பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் படை சயிருந்தால் அதையும் முடித்துவிட்டு, கீழர தவிதி வழியே போய் சுவாமி நெல்லையப்பர் கோவிலும் சென்று; ஆறுமுக நயினாரைத் தரிசித்துவிட்டு, ஒத்தைமாடத் தெரு வழியே சென்று சந்திப் பிள்ளையார் கோயில் தீப தரிசனம் செய்து விட்டுக் கடைக்குத் திரும்பி வருவதற்குள் இரவு மணி எட்டு ஆகிவிடும். எட்டு மணிக்கு மேல் தான் அவர் கடையில் இரவு வியாபாரம் ஆரம்பமாகும். பட்டணத்தில் ஊத்தப்பம் என்று அருமையாய் அழைக்கப்படும் பொருளின் விஸ்ல! ரூபத்தான் பிள்ளையவர்கள் கடையில் தோசையாக விளங் கும். மேலும், கோசைக்குத் துணை நிற்கும் மிளகாய்ப் 'பொடி எண்ணெயின் கூட்டுறவால், எத்தனை தோசை களானாலும் சாப்பிடலாம் என்று தைரியம் உண்டாகும், எனினும் பிள்ளையவர்கள் கடையில் இரவு தோசையை விட, பக்கடா, சுக்கு வெந்நீர் இவைகளுக்குத் தான் சரி யான கிராக்கி. இரவு வெந்நீர்ப் பழையது சாப்பிடும் 'பேர்வழிகளுக்கு நாறும்பூநாத பிள்ளைக் கடை பக்கடாவைப் போன்ற வேறொரு தொடுகறி கிடைப்பது அரிது . ருசி யா: தெம், கணிசமாகவும் இருப்பதால், எத்தனை தட்டுக் களானாலும் விற்பனையாகிவிடும். பிள்ளையவர்கள் கடைச் சுக்கு வெந்நீருக்கு வாடிக்கைக்காரர்கள் 'ராமபாண(ன)ம்” என்று அழகாகப் பெயரிட்டிருந்தார்கள். காரணம் விஷக் குடிநீர்போல் காரசாரமாய் இருப்பதுடன், சாரணைவேர் கருடக்கொடி போன்ற மூலிகைகளும் சேர்ந்து தயாரிக்கப் படுவதால் உடம்புக்கு நல்லது என்று எல்லோரும் பிரிய மாய்ச் சாப்பிடுவார்கள். சுக்கு வெந்நீர் தீர்ந்து மண்டி யான பின்னுங்கூட வியாபாரம் குறையாது . சுக்கு வெந்நீர்த் தவலையைப் பிள்ளையவர் - ள் கழுவிக் கவிழ்த்து விட்டாரென்றால் அன்றைய வியாபாரமும் அத் துடன் முடிந்தது என்று அர்த்தம், பிறகு கடைக்கு நிழல் தரும் வண்ணம் தூக்கி நிறுத்திய மூங்கில் தட்டியை இறக்கி, கடையை மூடிவிட்டு, பக்கத்துக் கடையில் மருதை