பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயை 12) என்ன பண்ணுவது? எப்படியும் கற்பகம். மேஜரான பெண்; அவள் இஷ்டப்படி யாரையும் திருமணம் புரிந்துகொள்ள உரிமை உண்டு. இருந்தாலும் அவளுக்கு மனத்திடம் குறைந் தால் -லை என்றெல்லாம் செல்லப்பாவுக்குப் பலவாறாகச் சிந்தனை ஓடியது . ஆகவே தினம் தினம் ஏதோ ஒரு ஆபத்தை எதிர் பார்ப்பது போல் அவன் விழித்தெழுவான்; காலைச் சூரிய ஓளியில் ஜன்னல் வழியே விழுந்து கிடக்கும் தினசரிப் பத்திரிகையைப் பரபரவெனப் புரட்டிப் பார்ப்பான், ஆனால், அவன் அதிவோ எந்த விதச் செய்தியைப் காணவில்லை. கடைசியில் கற்பகத்துக்கு அவளது பெற்றோர் குறிப்

  • பிட்ட திருமணத் தேதியும் வந்து போயிற்று. திருமணம்

நடந்தாலல்லவா செய்தி வரும்? ஒரு வேளை பெண் காணுமற் போன விஷயத்தை கமுக்கமாக மூடி வைத்திருக்கிறார்களோ என்று கருதினான் செல்லப்பா. இருந்தா லும் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் அமுக்? முடிய, :மா? 'கவன் எதுவுமே புரியாமல் திகைத்துக் கொண்டிருந்தாள். “என்ன? எப்ப பார்த்தாலும் இப்படி பிரம்மரமத்தி பிடித்த மாதிரியே இருக்கியளே, என்னோடே பேசப் பிடாதா?” என்று கற்பகம் ஒரு கப் காப்பியை நீட்டிக் கொண்டே அவன் பக்கம் நெருங்கி வந்தான், இந்தா பாரு, கற்பகம். நம்ம விஷயமா இன்னும் ஒண்ணும் தெரிந்த பாடில்லையே என்று தான் கவலை என்று ஆரம்பித்தான் செல்லப்பா.

  • “உங்களுக்கேன் அந்தக் கவலை? உங்களுக்கு நான் தானே

வேண்டும். நானே வந்தாச்சு என்று சொல்லிவிட்டு, சிரித்துக் கொண்டே. “ஒரு வேளை அதே முகூர்த்தத்திலேயே வேறு யாரையாவது பார்த்து திருமணம் நடத்தியிருக்க லாமல்லவா?” என்றாள் கற்பகம், அதைச் சொல்லிவிட்டு கற்பகம் கொல்லென்று சிரித்தாள். அயேனுக்கு நரம்புக் கால்களெல்லாம் சிலிர்த்தன .