பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் படை

அபூச்சி சமயம் கிடைத்த போதெல்லாம் 'முருகையாவுக்கும் தான் வயசாகலியா? நம்ப கண்ணு முன்னாலேயே ஒரு முடி போட்டு வைக்கக் கூடாதா? வீட்டிலேய,ம் என்னான்னு கேக்க துக்கு ஒரு மவராசி வேண்டாமா?' என்று கூறுவது- எல்லாம் சேர்ந்து தான் அவர் மனசில் முதலாளித்துவ மனப்பான்மையைச் சிருஷ்டித்திருக்க வேண்டும், ஆனாலும், இந்த முதலாளித்துவமும், பணப் பெருக்கமும் தம்முடை&; வாழ்க்கை முறையையும், தெய்வ பக்தியையும் ஓரளவு பாதித்திருக்கின்றன என்பதை அவர் உணரவில்லை, மேலும் திருநெல்வேலியில் தலையெடுக்கும் எந்த வெள்ளாளனுக்கும் பிராமணத் துவேஷம் ஏற்படுவதும் நாறும்பூநாத பிள்ளைக்கு மற்றொரு காரணம். இந்த முறையில் திருவாளர் நாறும்பூ நாத பிள்ளையவர்கள் தற்போது வீட்டில் வெந்நீர் ஸ்நானம் செய் வதன் காரணமாகக் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில் வலம் வருவதும், சந்திப் பிள்ளையார் கோயில் அந்தி தரிசனம் காண்பதும் அரிதாய் விட்டன. அதற்குப் பதில் குறுக்குத்துறையில் இவர் பேருக்கு செவ் வாய்க்கிழமைதோறும் அர்ச்சனை நடந்து விபூதிக் குங்குமப் உரீரஸாதம் வீடு தேடி வரும்; கடைப்பையன் வாரந் தவறா மல் சந்திப் பிள்ளையாருக்கு உடைத்து வரும் விடலைத் தேங்காயால், பிள்ளையவர்களுக்குப் பிள்ளையார் புண்ணியத் திலும் பங்கம் நேர்ந்து விடவில்லை; கருட தரிசனக் கட்டம் மட்டும் வேறொருவர் செய்ய முடியாத காரணத்தால் தாமே நேரில் செய்து வந்தார். மேலும், நயினார் குளக் கரை தம் கடைக்குப் பக்கத்திலேயே இருப்பதாலும், பட்டறையில் உட்கார்ந்திருந்த கடுப்புத் தீர உலாவ வழி கிடைப்பதாலும் பிள்ளையவர்களுக்கு கருட தரிசனம் மட்டும் தீரா வினையாக லபித்துவிட்டது, இப்படி இருந்துவருங் காலத்தில்தான் திருநெல்வேலி பெரிய கோயிலில் செய்ய முனைந்த கும்பாபிஷேக முயற்சி சுள் பிள்ளையவர்களின் தெய்வ பக்தியையும், ஜாதியப் மானத்தையும் சீர்தூக்கும் சோதனைத் துணையாக வந்து சேர்ந்தது. திருநெல்வேலியுறை செல்வர்களான சுத்த