பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வென்றிலன் என்ற போதும்- லாமல் அழுதேன். திறந்து வைத்த நெஞ்சின் வழியாய்" கட்டிக்கிடந்த சோகமெல்லாம் பீறியடித்தது. அழுவதில் சுகமிருந்தது; அழுதேன். அம்மா, அம்மா! என்று தாதி அழைத்த குரல் கேட்டது. கண்ணைத் துடைத்தவாறே எழுந்தேன். பக்கத்தில் தாதி நின்று கொண்டிருந்தாள். அவளிடம் என்னவென்று கேட்கக்கூடத் தெம் பில்லை; கழுத்தை மட்டும் நிமிர்த்தி னேன். அவள் சொன்னாள்: “அர்ஜூன மகாராஜா வந்திருக்கிறார்.” அர்ஜுனரா? என்றேன், அதற்குள் அர்ஜுனனே வாசலில் வந்து நின்றார்.. வெற்றி விஜயனாக வந்த வெறியில் என்னை வந்து அணைந்து கொள்வார் என்று தான் நினைத்தேன், நானும் அவரை உற்சாகத்தோடு வரவேற்பேன் என்று தான் அவரும் எதிர் பார்த்திருப்பார், இரண்டும் நடக்கவில்லை. அர்ஜுனன் - 'வாசலிலேயே" நின்றார். முகத்தில் களை இல்லை;. ஆளை மயக்கும் புன்சிரிப்பு இல்லை. கர்ணனைக் கொன்ற களிப்பு இல்லை. நின்றார். நெடுமரம்போல் நின்றார். நான் அவர் பக்கம் சென்றேன், “'திரௌபதி, நீயும் அழுதாயா?... நான் தான் பாபி!>> என்றார் அவர். பகையை முடிப்பது பாபமா? என்றேன் , ('கண்ணன் களத்தில் உபதேசித்தது ஏன் என்று இப் போதுதான் புரிகிறது. கர்ணனைக் கொன்று விட்டேன். ஆனால் கர்ணன் என் அண்ணன்! “அண்ணனா?” என்று அலறிவிட்டேன் நான்.

  • 'ஆம், குந்திதேவியின் தலைப்புத்திரன், பிருதைக்கு

துர்வாச முனிவர் உபதேசித்த மந்திரத்தை விஷப்பரீட்சை செய்ததன் விளைவு கர்ணன். அவன் தேர்ப்பாகன் மகனல்ல;