பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே இன் കുരു ஒட்டின்மீது விரித்து வைத்திடுக. இந்த இலையை அயோடின் டிங்க்சரால் மூடி அதனைப் பல நிமிடநேரம் அப்படியே விட்டு வைத்திடுக. இருண்ட நீல நிறந்தான் மாப் பொருளுக்குரிய சோதனையாகும்; இந்த மாப் பொருள் சூரிய வொளியில் இலையினுல் ஆக்கப் பெற்றதாகும். 13. பச்சை இலைகள் சூரிய வொளியில் ஆக்ளி ஜென வெளிவிடுகின்றன : நீருள்ள முகவை (beaker) யொன்றில் சிறிது நீர்க் களையினை (water weed) ஒரு புனலடியில் வைத்திடுக. நீரால் நிரப்பப்பெற்ற சோதனைக் குழலொன்றினைப் புனலின் குழலின்மீது கவிழ்த் திடுக. இந்தத் துணைக் கருவி அமைப்பினை நல்ல சூரிய ஒளியில் அப்படியே விட்டு வைத்திடுக. களையினின்றும் வாயுக் குமிழிகள் விடுவிக்கப் பெற்று அவை சோதனைக் குழலின் உச்சிக்கு ஏறிச் செல்லும். சிறிது நேரத்தில் அந்தக் குழல் அகற்றப்பெற்று அதிலுள்ள வாயு ஒளிரும் குச்சியினல் சோதிக்கப் பெறுகின்றது. 14. இலையின் வழியாகக் காற்று ஒரு தாவரத் தில் நுழைய முடியும் : ஒரு நீண்ட காம்புடன் கூடிய இலையொன் றின. எடுத்து அதனை ஒரு தக்கையிலுள்ள துளையின் வழியாகச் செலுத்தி ந ன் ருக அடைத்துவிடுக. இத் தக்கையில் பக்கக் குழல் ஒன்றினைச் செருகித் தக்கையினை நீரினைக் கொண்டு ஒரு குடுவையினுள் (flask) பொருத் துக. தக்கையின் பக்கங்களின் வழியாகவோ அதிலுள்ள இரு துளைகளின் வழியாகவே குடுவையினுள் காற்று புகாதவாறு நன்கு அடைத்து விடுக. பக்கக் குழலின்மூலம் காற். றினை உறிஞ்சுக. காம்பின் முனையினின்றும் காற்றுக் குமிழிகள் வெளி வருவதைக் காண வாம். 15. தாவரம் சுவாசித்தலேக் காட்டுவது : ஒரு பளுவான மரத் துண்டில் வைக்கப்பெற் றுள்ள சோதனைக் குழலொன்றில் தாவரத்தினை வைத்திடுக. இதனைச் சுண்ணும்பு நீரினைக் கொண்ட ஒரு கிண்ணத்தில் வைத்துத் தாவரத் தினை ஒரு சாடியால் மூடுக. இத் தாவரத்தைப் பல மணி நேரம் ஓர் இருட்டான இடத்தில் 9 அடுத்த நாள் அதனைச் சோதித் டுக. --- - - -

சுண்ணும்பு நீர் பால் போல் வெண்ணிறமாக இருக்கும்; இது கரியமிலவாயு (CO) வெளிவிடப் பெற்றிருப்பதைக் காட்டுகின்றது ; நீர்மட்டம் சற்று ஏறியிருப்பது ஒரு கணிசமான அளவு ஆக்ஸிஜென் எடுத்துக் கொள்ளப்பெற்றிருப் பதைக் காட்டுகின்றது. - -

43