பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகு நாதன் கதைகள் ஆடியது, அதயெடுத்துச் சுடலையைக் கும்பிட்டான் அவன். உயர்ந்து உயர்ந்து செல்லும் கட்டை நாதசுரத்தின் விறு கவிறுப்பும், மேளதாளங்களின் ஸ்தாயியும் அவனை உலுப்பின; உணர்வை மறக்கச் செய்தன. பூசை முடித்துவிட்டுத் திரும்பிய பூசாரி எரிந்து ( கொண்டிருந்த கற்பூரத் தட்டை கட்டாரியிடம் நீட்டிட ஜன், எரிந்து கொண்டிருந்த கர்ப்பூரத்தை உள்ளங்கையில் வாங்கி வாயில் போட்டான். உடனே பூமி அதிரும்படி திங்கு திங் கென்று குதித்தார்... ஆரம்பித்து விட்டான் சுடலை குடி புகுந்துவிட்டான் என்று ஜனங்காெவ் லாம் கட்டாரியைக் கையெடுத்துக் கும்பிட்டார்கள். சுட்டாரி ஆடினான், சத்தமிட்டான், துள்ளினான், பாய்ந்தாள்! ஆடிக்கொண்டே கட்டாரி நடந்தான். நட்டு வைத்திருந்த பந்தம் ஒன்றை எடுத்துக்கொண்டு, கட்டாரி யரின் முன்னால் பூசாரி பின் காட்டி நடந்தான். சுடுகாட்டை நோக்கி ஆடிக்கொண்டே நடந்தான் கட்டாரி?, கொள்ளிவாய்ப் பிசாசு போல, பூசாரி அந்த ஒற்றைத் தீவட்டி.யை ஏந்திச் சென்றான், தீவட்டியின் ஒளி எல்லைக்குள்ளாக, படமெடுத்தாடும் கருநாகத்தைப் (மே..!ல் இருள் கவிந்து நிற்க, கட்டாரி பூதாகாரமாய் நடத்தான். தீவட்டிப் பந்தத்தின் அசைந்து அசைந்தாடும் மங்கிய ஒளியிலே, சுடுகாட்டு ஆலமரத்தின் தரையோடிப் பாய்ந்து நின்ற விழுதுக் கூட்டங்கள் ஒளியும் நிழலும் கொடுக்கும் பைசாச ரூபத்தோடு, தரை கீறிக் கிளம்பிய கூளிக்கணங் கள் களியாட்டம் ஆடுவதைப்போல் தோன்றின. இருள் சூழ்ந்த அந்தப் பிரதேசத்தில், மங்கிய ஒளி . கொண்ட புகைமூட்டம் இருளையும் விடப் பயங்கரமா யிருந்தது. கோயிலில் ஒலிக்கும் வாத்திய ஒலி மங்கி உள்வாங்கி ஒலித்தது. பக்கத்து மருத மரத்திலிருந்து சரசர வென்று