பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

b. மலர்கள் 1. மலர்களத் திரட்டிப் பாதுகாத்தல்: இலைகளைப்பற்றிக் கூறும்பொழுது இலைகளைச் சேகரிப்பதற்கு மேற்கொண்ட முறையினையே இவற்றிற்கும் மேற்கொள்க. 2. ஒரு பூவின் முக்கிய பகுதிகளை ஆராய்தல்: அல்லி மலர்கள், மணி உருவப் பூவகைகள் போன்ற பெரிய எளிய பூவகைகளைச் சோதித் துப் பார்க்க. மகரந்தக் கேசரங்களைக் (stamens) கணக்கிட்டு அவை எவ்வாறு நடுவிலுள்ள சூலகத்துடன் அமைக்கப்பெற்றுள்ளன என் பதை உற்று நோக்குக. இன்றியமையாத உறுப் புக்களைப்பற்றிய பெரிய விளக்கப் படங்களை வரைந்திடுக. சூலகத்தின் பகுதிகளின்மீது (சூல் முடி, சூல் தண்டு, குற்பை) பெயர் குறிப் புச் சீட்டுக்களை அமைத்திடுக. கேசரத்தின் பகுதிகளின்மீதும் (தாள், மகரந்தப் பை) பெயர்க் குறிப்புச் சீட்டுக்களை அமைத்திடுக. பூ வளரும் காம்பின் நுனி ஆதானம் (receptacle) எனப்படும். ஆதானத்தின் அடிப்புறத் தில் சாதரணமாக முட்டையினை மூடும் இலை போன்ற அமைப்புக்கள் உள்ளன. இவை புல்லிகள் (sepals) என வழங்கப்பெறுகின்றன. 1. மகரந்தக் கேசரங்கள் : 2. சூலகம்: 3. அல்லிகள் : 4. புல்லிகள்: 5. ஆதானம்: .ே மகரந் தப்பை: 7. இழைக்கம்பி: 8, சூல்முடி! 9. சூல் தண்டு ; 10, குற்கை. o “. . . புல்லிகளுக்கு மேல் சாதாரணமாகப் பிரகாசமான வண்ணத்துடனுள்ள அல்லிகளின் (petals) வளையம் உள்ளது , இஃது அல்லி வட்டம் (corola) என வழங்கப்பெறும். 3. எளிய மலர்களைப் பிளந்து ஆய்தல் : ஐந்து அட்டைகள் அல்லது துண்டுத் தாள் கள் ஒவ்வொன்றின்மீதும் அடியிற் கண்ட சொற்களை எழுதுக: மகரந்தக் கேசரங்கள், சூலகம், அல்லிகள், புல்லிகள், ஆதானம். ஒரு மலரை மிகக் கவனமாகப் பிளந்து அதன் பகுதி 45 களைப் பொருத்தமான அட்டைகளின் மீது ஒழுங் காக வைத்திடுக. - * சில மலர்கள் மிக எளிதாகப் பிரித்தெடுக்கப் பெறலாம்; ஆனால், வேறு மலர்கட்குக் கத்தி அல்லது கத்திரிக்கோல் தேவைப்படலாம். தேவையான எண்ணிக்கையுள்ள பூக்கள் கிடைக்குமாயின், இப்பயிற்சி மிகவும் பயனுள்ள மாளுக்கரின் தனிப்பட்ட செயலாக அமையும். ஒற்றை வரிசையுடன் அமைந்துள்ள அல்லி களைக் கொண்ட எளிய மலர்கள் தேர்ந்தெடுக் கப் பெறுதல் வேண்டும். மகரந்தக் கேசரங்களில் ஒன்றினை எடுத்து மகரந்தப் பையின மெதுவாக ஒரு கறுப்புத் தாளின்மீது தேய்த்திடுக. தாளின்மீது மகரந் தத்தின் அறிகுறிகளைக் (சிறிய அளவு) கான லாம். - ஒரு கூரிய கத்தியினைக் கொண்டு சூற்பை யினைக் குறுக்கே வெட்டுக; அதிலுள்ள (தாவர) சூல்கள் (ovules) அல்லது விதைப் பைகளைக் கணக்கிடுக, சூல்களில் விதைகளின் அடையா ளங்களைக் காண்க. 4. வெவ்வேறு மலர்களின் மகரந்தத் துணுக்கு களை உற்றுநோக்குதல் : மகரந்தக் கேசரங்களில் மகரந்தம் உண்டான பல்வேறு மலர்களைக் கைவசப்படுத்துக, ஒவ் வொரு மலரினின்றும் பல்வேறு கறுப்பு அல்லது இருண்ட காகிதத் துண்டுகளில் மகரந்தத்தைக் குலுக்குக. ஒரு பெருக்காடியைக் கொண்டு ஒவ்வொரு வகை மகரந்தத்தையும் உற்று நோக்கி வேறுபாடுகளிருப்பின் குறித் துக் கொள்க. * 5. முளை விடும் மகரந்தத் துணுக்குகள் :

ஒரு தீவிரமான சருக்கரைக் கரைசலைத் தயாரித்து அதனைச் சாறுனும் தட்டுபோன்ற ஒர் ஆ9ங்குறைந்த தட்டில் வைத்திடுக. பல்வேறு வகைப் பூக்களினின்றும் சருக்கரைக் கரைசலின்மீது மகரந்தம் விழுமாறு குலுக்குக. தட்டினை ஒரு கண்ணுடித் தகட்டினல் மூடுக; அது வெதுவெதுப்பான இடத்தில் பல மணி நேரம் அப்படியே இருக்கட்டும். சோதனை வெற்றி யடைந்தால், மகரந்தத் துணுக்குகளி னின்றும் சிறு குழல்கள் வளர்ந்து கொண்டிருப் பதைக் காண்பீர்கள். ஒரு கைக் கண்ணுடிவில்லை யைப் பயன்படுத்துக,

44