பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வென் றிலன் என்ற போதும் - அர்ஜுனனின் மமதை கர்ணனின் 10 ைற ந வ ா டு மடிந்தே தீரும். திரெளபதி பாவம்! அவளும் கர்ணனே உள்ளத்தினுள்ளேயே, கொன்று விடவேண்டியது தான். குந்தியின் பாவம், திரெளபதியின் காதல், அர்ஜு னரின் கர்வம், தருமனின் மடமை, துரியனின் கவனம் - எல்லாம் கர்ணனின் மரணத்தோடு மாயவேண்டியவை தாம், கீதை உபதேசத்தைப் பெற்றவன் அர்ஜுனன்தான். ஆனால் கீதா போதனையின் கண்கண்ட சாதனைச் சாட்சி இந்தக் குருக்ஷேத்திரம்! குருசேத்திரத்தில் விளையாடியவர்கள் எல்லோரும் என்னுள் அடங்கியவர்கள். நானே ஆ ட் டு வி த் ேத ன், நானே ஆடினேன். கொன்றவனும் நான், கொல்லப்பட்டவனும் நான், இது தான் என் அலகிலா விளையாட்டு! அர்ஜுனன் கர்ணன் என் அண்ண ன்; என் எதிரி. இந்த உணர்ச்சியை என்னால் லகு வில் ஒதுக்கிவிட முடிவில்லை, காரண காரியங்களுக்கு மூலமான கண்ணனின் விளையாட்டு என்று - மானசீக பக்குவத்தோடு கர்ணனின் மரணத்தை விலக்கிவிடவும் முடியவில்லை. க.ர் ண ன் என் எதிரி. இளமை முதல் அவனைப் 29:கைத்தே வந்திருக்கிறேன். இருவர் கையிலும் வில்லேறிய நாளிலிருந்து ஒருவருக்கொருவர் விரோதி தான். இன்று நான் கர்ணனைக் கொன்று விட்டேன். எனினும் அவனை நான் வென்றதாகவே எண்ண முடியவில்லை,