பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருதி பேதம் வருஷம் மாதம் தேதி-- எதுவும் எனக்கு ஞாபகமில்லை. எனினும், அந்த நாள் என் நினைவை விட்டுப் போக வில்லை, அநேகமாக, கல்லூரியில் பிடித்துக் கொண்டிருந்த காலமாய்த் தானிருக்கும், வைகாசி விசா கமென்று நினைப்பு, நண்பர் இல ேராடு திருச்செந்தூர் சென்றிருந்தேன் , மாலை மணி எட்டு இருக்கும், வசந்த காலம் தலை காட்டி விட்டாலும், புழுக்கம் குறையவில்லை. எனவே கல மண்டபத்தின் கதகதப்பில் வேகாமல் கடற்கரை மணல் மேட்டில் ‘காத்துக் குடித்துக் கொண்டிருந்தோம் , கடலுக்கு மேலே வான விளிம்புக்கு ஒரு பனை உயரப் பிரமை தந்து, கிருஷ்ணபக்ஷத்துப் பிரதிமைக் கலைமேலேறியது; பூர்ணி மையின் ம வுசை இழந்தபோதிலும் பிரகாசம் குறையவில்லை, உடம்புக்கு ஒத்தடம் கொடுத்தது , கடற்கரை உப்புக் காற்று. சரசரக்க பட்டுப் புடவை கட்டி அடிபெயரும் குமரியைப் போல கடலலைகள், உருண்டு வந்தன. அப்போதுதான் அந்த தேவநாதம் காற்றில் மிதந்து வந்தது. நாதஸ்வரக் கச்சேரியை தூரத்தில் இருளிலிருந்து கேட்பதில்தான் சுகமிருக்கிறது என்பதுதான்என் அபிப்பிராயம்.