பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனைத் தீ 'ஊட்டை சாமி ஏற்றுக் கொண்டது' என்ற திருப்தி யால் கற்பூரத் தட்டை உயர்த்தினான் பூசாரி. ஜனங்கள் கையெடுத்துக் கும்பிட்டனர்! கட்டாரித் தேவன் வாயிலிருந்து கொழுப்புக் கூழும் ,. கோழையும், நுரையும் வடிந்து கொண்டிருந்தன.. கருங் கல் போன்ற அவனுடைய தசைக்கோளங்கள் தளர்ந்து தொள தொளத்துக் கிடந்தன. உணர்வற்றுக் கிடந்த கட்டாரித்தேவன் வெகு நேரம்வரை எழுந்திருக்காத்தி லிருந்து, ஜனங்கள் கட்டாரியின் போதையை உணர்ந்து கொண்டார்கள்: அதன்பின் கட்டாரித் தேவனை வண்டியில் போட்டு போதை தெளியுமுன் வீடு கொண்டுவந்து சேர்த்தான் வீராச்சாமி. சேர்த்துவிட்டு, “ஒன்றுமில்லை. கிறக்கம், இன்னைக்கு அண்ணாச்சி பெரிய ஆட்டமில்லா ஆடிட்.டாக என்று மாடத்தியிடம் சொல்லிவிட்டுப் போனான் படுக்கையில் கிடந்த கட்டாரித் தேவனை மங்கிய விளக்கொளியில் பார்க்கச் சவம் போலவே யிருந்தது, மாடத்தி நெற்றியில் கை வைத்துட்? பார்த்தாள். நெற்றி கொதித்தது. உடம்பிலிருந்து கருகிய மாமிச நாற்றமும், சாராய வீச்சமும் கலந்தடித்தன . போதை தெளிந்து புரண்டு கொடுத்த கட்டாரி

  • 'சிறுக்கி, என்ன மா யிருக்கா? அப்படியே கடிச்சி முளுங்

கிறலாம் போலிருக்கு” என்று முணுமுணுத்தான். 'என்ன புலம்புதிய? உங்களைத்தானே. நானிருக்க து தெரியலெ என்று மெல்லக் கேட்டாள் மாடத்தி, தலை மயிரையும் நெற்றியையும் தடவிக் கொடுத்தாள்,