பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் படை 51 அதற்குள், பட்டர்சாமி, "என்ன பிள்ளைவாள், அதென்ன அப்படிச் சொல்றேள்? உங்க தெய்வபக்தியும், ஆண்டவன் கிருபையுந்தான் உங்களை இவ்வளவு நல்ல நிலையிலே வச்சிருக்குன்னா! என்று விடாது முடுக்கினார். “நல்ல நிலை யென்னா? ஏதோ கடன் காட்சி இல்லேன்னு தான் பெருமைப் படணும். வியாபாரம் தான் அவ்வளவு ஓட்டமில்லையே! என்று சொன்னார் பிள்ளை, “ நீங்க சொல்றதும் ஒரு வகைக்கி சரி தான். ஆனாலும் இந்த மாதிரி இக்கட்டான வேளையிலே சாமி கடாக்ஷம் தான் வேண்டியிருக்கு” என்று விஷயத்தை நழுவவிடாமல், முளையைவிட்டுத் தூர விலகிப் போகாமல் சுற்றி வந்தார் தர்மகர்த்தா. காரியம் ஆக வேண்டும் என்ற ஒரே கார ணத்தால் ஏற்பட்ட தர்மகர்த்தாவின் கடவுள் நம்பிக்கை யைக் கண்டு பிள்ளையவர்கள் ஆச்சரியப்பட்டார். விடாக். கண்டர்களான பட்டர் சாமியும், தர்மகர்த்தா பிள்ளையும் நாறும்பூநாத பிள்ளையை மடக்குவதற்கு எமப் பிரயத் தனம் செய்தார்கள். பிள்ளைவாள், உங்க தெய்வ பக்தி ஊரறிஞ்சது. எனக்குத் தெரியாதா? என்றார் தர்மகர்த்தா , என்ன பிள்ளை வாள், எல்லாம் ஒங்க முகத்துக்கு நேரே சொல்லப்பிடாது. பாருங்க, உங்களுக்கு இருக்கிற முருக பக்தியிலே கால்வாசி கூட எனக்கு, இருக்கும்னா அது" சந்தேகந்தான் என்று தர்மகர்த்தா பிள்ளையை ஆதரித்துப் பிள்ளையவர்களை மடக்கினார் பட்டர். பிள்ளையவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பதில் சொல்ல வகை தெரியாமல் திகைத்தார். தர்மகர்த்தா பிள்ளையையும், பட்டர்சாமியையும் எதிர்ப்பது என்பது" காற்றிலே கை வீசிய கதையாய்ப் போய் விட்டது. இது' தான் சமயமென்று தர்மகர்த்தா பிள்ளை ஐம்பது ரூபாய் டிக்கட்டுப் புஸ்தகம் ஒன்றை எடுத்து, பிள்ளையவர்கள் முன்னால் வைத்தார்.