பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் படை 33

  1. பவர்களும் எழுந்து நின்றவுடன், ஐ. பி. பிள்ளே நாறும்பூ

நாத பிள்ளையைப் பார்த்து “ “வாருங்களேன், போவோம் என்று அழைத்தார், “எங்கே?” என்று சுருக்கமாகக் கேட்டார் பிள்ளை.

  • 'பக்கத்துக் கடைக்குத்தான்" என்று பதில் வந்தது .

பிள்ளையவர்கள் கேட்டதே தப்பு என்று உணர்ந்து, நான் வருகிறேன் என்று கிளம்பி விட்டார். ஐ. பி. பிள்ளையும், பண்ணையவர்களும் ' வெறும் தொடை நடுங்க' என்று பிள்ளையவர்களுக்குப் பட்டம் சூட்டிவிட்டுத் தாமரைக் குளச் சரிவிலிறங்கினர். சில வருஷங்களுக்கு முன்னெல்லாம் திருவாளர் நாறும்பூநாத பிள்ளையவர்களின் தினசரி வாழ்க்கை இன் அறைக்குள்ள ஒரு சில சிறு மாறுதல்கள் கூடவின் றி எப்படி நடந்து வந்தது என்பது பலரும் அறிந்த விஷந்தான், பத்து வருஷங்களுக்கு முன்னால் என்றைக்காவது விடியற் எருக்கலில், மேலப் பாளையம் பனைமர உச்சிகள் உருக்காட் டும் வேளையில், திருநெல்வேலி, குறுக்குத் துறை ஆற்றுக் குள்ளிருக்கும் திருவுருமாமலைச் சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்கம் சென்றவர்களுக்கு நாறும்பூநாத பிள்ளையின் தினசரி வாழ்க்கை எங்கே ஆரம்பமாகிறது என்பது தெரிய வரும். மோஹினிப் பிசாசோ, மொட்டைப் பிராம்மணத் தியோ என்ற பயமும், ஐயமும் இன்றி, டாடிக்கட்டில் ஏறி வரும் அந்த வெள்ளை உருவத்தை நெருங்கிப் பார்ப்பவர் களுக்கு நாறும்பூநாத பிள்ளைதான் அப்படி ஈர வேட்டி யைப் போர்த்திக்கொண்டு வருகிறார் என்பது புலப்படும். மாதாங் கோயில் தெருவிலுள்ள தம் வீட்டிற்கும் குறுக்குத்