பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் கதைகள் றின் முன் மண்டியிட்டு அமர்ந்தான். பற்றி எரியும் வயிற் றின் காந்திலும், உடலிலுள்ள அனற்கொதிப்பும் அவனை அலைக்கழிக்க, படைச் சோற்றை அள்ளி அள்ளித் தின்றான். erலும்பும் கறியும் தெரியாமல் நறநறவென்று கடித்தான். முகுந்து எலும்புகள் முறுக்கு மாதிரி கடைவாயில் நொறுங் கின. எலும்புக் குழலுக்குள் இளகி நிற்கும் குறுத்துக் கோழை, வாய்க்கடை யோரம் வழிந்தோடிற்று. ஒரே பசி: ரத்தப் பரி! இன்று குடித்துச் சவித்தவுடன் முன்னிருந்த சுருட்டை எடுத்து தீப்பந்தத்தில் பற்றவைத்துக் கொண்டு ஆடினான். - Aqதிதாக வயிற்றினுள் சென்ற சாராயம் போதை எழுப்ப, தளரும் கால்களை அதிகம் கவன்றாமல் துள்ளித் துள்ளியாடி -50ன் கட்டாரி, ஜனங்கள் அவனைக் கையெடுத்து வணங்கினர். இசக்கி மட்டும் கும்பிடாமல் கையால் நாடியைத் தாங்கியவாறே அவனை வியப்புடன் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தாள் . வீராசாமியின் பாட்டும் சுற்றிச் சுற்றி இசக்கியிடமே வந்து நின்றது, போதை உச்சிக்கேறிய பின் கட்ட.ாரி தன்னிலை தவறி ஆடினான்; தடுமாடினான். திடீரென்று கொண்டா இசக்கியை! என்று கத்த ஆரம்பித்தான். ஆனால் நாக்கு சொல்லுக்கு வளையாமல் உள்ளிழுத்துச் சுருண்டது. கால் கள் ஒன்றோடொன்று பின்னி முடைந்தன, கண்கள் மேலேறிச் சொருகின. அப்படியே தொப்பென்று சாய்ந் தான்! ஆட்டபாட்டம் ஓய்ந்து சவமாய்க் கிடந்தான்! பூசாரி மீண்டும் சுடலைக்குப் பூசை பண்ணினான்.

  • சாமி toலையேறி விட்டது!' என்றனர் ஜனங்கள்,

பூசாரி ஏந்திய கர்ப்பூர ஒளியில் சுடலையின் உதட்டி லுள்ள வெள்ளைச் சுண்ணாம்புக் கீறலில் ஒரு சொட்டு பச்சை ரத்தம் இருந்தது!