மீட்டர் வெண் துகிலை (muslin) ஒரே திசையில் இரண்டு முறை மடித்திடுக. ஒரு முனையருகில் 5 செ. மீ x 5 செ. மீ. அளவுள்ள வெண்துகில். எட்டு அல்லது பத்து சதுரங்களை ஒரு பென்சி லால் அடையாள மிடுக. சதுரங்களின்மீது எண்களைக் குறித்து ஒவ்வொரு முள்ள பைகளில் பத்து விதைகளைப் போடுக. சதுரத்திலு: வெண்துகிலின் எதிர்ப்பக்க முனையை விதை களின்மீது மடித்திடுக. சோதிக்கும் கருவியைச் சுருட்டி அதனை ஒரு கயிற்றினுல் தளர்ச்சியாகக் கட்டுக. நீரினுல் சோதனைக் கருவியை அது நீர் ஏற்கக் கூடிய அளவு நனைத்திடுக. அதனை ஈரமாகவே ஒரு வெது வெதுப்பான இடத்தில் பல நாட்கள் வரை வைத்திடுக. அதன் பிறகு அதனை விரித்து ஒவ்வொரு வகை விதையிலும் எத்தனை விதைகள் முளைத்துள்ளன என்பதைப் பார்க்க. 3. ஒரு டம்ப்ளர் தோட்டம் : பல்வேறு வகை விதைகளை டம்ப்ளர் தோட் டங்களில் வளர்த்திடுக. ஒவ்வொரு மாளுக் கனும் தன்னுடையது என ஒரு டம்ப்ளர் தோட் டத்தை வளர்த்து இளஞ்செடிகளின் வளர்ச்சி யினைக் குறித்து நாடோறும் ஒரு படப் பதிவேட் டினை வைத்துக் கொள்ளலாம்.

o 麗

1. முற்ரு திலக்கரிப் வாசி அல்லது ரஞ்சு ; 2. விதை கள் : 3, மையொற்றுத் தாள் : கி. நீர். ஒரு டம்ப்ளர் தோட்டம் அமைக்க வேண்டு மாயின், ஒரு செவ்வக வடிவுள்ள மையொற்றுத் தாளினை வெட்டி அதனை நீர்பருகும் கண்ணு டிப் பாத்திரத்தினுள் சறுக்கி விழுமாறு செய் திடுக. கண்ணுடிப் பாத்திரத்தின் நடுப்பகுதியை முற்ற நிலக்கரிப் பாசி, பருத்தி, எக்செல்சியர் (excelsior) இரம்பத்துள் அல்லது அதுபோன்ற பொருள் இவற்றைக் கொண்டு நிரப்புக. மை யொற்றுத் தாளுக்கும் கண்ணுடிப் பாத்திரத்தின் உட்புறத்திற்கும் இடையில் ஒரு சில விதை களை அமுக்குக. கண்ணுடிப் பாத்திரத்தின் அடி யில் சிறிதளவு நீர் இருக்குமாறு செய்க.

47

46