பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனைத் தீ &; இறங்கி, விகாரமாய் அழுதுகொண்டே குறுக்கே தாவியது ஒரு மர நாய். சாமி குடிகொண்ட கட்டாரி நடந்தான். பூசாரியும் கட்டr vரியும் சுடுகாட்டுக்குள் நுழைந்தனர், ' நாலைந்து பிணங்கள் கங்குதெறித்த விழ, எரிந்து கொண் டிருந்தன. மங்கிய செந்நெருப்புத் தழல் காட்டி, 57ரிந்து கொண்டிருந்த பிணத்தைக் கண்டு கா... து* கட்டாரியிடம் குடி கொண்ட சுடலை! ஈரம் காய்ந்து பொருக்காடிப் போ என சிதை மூட்டத்தை முஷ்டியால் ஓங்கி உடைத்தது சுடலை . ஓடாய்ப்போன மூட்டம் உடைந்து பிலவாய் போல் திறந்து விழுந்தது. சிலை, தயினுள் சுட்ட கத்தரிக்காயைப் போல், பிணம் கருமை யெய்தி கருகிக் கொண்டிருந்தது ? அடியிலே இளகி வடியும் கொழுப்பின் துர்நாற்றம் மெல் லிய புகைக் கொடியாக இழைந்து இளம்பிக் கொண்' டிருந்தது. ஆடிக்கொண்டே நின்ற சுடலை, உடைபட்ட பாகத் துக்கு நேராயிருந்த பிணத்தின் வயிற்றுக்குள் கூச்சலிட்டுக் கொண்டே இரண்டு கைகளையும் புலி நகம் போல் சொரு பக்கத்து ஆல மரத்தில் இரண்டு ஆந்தைகள் ஒன்றுக் கொன்று அடித்துச் சத்தமிட்டுக் கொண்டு சிறகடித்துக் கீழே விழுந்தன. தூரத்தில் எங்கோ குழி பறிக்கும் நரி பின் ஊளை சுடுகாட்டில் எதிரொலித்தது! சொருகிய விரல்களால் பிணத்தைக் குடைந்து: குடைந்து, உள்ளேயுள்ள குடலை உருவி இழுத்து, வாயில் வைத்துத் திணித்தது சுடலை! குடற்கொடி முழுவதும் "வாயினுள் செல்லாமல் மார்பிலும் கழுத்திலும் அடித்துப் போட்ட பாம்பைப்போல் சுற்றி விழுந்தன. ஆவேசம் தீராமல் உள்ளேயிருந்து. பிறாண்டி எடுத்த மாமிசத்தை, அரைகுறையாய் வெந்து பச்சை நெடி வீசும் பிண ஆமாமிசத்தை, வாயில் வைத்துத் திணித்தது. முகத்திலும்