பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயை 133 அவனுக்கு மீண்டும் தூக்கம் பிடிக்கவில்லை. புரண்டு"

  • புரண்டு படுத்தான், காலையில் அவன் எழுந்திருக்கும்

போது, சூரிய ஒளி அவன் முகத்தில் சுள்ளென்று உறைந். தீது. காபி சாப்பிடலாம் என்று அடுப்பங்கரைப் பக்க மாய்ப் போனான். அங்கு அவன் கண்ட காட்சி!... அடுப்பில் மதமதவென்று தீ எரிந்தது ; சட்டியில் வெந்நீர் கொதித்தது. எனினும் அடுப்பில் விறகு எரிய" வில்லை. கற்பகம் தன் காலைத்தான் நெருப்பில் தூக்கிப் போட்டு குளிர் காய்ந்து கொண்டிருந்தாள்! அவளது வலது கை நீண்டு வளர்ந்த கேச பாரத்தைச் சிக்கெடுத் துக் கொண்டிருந்தது. அந்தச் சிணுக்கு வலி; அது ஓர் எலும்பு; விலாவெலும்பு! அவன் பதறிப்போய், “கற்பகம்! என்று அலறி னான். அப்போது அவள் இடுப்பில் லேசாக வலி தோன் றியது. அவள் சிரித்துக்கொண்டே திரும்பினாள். என்ன இது! என்றான் அவன். "எது??? " நீ ஏன் அடுப்பில் காலைப் போட்டிருந்தாய்? 'அடுப்பிலா? தூக்கக் கலக்கத்தில் உங்களுக்கு அப் படித்தான் தோணும். ஒரு கப் காட்சி சாப்பிட்டுவிட்டு கண்களைத் திறந்து பாருங்கள் என்று சொல்லிச் சிரித் தாள். அந்தச் சிரிப்பு அவன் குடலை மீண்டும் உருவியது . "சிரிக்காதே, சிரிக்காதேன்னு எத்தனை தரம் சொல் றது?” என்று எரிந்து விழுந்து கொண்டே கூடத்துக்கு விரைந்தான். அவனுக்கு . எதுவுமே புரியவில்லை. திகைத்தான். இதெல்லாம் வெறும் மனப்பிரமையா அல்லது...