பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ரிட்-கிழங்கு அக்கார்க் கிழங்கு டர்னிப் (turnip) கிழங்கு இவற்றில் அதிகமான சேமிக் க்ப்பெற்ற உணவு இருக்கும். நீரில் வளர்க்கப் பெற்ருல், அவை இலைத் தொகுதியினை உண் டாக்கும்; ஆளுல் அவை புதிய தாவரங்களாக வளரா. உச்சியினின்றும் பழைய இலைகளை அகற்றி, 5 செ. மீ. லிருந்து 8 செ. மீ. வரை விட்டு எல்லா வேர்களையும் வெட்டி நீக்குக. இப் பகுதியை ஆழமில்லாத தட்டிலுள்ள நீரில் வைத்திடுக. தட்டில் போடப்பெறும் ஒரு சில கூழாங் கற்கள் இக் கிழங்கினைச் செங்குத்தாக இருக்குமாறு பிடித்துக் கொள்ளும். தொக கற்கள் - - காரட் உச்சி இலைகளின் அடிமட்டத்தில் 3 செ. மீ. லிருந்து 5 செ. மீ. வரை விட்டு ஓர் அன்னசிப் பழத்தினை வெட்டுக. இப் பகுதியினை ஓர் ஆழங் குறைந்த தட்டிலுள்ள நீரில் வைத்திடுக. பல வாரங்கள் இலைகள் தொடர்ந்து வளரும். 10. இலைகள் நீராவியை வெளிவிடுகின்றன : ஒன்றில் ஒரு சிறு செடியுள்ளதும் மற்ருென் றில் செடியில்லாததுமான மண்ணைக்கொண்ட ஒரே மாதிரியான இரண்டு சட்டிகளைப் பயன் படுத்துக. இரண்டிலும் நீர் விட்டபிறகு விளக் ఫ్రో R ஒட்டுப் பிளாஸ்திரி - யால் முடுக , கப் படத்தில் காட்டியுள்ளவாறு ஒவ்வொரு சட்டி யையும் காகித அட்டையைக் கொண்டு:மூடுக. படத்தில் காட்டியுள்ளவாறு ஒவ்வொரு சட்டி யின்மீதும் கண்ணுடிச் சாடிகளைக் கவிழ்த்திடுக. இரண்டு சட்டிகளையும் ஒன்றன் பக்கத்திலொன் ருக சூரிய வொளியில் வைத்துச் சிறிது நேரத் திற்கு ஒரு தடவை வீதம் பகல் நேரத்தில் சோதித்திடுக. - 11. இலைகளின் அமைப்பு: வேருெரு பள்ளி, ஒரு மருத்துவர் அல்லது மருத்துவமனை இவற்றிலொன்றினின்றும் ஒரு துண் பெருக்கியினை இரவலாகப் பெறுக. இலை களின் அடிப்புறத்தைச் சோதித்து ஒவ்வொரு புறத்திலும் இரண்டு சிறிய காப்பு உயிரணுக் களைக்கொண்டு சுவாசிக்கும் இலைத்துளைகளைக் (stomata) *sörl-ğs. - ஒரு சவர வாளினைக் கொண்டு இலையின் ஒரு மிக மெல்லிய குறுக்கு வெட்டுப் பகுதியை வெட்டுக; வெட்டிய ஒரத்தை துண் பெருக்கியின் மூலம் நோக்குக. வேலிக்கால் அணுவின் <SGéS (palisade layer), LD5GSrso, S-Ö பஞ்சு போன்ற சோற்றணு அடுக்கு இவற்றைக் காப்பு உயிரணுக்கள் கண்டறிக. ஒரு நரம்பும் ஓர்; இலத்துளையும் கடற்பஞ்சு அடுக்காகத் திறப்பதை நீங்கள் காண்பீர்கள். - 12. பச்சை இலைகள் தாவரத்தின் உணவினை ஆக்குகின்றன: - சிறிதளவு சாராயத்தைக் (alcohol) கொதி நீரில் வைத்து அது கொதிக்கும் வரை சூடாக் குக. பல மணிநேரம் சூரிய வொளி பட்ட பல பச்சை இலைகளை ஜெரேனியம் அல்லது வேறு தாவரத்தினின்றும் வெட்டியெடுத்து அவற்றைக் கொதிக்கும். சாராயத்தில் போடுக ; பச்சையம் (chlorophyll) நீக்கப்படும் வரையிலும் இலைகள் சாராயத்தில் இருத்தல் வேண்டும். சாராயத்தி னின்றும் விரைவாக இலைகளை நீக்கி அவற்றை ஒரு தட்டிலுள்ள வெந்நீரில் போடுக. நீரினின் றும் ஓர் இலையை அகற்றி அதனை ஒரு கண்ணுடி

43

42