பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயை 125 இடுகாட்டில் சமாதிக் கற்கள் குத்துக் குத்தாக நின்றன. அந்த இருளில், வெள்ளையடிக்கப் பெற்ற அந்தக் கற்கள் உயிர் பெற்று அவனைச் சூழ்ந்து மெது மெதுவாக நடந்து "வருவதாக ஒரு பிரவும்; அது வெறும் பிரமை என்ற -பிரக்ஞை அவனுக்கு இருந்தாலும், பயத்தின் நாடித் துடிப்பை அவனால் சமனப்படுத்த முடியவில்லை. ஆகவே அவை கற்கள் தான் என்று மனப் பிராந்திக்கு சூடு கொடுக்கும் தன்மையில் அவனும் அந்தக் கற்களை நோக்க நடந்தான். நிலவொளியில் அந்தச் சமாதிக் கல் மீது செதுக்கப்பட்டிருந்த வரிகள் கண்ணில் பட்டன. ஸ்ரீமதி கற்பகத்தம்மான் தே& வியோகம் : 2312 தைமீ 4-ம் தேதி அவனுக்குத் திக்கென்றது. அன்றைக்கும் தை பாதம் நாலாம் தேதியேதான், பெயரும் கூடப் பொருந்தியிருந் தது. ஆனால் இந்தக் கற்பகம் வேறு. அவன் எதிர்பார்த் திருந்த கற்பகமோ !மண்ணுள் புதைந்து கிடக்கும் கற்பகம் அல்ல; மணமகள் கற்பகம், அவன் காதலி! அவன் மனசைத் தேற்றிக்கொண்டு மீண்டும் உலவ ஆரம்பித்தான். தாறல் பிசுபிசுத்தது. தவளைகள் முனகின. மருத மரக் கிளையில் ஒரு கோட்டான் சிறகடித்துக் குழ றிக் கூவியது. எங்கிருந்தோ ஒரு கரு வண்டு கிர்ரென்று இரைந்து கொண்டு அவன் முகத்தில் மோதியடித்துக் கீழே விழுந்தது. 'சீ' என்று அவன் அதை உதறியடிக்கும்போது, அந்தச் சிரிப்புச் சத்தம் கேட்ட து. அவன் திரும்பினான். ஓடையோரமாக ரோட்டுச் சரிவில் பட்டுப் போய் மூளியாய் நின்ற மருத மரக் கிளைகள் குரக்கு வலித்த பைசாசக் கரங்களைச் சுருக்கி நிற்பதுபோலத் தோற்று மளி த்தது.