பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் கதைகள் <இலவு சாப்பாடு அணா இரண்டு' என்று எழுதப்பட்ட விளம்பரப் பலகையும் ஏற்படலாயிற்று: காலக் கிரமத் தில் நாறும்பூநாத பிள்ளையவர்கள் கடையும் திருநெல் வேய்யிலு ள்ள மத்திய தர வகுப்பாருக்குப் பயன்படும் கிளப்பு கலரில் ஒன்றாக விளங்கவே, நாறும்பூநாத பிள்ளையும் Aaற்றவர்களைப் போல், தாமும் நடந்துகொள்ள வேண்டியது" தா விற்று . இரவு கடைக் கணக்கெல்லாம் முடித்துவிட்டு, வீடு வந்து சேர்வதற்குள் மணி பன்னிரண்டு ஒன்றாகிவிடும். வீட்டிலோ நெல்லை வடிவு ஆச்சி கொட்டு கொட். டென்று விழித்துக் கொண்டிருப்பாள். முன்னெல்லாம்" நல்லை வடிவு ஆச்சி அக்கம் பக்கத்து வீடுகளில் முறுக்கு சுற்றப் போய்விட்டு வந்த அலுப்பினால் , முன் தானையை பிரித்துக் கூடத்தில் படுத்து விடுவாள் . இப்போது அதற் கெல்லாம் வழியின்றி, 'முதலாளியின் வரவு, நோக்கிக். காத்திருப்பாள். பின் பிள்ளையவர்கள் சாப்பிட்டுவிட்டு வருவதற்கும் கந்தரனுபூதி ஏதேனும் சொல்வதற்கு மனசில் தெம்பும், திறனும் இருந்தால் சொல்லிவிட்டுப் 2.Jடுப்பதற்கும் நேரம் சரியாயிருக்கும். ஆதலால் முன்" (சோல அதிகாலையில் எழுந்து ஆற்றுக்குச் செல்லும் வழக்க மூம் படிப்படியாய் நின்றுவிட்டது. இப்போதெல்லாம் காலையில் எழுந்தவுடன் வெந்நீர் ஸ்தானம், காப்பி'. 3.3வகாரந்தான். கடைப் பையன் வந்து 'ஆறு மணிக்கே சாவியை வாங்கிப் போய்விடுவான். பிள்ளையவர்கள் சாவ தானமாய் ஒன்பது மணிக்கு ஈரச்சடையை உலர்த்திச் சிக்கலெடுத்தவாறே, கடைக்குச் செல்வார். வியாபாரத்தில் தலையெடுக் து பெரிய கைகளுடன் போட்டியிட முடியாத நிலைமையிலிருந்தாலும், தாமும் ஒரு முதலாளி என்ற மனப்பான்மை அவருக்கு வழக்கத்தில் தயறிவிட்டது , கடைப் பையன்களை அதட்டுவது, பட்டறை வியிலிருந்து கொண்டு சில்லரை களை வரவு வைப்பது, இரவு கடைப் பையன்கள் புடை சூழ்ந்து வழியனுப்ப வீடு சேர் வது, புத்திரச் செல்வம் இங்கிலீசு படிப்பது, நெல்லைவடிழ்ெ