பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வென்றிலன் என்ற போதும் ---

  • வென்றிவன் என்றபோதும் வேதமுள்ளளவும் யானும்

நின்றுளன் அன்றே .-- -கம்பரா. யுத்தகாண்டம். பாடி வீட்டின் திட்டி வாசல் நிலை தட்டி வளைந்து நீமிர்ந்த வில்லின் நாண் வீறாப்புடன் நாத ஜங்காரம் செய்தது. நாணொலி கேட்ட தருமன் திடுக்கிட்டுப் போனான். உயத்தின் பீதி கம்பீரத்தில் பதுங்க எண்ணித் தவித்தது.

    • யாரது? கர்ணனா?” என்று வாய்விட்டுக் கேட்டுவிட்

டான். எனினும் கேள்வியில் நாடி விழுந்து போயிருந்தது. கர்ணனிடம் தோற்றோடி வந்ததால் ஏற்பட்ட பயமும் பேதலிப்பும் நாக்கைக் கட்டிப்போட்டிருந்தன. “கர்ணன் இல்லை; அவன் காலன் என்று கூறிக் கொண்டே, தோளிலிருந்து நழுவிய காண்டீபத்தை இழுத் துப் போட்டுக்கொண்டான் அர்ஜுனன்.

  • நீயா, அவசரத்தில் - என்று இழுத்த தருமன் பட்

டென்று நாக்கைக் கடித்துக்கொண்டான். எனினும், முகத்தில் பேயறைந்தாற்போல் சவக்களை படர்ந்திருந்தது. நெஞ்சில் திமிறிய பீதியைப் புதைத்துவிட நினைத்த தருமன்,

    • அர்ஜூனா, கர்ணன் தொலைந்தானா? என்று ஆத்திரத்

துடன் கேட்டான். அண்ணனுடைய படபடப்பைக் கண்டு அர்ஜுனனின் உதடுகளில் புன்னகை , வளைந்தது. * தொலைய போகி