பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

്. ജാ 8. ஓர் எளிய மலரின் மாதிரி உருவம் அமைத்தல்: களிமண், வண்ணத்தாள், பற்குத்திகள் இவற் றைக் கொண்டு மூவளவு - மாதிரி உருவங்களை (three-dimensional models) of soup;#5 o பூவின் பகுதிகளைக் குறிக்குமாறு செய்யலாம். இது தனிப்பட்ட மாளுக்கனின் மிகப் பயனுள்ள செயலாக அமையும் ; இது பூவின் பகுதிகள் மனத்தில் ஆழப் பதியத் துணைசெய்யும். ஒரு பூக் காம்பினைச் செய்ய வேண்டுமாயின், சிறிதளவு களிமண்ணே எடுத்து 2 செ. மீ. குறுக் களவும் 5 செ. மீ. நீளமுமுள்ள ஓர் உருளேயாக உருட்டுக. இதன் ஒரு முனையை ஒரு மேசை அல்லது சாய்வு மேசையின்மீது உறுதியாக அமுக்குக; அதன் மறு கோடியில் விளக்கப் படத்தில் (a) காட்டியுள்ளவாறு நடுவில் ஒரு பல் குத்தியைப் (toothpick) பாதியளவு உள் போகுமாறு செருகுக. புல்லிகளைச் செய்ய வேண்டுமாயின், ஒரு பச்சை வண்ணத் தாளினின்றும் ஆறு-கூருள்ள விண்மீனைப் போன்ற உருவத்தை வெட்டி எடுத் திடுக. குறைந்தது 1 செ. மீ. குறுக்களவுள்ள ஒரு துளையினை நடுவில் வெட்டுக. விளக்கப் படத்தில் (b) காட்டியுள்ளவாறு இப்புல்லிகளைக் காம்பின்மீது சரியான நிலையில் அமைத்திடுக. பிரகாசமுள்ள வண்ணத் தாளி னின்றும் அல்லிகளைக் கொண்ட ஒர் அல்லி வட்டத்தை வெட்டி எடுத்திடுக. நடுவில் ஒரு துளையினை வெட்டி விளக்கப்படத்தில் (c) காட்டியுள்ளவாறு அல்லி வட்டத்தை நேராகப் புல்லிகளின்மீது அமைத்திடுக. - களி மண்ணிலிருந்து ஒரு சிறு புதைகல (urn) வடிவில் ஒரு சூலகத்தை அமைத்திடுக. விளக்கப்படத்தில் (d) காட்டியுள்ளவாறு இதனை நீட்டிக் கொண்டிருக்கும் பல் குத்தியில் அமுக் கிச் சரியான நிலையில் அமைத்திடுக. அடுத்து, பல் குத்திகளின் முனைகளில் சிறு அளவுகள் களிமண்ணினைப் பொருத்தமாக அமைத்து மகரந்தக் கேசரங்களைச் செய்திடுக. விளக்கப் படத்தில் (e) காட்டியுள்ளவாறு வெளியே தெரியும் களிமண் வட்டத்தில் பொருத்தமாகப் பல் குத்திகளைச் செருகுக. பூவின் மாதிரி உருவம் முற்றுப்பெற்றதும், விரல்களைக்கொண்டு காம்பினை நீட்டியும் பூத் தலையைச் சிறிது வளைத்தும் (f) அதனை மிகவும் உயிருள்ள பூப்போலத் தோன்றுமாறு செய்ய லாம். - ... 7. பூக்களைக் கூர்ந்து நோக்க ஒரு சிறு தொலைப் பயணம் : - மலர்கள் புது மலர்ச்சி உறுங் காலத்தில் அவற்றை உற்றுநோக்குவதற்காக ஒரு சிறு தொலைப் பயணத்தைத் திட்டமிடுக. பள்ளி யருகில் கவர்ச்சிகரமான காட்டுப் பூக்கள் காணப் பெருவிடில், ஒரு தனியார் தோட்டம் அல்லது பூங்காவிற்குப் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிடலாம். சிறிதளவு பூக்களைச் சேகரம் செய்க. 8. பூக்கள் பழமாக வளர்ச்சியுறுவதை உற்று நோக்குதல் : -- புதிதாக முகைகள் விரிந்ததிலிருந்து மலர் களில் அல்லிகள் விழும் வரையிலுமுள்ள பல் வேறு முதிர்ச்சி நிலைகளில் மலர்களைச் சேகரம் செய்க. ஒவ்வொரு சூற்பையையும் வெட்டித் திறந்து விதையின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்திடுக. புதிதாகப் பொருக்கி எடுத்த பட்டாணிகள் அல்லது மொச்சைகளில் ஒரு குவார்ட் அள வினைக் கவனித்து முற்றிலும் நிரம்பாத விதைப் பைகளைப் பொருக்கி எடுத்திடுக. இவற்றைத் திறந்து முற்றிலும் நிரம்பிய பைகளுடன் ஒப்பிடுக. பயனற்ற விதைகள் மகரந்தத்தால் கருவுறச் செய்யப்பெருத (தாவர) சூல்களின் மீதமாகும். . . -

46

45