பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருதி பேதம் 69

  • இனிமேல் தான் சார், அந்தப் பாழாய்ப் போ $3r

துன்பம் வந்தது. வடிவாம்பாளுக்கு அப்போது உடம்புக்கு மிகவும் முடியாமல் படுக்கையில் கிடந்தாள் வைத்தியர் களும் :க விட்டு விட்டனர், மரணப் படுக்கைதான். அப்போது எங்கள் இருவரையும் அழைத்து தம்பி, செல்லம்! 'கேளுங்கள். தம்பி உன் தந்தை வேல்சாமி" நாதசுரக்காரரும் உன்னைப் போலத்தான், அவரும் என்னைத் தன் அபிமான ஸ்திரீயாகத்தான் வைத்திருந்: தார். என்னைக் கோபுரத்தில் ஏற்றி வைத்து கும்பிடப்" போவதாகவெல்லாம் புகழ்ந்தார். அதிகம் வ ளர்ப்பா னேன், உன் தாயார்கூட, அவரிடம் அவ்வளவு விசுவாச, மாயிருந்திருக்க முடியாது. நான் தாசியானாலும் அவருக்கு, 'அவ்வளவு பக்தி சிரத்தையோடு பணிவிடை செய்தேன். ஆனால் அவரோ மறந்து விட்டார். ஒரு மாத காலத்தில்: வருகிறேன் என்று சொல்லிப் போனவர் அப்படியே போய் " விட்டார். அந்த வஞ்சனையின் புண் என் நெஞ்சில் இன்று தான் ஆறவேண்டும். நீ அவர் மகன்; செல்லம் என் மகள். அதனால் தான் அவர் செய்த வஞ்சகத்துக்கு உன்னைப்" பழி வாங்கினேன், நீ செல்வத்தை விரும்பியதும், இது" தான் சமயமென்று திட்டமிட்டேன். நீ கட்டிய மனைவி போல, செல்லத்திடம் நடந்து கொள்கிறாயே செல்லம் யார் தெரியுமா? உன் தங்கை!" என்று சொல்லிவிட்டு மறுகணம் கண்ணை மூடிவிட்டாள், < 'செல்லம் என் தங்கையா? தங்கையையா நான் கல்யாணம் செய்தேன்! ஒரே தகப்பனுக்குப் பிறந்து, குழந்தைகளா தம்பதிகளாக நடந்து கொள்வது?' இப்படி. யெல்லாம் என் சிந்தனை தட்டுத் தடுமாறிய து. அன்று முதல் என் மனம் நிம்மதியை இழந்தது. “ நானும் செல்லமும் ஒன்றாகத்தான் இருந்தோம். ஆனால், 'செல்லத்தை என்றாவது நெருங்கும்போது நான் கணவனாகவே நடந்துகொள்ள முடியவில்லை, மனசிலே ஏற்பட்ட கறை என் ஆண்மையையே சூறையாடிவிட்டது, பிறகு புத்திர பாக்யம் எங்கே?' என்று சொல்லி, மீண்டும்