பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனைத் தீ தாவத்தான் சொல்லிட்டுப் போனாக என்று சொல்லி விட்டு, மாடத்தியம்மா உலக்கையைப் பிடித்தாள். “சரிதான், கோயிலுக்குத்தான் போயிருப்பாக. நானுந் தான் போகனும், வரட்டுமா? என்று கூறிவிட்டு நடை மிறங்கினான், வீராசாமி. மாடத்தியம்மாவின் உலக்கைச் சப்தம் மீண்டும் படியிறங்கிய வீராசாமி, “அண்ணாச்சி கோயிலுக்கா போயிருப்பாரு? கோயில் குளத் தான் கடைக்குத்தான் போயிருப்பாரு!” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே நடையைக் கட்டினான். 2 கருப்பன் துறை சுடுகாட்டுப் பிராந்தியம். அந்தப் பிராந்தியம் முழுவதும் ஒரே பனங்காடு. ஆற்றங்கரையை ஓட்டிப் பிடித்தாற்போல் உயரமாக வளர்ந்து, கரையில் வேரோடி நிற்கும் மருத மரங்கள் தாமிரபருணி நதிப் (போக்கிற்கு பாரா கொடுப்பது போல் நிற்கும். பனங் காட்டு வரிசையைக் கடந்து விட்டால், விளாகத்துறையின் பக்கம் நாலைந்து மாமரங்கள் கொண்ட தோப்பும், அதை யொட்டிய துரவுகளும், குடிசைகளும், ரோட்டை யடுத் துள்ள கோயில் குளத்தான் சாராயக் கடையும், செங்கல் சூளையும் ஊழிக்குப் பின் முளைத்தெழுந்த உல கம் போல் புது மேனியுடன் நிற்கும். ஆற்றங்கரை யோரத்தில், மாந்தோப்புக்குச் சமீபமாக, சுடுகாட்டுப் பிராந்திய எல்லைக்குள் சின்னக்கல் கட்டிடம் ஒன்று தெரியும். முன் புறமும் மேல் புறமும் அடைப்பற்றிருக்கும் அந்தக் கட்டிடந்தான் சுடுகாட்டுச் சுடலைமாடன் கோயில், கருப்பன் துறைச் சுடலைமாடன் என்றால் அந்தப் பக்கத்து ஜனங்களுக்கு பயமும் பக்தியும் அதிகம். இருட் ர. க,-5